பாகம் 2தவத்திரு குன்றக்குடி அடிகளார் -அவர்களின் கதை
19 வருடங்களுக்குப் பிறகு குன்றக்குடி மடாலயத்தின் பாராட்டு விழாவில் தன் நன்றியை தட்டி நீட்டி அழகாய் வளைத்து வைரமோதிரமாக்கி அணிவித்து தன் நன்றியை வெளிப்படுத்திக் கொண்டார்.
பூர்விக நிலம் மீட்கப் பட்டதால் அவனின் குடும்பம் மீண்டும் சொந்த கிராமம் மீண்டு, மீண்டும் விவசாயத்தை தொடர்ந்தது...
அந்த ஊரில் உள்ள குளக்கரை மரத்தடி விநாயகர் கோவில் ஒன்று இருந்தது.அங்கிருந்த குளத்தில் ஒரு நாள் யாரும் குளிக்க முடியவில்லை, தண்ணீர் எடுக்கவும் முடியவில்லை. அந்த அளவிற்கு பயங்கர துர்நாற்றம்!
சிறுவன் ரங்கநாதன் அதன் காரணத்தைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று காரியத்தில் இறங்கினான்.
இரு தெருநாய்களுக்கிடையே நடந்த சண்டையில் கடுமையாக காயம் பட்ட நாய் ஒன்று விநாயகர் காலாடியில் விழுந்து செத்ததால் அழுகி போய் கிடந்திருக்கிறது.
அகற்றி தூய்மையாக்கும் சேவையில் இறங்கிய ரங்கநாதனையும் அவனின் நண்பர்களையும் ஊர் மக்கள் பாராட்டினார்கள்.
அதன் பிறகு அந்த கோவில் பூசாரியானான்,சிறுவன் ரங்கநாதன்.ஒரு நாள் நடந்த பஜனை ஊர்வலத்தில் சிறுவன் அனுமார் வேடம் பூண்டு உண்டியல் ஏந்தி சென்று வசூலித்த பணம் விநாயகர் கோவிலுக்கு மூங்கில் கதவானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரம் என்ற கடியாபட்டியில் அண்ணன் கோபாலகிருஷ்ணன் தமிழாசிரியராக பணியாற்றினார்.அதே பள்ளியில் நம் ரங்கநாதனும் 1937 இல் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான்.
கோபாலகிருஷ்ணனின் முதல் மனைவி மூன்று வருடத்திற்குள் இறந்து போனாள்.மறுபடியும் நடந்த திருமணத்துக்குப் பிறகு வந்த இரண்டாவது மனைவியும் ஓராண்டுக்குள் இறந்து போனாள். வேறு வழியின்றி மூன்றாவது திருமணமும் நடந்தது.
அண்ணனின் மனைவிகளுக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு,மரணச்செலவு,மறுபடியும் கல்யாணச் செலவு என்று ஏற்பட்ட பல தொல்லைகள் நம் ரங்கநாதனையும் பாதித்தது. பல நாட்கள் வீட்டிற்கு தானே தண்ணீர் சுமக்கவும், சமையல் செய்யவும் நேரிட்டது.
இந்த கசப்பான அனுபவங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, "இனி நான் ஒரு போதும் என் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்.பிரம்மாச்சாரியாகவே இருப்பேன்" என்ற முடிவை எடுக்க, இந்த சம்பவங்களே காரணமானது.
பீடி பிடிப்பது, பொடி போடுவது,சினிமா பார்ப்பது,அண்ணன் தயாரித்து வைத்திருக்கும் வினாத்தாள்களைத் திருடிப் போய் நண்பர்களுக்கு வழங்குவது என்ற எல்லா அட்டகாசங்களும் செய்தான்,சிறுவன்.எவ்வளவு வேகமாக கெட்ட பழக்கங்களை கற்றுக்கொண்டனோ அவ்வளவு வேகமாக அந்த பழக்கங்களை விட்டும் விட்டான்.
தினமும் செய்திதாட்களைக் கூட படிக்காமல் நாட்டு நடப்புகளைப் பற்றி கொஞ்சம் கவலைப்படாத , சுயநல வாழ்வே சுகமானது என்று படித்த முட்டாள்களைப் போல இல்லாமல்...
மனசு முழுவதும் தூய்மையான துறவியின் எண்ணங்களால் நிரம்பி இருந்தாலும் ,நாட்டு நடப்புகளை அறிவதில் தீராத தாகத்தோடு இருந்த ரங்கநாதன் "ஜோதி கிளப்" என்ற வாசக சாலை போய் தன் அறிவுத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டான்.
அதற்கும் ஒரு நாள் ஆபத்து வந்தது.உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி என்றதோடு மட்டுமில்லாமல்,உறுப்பினராக சேர்த்துக் கொள்ளவும் மறுத்து விட்டார்கள்.
வேறுவழியின்றி தானே தன் சொந்த முயற்சியில் ,தன் நண்பர்கள் துணையோடு ஒரு படிப்பகத்தை திறந்து நடத்தினான்.
1924-இல் எழுதிய கணிதம் காலை வாறிவிட்டதால் தேர்ச்சி பெறமுடியவில்லை.இனியும் வீட்டுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்று வேலை தேடினான்.
அது இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம் என்பதால் இராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக கேள்விப் பட்டு ,அந்த இடத்திற்கு போய்ச் சேர்ந்தான்.
உங்களுக்கு வயது 17 தான் ஆகிறது .அடுத்த வருடம் வா என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.
அத்துடன் மேலும் ஓர் அதிர்ச்சி அவனிடம் ஊர் திரும்ப பணம் இல்லை.
வேறு வழி?
ஊர் வந்து சேர்ந்தான்-திருட்டு ரயில் ஏறி...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்..._ஆதிசிவம்,சென்னை.
"தவத்திரு குன்றக்குடி அடிகளார்" -அவர்களின் கதை-பாகம் 2
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com