ஒலிம்பிக் கிராமத்து குருவிக்காரன்.
26 வயது அபினவ் பிந்த்ரா சிங் ,28 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து போய், ஒலிம்பிக் துப்பாக்கி போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் சுட்டு வந்த செய்தி கேட்டு...
என் மனப் பறவை,பழைய வானத்தில் பறந்தது...
ஆப்பிள் பழத்தை எண்ணெய் சட்டியில் தான் சுட்டு அடுக்குவார்கள் என்று நினைத்த என் கால் சட்டை நாட்களில்...
வயல்வெளி வானத்தில் பறந்து கொண்டிருக்கிற பறவையை குறி தவறாமல் சுட்டு வீழ்த்திய அதிசயம் கண்டு ஆச்சரியக் குறியாய் நின்ற ஞாபகம் வந்து போனது.
"ஏற்கனவே சண்டிகாரில் ரூ 150 கோடிக்கு நிலம் வாங்கியிருக்கிறேன்.ரூ 200 கோடிக்கு ஓட்டல் கட்டி அந்த ஓட்டலுக்கு ஒலிம்பியன் என்று பெயரிட்டு அந்த ஓட்டலை என் மகனுக்கு பரிசளிப்பேன்",என்றார்,இந்த அபினவின் ஏழை அப்பா.
இந்த ஏழைக் குடும்பத்துக்குத்தான் இந்திய தனியார்,அரசு ,விளம்பர நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுப் பரிசுகளை வழங்கி, தங்களின் நாட்டுப் பற்றை ,போலி நாட்டுப் பற்றை கொட்டித் தீர்த்துக் கொள்கின்றன.
இந்த பாராட்டுகளையோ,பரிசுகளையோ இங்கு நான் குறை வர சொல்ல வில்லை.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளப் போன ஒரு ஏழை விளையாட்டு வீரர்,அந்த போட்டியில் கலந்து கொள்ள அரசு எந்த உதவியும் செய்யாததால், தன் சொந்த வீடு,நிலத்தை விற்று மேலும் பணம் கடன் வாங்கி இன்று வரை அந்த கடன்களை கட்டி வாழ்ந்து வரும் விளையாட்டு வீரர்களின் உண்மை இந்தியக் கதைகள் நிறைய இருக்கின்றன என்ற உண்மைகள்,உங்களுக்கு தெரியுமா?
விளம்பர நிறுவனங்கள் அபினவை விலைக்கு வாங்கி, தங்களின் விளம்பர பொதிகளைச் சுமக்கும் "விளம்பரக் கழுதை"யாக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கி விட்டன.
இது இப்படி இருக்க...
மற்ற நாடுகளோடு போட்டி போடுகிற அளவிற்கு ,விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க இந்த தனியார் விளம்பர,அரசு நிறுவனங்கள் இது வரை எடுத்த நடவடிக்கைகள் தான் என்ன?இனி தான் என்ன செய்யப் போகின்றன? என்பது தான் நம் முன் நிற்கின்ற கேள்வி...?
அதை எல்லாம் செய்யாமல்...
அதை விட்டு விட்டு செத்துப் போன பிணங்களுக்கு அலங்கார மரியாதை செய்வது போல் இல்லையா,
இந்த பாராட்டும் பரிசுகளும்...?
ஒலிம்பிக் விளையாட்டுகளில் சேர்த்துக் கொள்ளாத விளையாட்டான கிரிக்கெட் ரசிகர்களும் கொஞ்சம் சிந்தியுங்கள்!அந்த ஒற்றை விளையாட்டுக்கு மட்டும் அவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையா?
இது தான் அபினவ் பிந்த்ராவும் ,இந்தியர்களை,நம்மைப் பார்த்து, கேட்கிற கேள்வி! _ஆதிசிவம்,சென்னை.
ஒலிம்பிக் கிராமத்து குருவிக்காரன்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com