பாகம் 2 "தற்கொலை செய்து கொள்வது எப்படி?"
தற்கொலையை பிரெஞ்ச் சமூக விஞ்ஞானி மூன்று வகையாகப் பிரிக்கிறார்.
அகங்காரத்துடன் கூடியது(egoistic):
சமூகத்துடன் அவ்வளவாக ஒத்துப் போகாத,சமூகத்தின் வெளியே இருந்து கொண்டு,சமூகத்தின் துணையை நாடாமல் இருக்கிற கூட்டம்.இவர்களில் மணமாகாத ஆண்களே மற்றவர்களை விட அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் .
பிறர்நலம் விரும்புவர்(altruistic):
சமுதாயத்திற்காக எல்லாவற்றையும் தானம் செய்து நிர்கதியாக நிற்பவர்கள்.உதாரணம் சுதந்திர போராட்ட வீரர்கள்.
விருப்பம் ஈடேறாதவர்கள்(anomic):
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சிறிய சாதாரண ,நியாயமான ஆசைகள் கூட நிறைவேறு வதில்லை.அதனாலேயே தற்கொலை வழியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
சிறுவயதினர் (20 வயதிற்குள்) தற்கொலைக்கு முயல்பவர்கள்,அபாயம் குறைந்த பொருள்களையே பயன்படுத்துகிறார்கள். வெறும் கவனத்தை ஈர்க்கும் முயற்சி தான்.முழுமனதோடு சாக விரும்புவதில்லை.
20 வயதுக்கு மேல் 30 வயதுக்குள் தான் நிறைய தற்கொலைகள் நிகழ்கின்றன.இந்த வயதினர் தற்கொலைக்கு அபாயகரமான பொருட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.சாக வேண்டும் என ஆழமான நோக்கத்துடன் உறுதியாக செயல்படுகிறார்கள்.
அமெரிக்காவில் தந்தையில்லாத அல்லது தாய் இல்லாத குடும்பத்தின் குழந்தைகள் மிக அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
கம்யூனிச ஆட்சியின் கீழ் இருந்த ரஷ்யா பலநாடுகளாக சிதறியபோது,முதலாளித்துவ நாடுகளின் வற்புறுத்தலுக்கு இணங்க, தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றத்தால் அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
நகரங்களில் தான் தற்கொலைகள் மிகுதியாக நடக்கின்றன.
சிற்றூரிலிருந்து வேலைதேடி,நகரக் கவர்ச்சியை நம்பித் தமிழ் கிராம மக்கள் இடம் பெயர்கின்றனர்.வேலை எதிர்பார்த்த அளவு கிடைப்பதில்லை.மன உளைச்சல்,வீட்டைப் பிரிந்த தனிமை,மனச்சிதைவு,ஏனைய நகரவாசிகளுடன் ஒத்துப்போக இயலாமை போன்றவைகள் அவர்களைத் தற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன.
கலகலப்பாகவும்,வெளிப்படையாகவும் பேசுபவர்களிடம் தற்கொலை உணர்வு அதிகாரம் செய்வதில்லை.
எதையும் அழுத்தமாக மனதுக்குள் போட்டு பூட்டி வைப்பவர்களைத்தான் தற்கொலை எண்ணங்கள் கொல்லுகின்றன.
கட்டுக் கோப்பான குடும்பச் சூழல்களில் தற்கொலைகள் குறைவாக நிகழுகின்றன.சிதறிய குடும்பங்களில் தான் தற்கொலைகள் மிகுதி.
கூட்டுக் குடும்பம்,தற்கொலை எண்ணிக்கையை குறைக்கும்.
தற்கொலை,குற்றங்கள் பெருக்கம் அச்சமுதாயத்தின் கட்டமைப்பு சரியாக இயங்க வில்லை என்பதைத் தான் குறிக்கின்றன.
மொழி,இன,நாடு,சமுதாயம் எனக்கூட்டுணர்வு தமிழர்களிடம் குறைவு.
மொழி,இனம் தழுவிய ஏனையவற்றைப் போலத் தன்னலமே இல்லாத அல்லது குறைந்த பொதுநலத் தலைவர்கள் தமிழ்நாட்டில் தோன்றவில்லை அல்லது தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்குப் போதியவர்களாக இல்லை.இந்த வகையில் உருவாகிய தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒரே ஒருவர் பெரியார் ஈ.வே.ரா ஆவார்.காலப் போக்கில் தமிழகத்தில் இருந்த சாதி,மதம் அவற்றைச் சார்ந்த அரசியல் சிக்கல்களால் பெரியாரின்
இயக்க எல்லைகள் கூட எல்லோரையும் சென்றடையும் பான்மை பெற இயலாது போயிற்று.
இந்தியாவில் அமைந்த அரசியல் அமைப்பு பணக்காரர்கள் செல்வாக்கை அடியொற்றியே அமைக்கப் பட்டதாகும்.எனவே,இங்கே சம உடைமை அமைப்போ அல்லது பொதுவுடைமை அமைப்போ தோன்ற முடியவில்லை.தனிவுடைமை வாதமும் முதலாளித்துவ வாதமும் கொண்ட அமைப்பே இங்கே உருக்கொண்டது.இவற்றிற்குப் பணமே முதன்மை அடித்தளம்.
இந்தியாவில் பிற மாநிலங்களை விட ,தமிழர்களிடமே அதிக தற்கொலை உணர்ச்சி அதிகம் காணப் படுகிறது.தன் நாடு,தன் மொழி,தம் நாட்டவரை விட பிற நாட்டவனை ,பிற நாட்டுமொழி,பிற நாட்டைப் பற்றி உயர்வாக போற்றுகிற தாழ்வு மனப்பான்மை தமிழர்களிடையே மிகுந்து காணப்படுகிறது.
ஜான் வெல்ஸ் என்ற புகழ்பெற்ற அறப் போராட்ட வீரர்(1703-1791)தற்கொலை முயற்சியில் தோல்வியுற்று வாழ்வோரை திரும்பவும் தூக்கிலிட வேண்டும் என்று கூறுகிறார்.
கணவனின் உடல் வீட்டிலிருந்து சுடுகாட்டுற்கு எடுத்து வரும்போது மனைவியும் உடன் வருவாள்.மனைவி மகிழ்ச்சி நிறைந்தவளாகக் காணப்படுவாள்.வரும் போது வலது கையில் கண்ணாடியும்,இடது கையில் எலுமிச்சைப் பழமும் கொண்டு வருதல் வேண்டும்.சுடுகாட்டில் பத்து முதல் பன்னிரண்டு அடி ஆழ,நீள அகலமுள்ள குழியொன்று வெட்டப் பட்டிருக்கும்.அக்குழியில் கட்டைகள் அடுக்கப் பெற்று கணவனது
உடல் வைக்கப் பெறும்.பின்னர்ச் சிதை தீ மூட்டப் பெற்றுக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும்.
இந்திலையில் மனைவி தூய்மையாக நீராடி ஈர உடையுடன் வருவாள்.அங்குக் கூடியிருப்பவர்களுக்குள் தனக்கு மிக விருப்பமானவர்களுக்குத் தனது நகைகள்,பொருள்கள் போன்றவற்றைத் தருவாள்.
அப்பொருள்கள் நினைவு வழிபாட்டிற்கெனக் காக்கப் பெறும்.பின்னர் அச்சிதைக்குழியை ஒருமுறை வலம் வருவாள்.அதன் பின்னர்க் குழியில் பாய்ந்து உயிர் விடுவாள்.அவளை வலிந்து தள்ளியதற்கான குறிப்புகள் இல்லை.மனைவி தீயில் பாய்ந்த நிலையில் கூடியுள்ளவர்கள் விறகுக் கட்டைகளை மேலும் மேலும் போட்டு அவளை உயிரோடு மறைத்து விடுவார்கள்.கட்டையின் மேல் பீப்பாய் பீப்பாயாக நெய்
ஊற்றப்பெறும். தீக் கொழுந்து விட்டு எரியும்...
என்கிறார், 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராபர் டி நொபிலி என்னும் அறிஞர்.
ஆப்பிரிக்காவில் தற்கொலை எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளது.ஆப்பிரிக்கர்கள் எதனையும் இலேசாக எடுத்துக் கொள்ளுகின்ற மனப் போக்கினர், சமுதாயச் சிக்கல்கள் மிகுதியாக இல்லாதவர்கள்,இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றவர்கள்.
தற்கொலை தடுப்பு தினம் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
மென்மையானவர்கள் என்று சொல்லப் படுகிற பெண்களே அதிகமாக தீக் குளிப்பு வழி தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள்,தான் எழுதிய கடிதத்தில்,தன்னுடைய இந்த தற்கொலை செயலுக்கு எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறாள்.
ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களோ,அவர்களின் இந்த செயலுக்கு பிறரைத் தான் குற்றம் சாட்டுகிறார்கள்.
பெண்களின் தற்கொலை சாவுகளை விட இரண்டு மடங்காக ஆண்களின் தற்கொலைச் சாவுகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
படித்தவர்கள் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.படிக்காதவர்களிடம் கொலைகள் தான் அதிகமாக காணப்படுகின்றன.
படித்தவன் வன்முறையை தன் மீதே செலுத்திக் கொள்கிறான்.ஆனால் படிக்காதவனோ வன்முறையை அடுத்தவர்கள் மீது செலுத்துகிறான்.
நம் ஊரில் அரசே நடத்தும் தற்கொலை தயாரிப்பு நிலையமாக இயங்கி வரும் ஒயின்சாப் மாதிரி ,சப்பானில் நிறைய தற்கொலை அமைப்புகள் இயங்குகின்றன.தற்கொலை செய்து கொள்ள உதவும் இணையதளங்கள் கூட சப்பானிலிருந்து இயங்குகிறது.சப்பானிய அரசும் அதைப் பற்றிக் கவலைப் படுவதும் இல்லை.கண்டு கொள்வதும் இல்லை.
வளர்ந்த நாடுகளில் மனநல மருத்துவர்களை நாடுவது சாதாரணம்.ஆனால் இங்கோ அப்பழக்கம் அவ்வளவாக இல்லை.
தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் மென்மையானவர்களாகவே இருக்கிறார்கள்.நியாய உணர்ச்சிக்கு கட்டுப் பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.அன்புக்கு அடிமையானவர்களாக
இருக்கிறார்கள்.தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறார்கள்.எதை செய்தாவது, எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களோடு போட்டி போட முடியாமல்...
பொய்யான வாழ்க்கையை எதிர்த்து போராட முடியாதவர்களாக,சமரசம் செய்து கொள்ள முடியாத,சமாளிக்க முடியாத கோழைகளாக இறக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஒரு தடவையாவது தற்கொலைக்கு முயன்று இருப்பார்கள்.எப்படிப்பட்ட நபரின் வாழ்க்கையிலும் ஒரு தடவையாவது காதல் வந்து போயிருக்கும் என்கிறது வாழ்க்கை அனுபவ மொழி ஒன்று.
கண்ணுக்கு தெரிகிற,சற்றென்று தெரிகிற காரணமாக, மோசமான அரசியல் தான் முதன்மையான காரணமாகத் தெரிகிறது.
தேர்தலில் ஓட்டுப் போட பணம் வாங்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு யாருக்காவது ஓட்டுப் போடுவது...
எந்த ஓட்டையும் பதிவு செய்யாத பணக்கார படித்த மேதைகள்...
ஆண்களுக்கு சமம் என்கிற பெண்கள்,ஆண்களைப் போல இல்லாமல் ,நகையின் மேல் பைத்தியமாக இருக்கும் பெண்கள்...
வரதட்ணைக்கு எதிராக போராடாமல்,விவாகரத்து கேட்டு வழக்கறிஞரின் வீட்டுக்கு முன்னால் வரிசையாக நிற்கிற படித்த பெண்கள்...
அழகுக்கும்,பணத்துக்கும் முன்னுரிமை கொடுக்கிற அறிவான காதல்...
வேலைக்குப் போகிற பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள்கிற புத்திசாலி ஆண்கள்...
அழகுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க காட்டுகிற அக்கறையை,அறிவு வளர அக்கறை காட்டாத பெண்கள்...
நல்ல பழக்க வழக்கங்களை,இலக்கியங்களை கற்றுத் தராமல் வெறும், சுயநல புலிகளாய் வளர்த்து, பண வேட்டைக்கு பிள்ளைகளை தயார் செய்யும் பெற்றோர்கள்...
மனிதர்களை விட மதத்திற்கும் ,சாதிக்கும் இரத்த தானம் செய்யும் மனிதர்கள்...
தற்கொலைச் சாவுகளைப் போலவே ,அதற்கான காரணங்களும்
நீண்ண்ண்ண்ண்டு
கொண்டே தான் இருக்கின்றன... நாம் என்ன செய்யப் போகிறோம்...? _ஆதிசிவம்,சென்னை.
"தற்கொலை செய்து கொள்வது எப்படி?"- பாகம் 2
தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் மென்மையானவர்களாகவே இருக்கிறார்கள்.நியாய உணர்ச்சிக்கு கட்டுப் பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.அன்புக்கு அடிமையானவர்களாக
ReplyDeleteஇருக்கிறார்கள்.தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறார்கள்.எதை செய்தாவது, எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களோடு போட்டி போட முடியாமல்...
பொய்யான வாழ்க்கையை எதிர்த்து போராட முடியாதவர்களாக,சமரசம் செய்து கொள்ள முடியாத,சமாளிக்க முடியாத கோழைகளாக இறக்கிறார்கள்.- saaswathamaana unmai