
"ஞாபக மரம்"- கவிதை
காயத் தழும்புகளோடு
இயேசு
உயிரோடு வந்தார்...!
ஆச்சரியக் குறியாய்
மக்கள் கூட்டம்!
உங்களில் யோக்கியமானவர்கள்
இந்த தேவாலயத்திற்குள் நுழையலாம்
என்றார்
மறுநாளே
அந்த கிறிஸ்தவக் கோவில்
நிரந்தரமாக மூடப்பட்டது....!


அனாதைப் பிணம்
"ஈ" மொய்க்கும்
மனிதநேயம்!


என் மனப் பறவை
வாழ்க்கை வானத்தில்
மனசு வலிக்க
தேடி பறந்து கொண்டேதான்
இருக்கிறது....!
நீயும் நானும்
அமர்ந்து பேசிய
ஞாபக மரம்
வெட்டப் பட்டது
தெரியாமல்.....


_ஆதிசிவம்,சென்னை.
