"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Friday, September 26, 2008

"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 7(என் மொபைல் திரையில் பூத்தப் பூ!)

புரண்டு படுத்தால்
நாம் இறந்து போவோம்!
என்று
கருவில் இருந்தே
நமக்காக
தூக்கத்தைக் கூட
தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த சூரியன்...


"நம் அம்மா!"
பாகம் 7
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை

கொச்சியை விட்டுச் சென்ற செண்பகராமன், ரத்தின வியாபாரியைப் போல தலையில் பெரிய முண்டாசு தலைப்பாகை,பேண்ட்,கோட்டுடன் கள்ளிக்கோட்டைக்குச் சென்றார்.மன்னர் ஜாமரீனை சந்திக்க விரும்பினார்.

ஆனால் அங்கு மன்னரின் ஆட்கள் அவரை அவ்வளவு எளிதில் சந்திக்க அனுமதிக்க வில்லை.அவர்களுக்குள் சிறிது நேரம் வாக்கு வாதங்கள் கூட நடந்தன.

சிறிது நேரம் யோசித்த பிறகு ஒரு கடிதம் எழுதி ,அதில் ரகசியக் குறியிட்டு,அந்த கடிதத்தை மன்னரிடம் கொடுக்கச் சொன்னார்,நம் செண்பகராமன்!

மன்னர் ஜாமரீனுக்கும், ஜெர்மனிய இந்தியத் தீவிரவாதிகளுக்கும் இடையே நெருங்கியத் தொடர்பு இருந்ததால்,

உடனே ஜாமரீன் மன்னரைப் பார்க்க அனுமதி வழங்கப் பட்டது.மன்னர் மூலம் ஆங்கிலேயர்களின் கொடுமைகளை மேலும் விவரமாகத் தெரிந்து கொண்டார்,செண்பகராமன்.

பின்பு பம்பாய் சென்று,அங்கிருந்து மேற்கு அய்ரோப்பிய நாடுகள் வழியாகச் செல்லும் கப்பலில் மாறுவேடத்தில் ஜெர்மனிக்கு பயணமானார்.

ஜெர்மனிக்கு கிளம்பி வருவதை முன்கூட்டியே ஜெர்மன் நாட்டு யுத்த கேந்திரத்திற்கு தகவல் அனுப்பினார்.

ஜெர்மன் நாட்டு கடற்கரையில் கடற்படை இராணுவ உடையிலேயே கம்பீரமாகத் தோன்றினார், நம் செண்பகராமன்.

ஜெர்மன் போர்ப்படை ,தன் நாட்டு இராணுவ மரியாதை கீதங்களை ஒலிக்கச் செய்து மகிழ்ச்சியுடன் வரவேற்றது!

அடுத்து தலைநகர் பெர்லினில் இருக்கும் மன்னர் கெய்சரை சந்தித்தார்.அவரும் செண்பகராமனைப் பாராட்டி தனிப்பட்ட முறையில் பல உயர்ந்த பரிசுகளை அளிப்பதாக தெரிவித்தார்.

"மேன்மை தாங்கிய மன்னர் அவர்களே! உங்கள் பரிசுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!நீங்கள் அளிக்கப் போகும் அந்த பரிசுகள் எனக்கு வேண்டாம்!" என்றார்,செண்பகராமன்.

இதைக் கேட்ட இதர அதிகாரிகள் மன்னர் கெய்சர் வருத்தப் படுவாரே என்றெண்ணி செண்பகராமன் மீது சற்றே கோபம் கொண்டார்கள்.

"நான் போரில் நிகழ்த்திய செயல்கள் யாவும் என் இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தான்!ஆனால் இந்த ஜெர்மன் நாட்டிற்காக நான் ஒன்றுமே செய்யவில்லையே!என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என்றார்",நம் செண்பகராமன்.

"என் வீர இளேஞனே! உன் இந்தியா விரைவிலேயே விடுதலை அடையும் வாழ்த்துக்கள்!"என்றார் மன்னர்,அந்த மகிழ்ச்சி அங்கிருந்த எல்லோரையும் பற்றிக் கொண்டது.

இதற்கிடையில்...

சுமார் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன செண்பகராமன் தான் எம்டன் கப்பலில் ஏறி குண்டு போட்டவர் என்ற உண்மையை அறிந்தது,எம்டனில் இருக்கும் செண்பகராமனைக் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டிஷ் மேலதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பறந்தது.

செண்பகராமனின் திருவனந்தபுர வீட்டையும் போலீஸ் புலிகள் புகுந்து சோதனையிட்டன. ஒன்றும் கிடைக்க வில்லை!

இதற்கிடையில் இந்துமகாக் கடலின் தெற்கே கோக்கஸ் தீவில் எம்டன் கப்பல் ஆஸ்திரேலியாவின் ஸிட்னி கப்பலிடம் சரண் அடைந்த விஷயம் பிரிட்டிஷாருக்கு எட்டியது.ஆனால் கப்பலிருந்து கைது செய்தவர்களின் பட்டியலில் செண்பகராமனின் பெயர்
இல்லை.

பிரிட்டிஷ் போலீஸ் புலிகளுக்கு மண்டை காய்ந்தது!

எம்டன் புதுவையில் நின்ற செய்தி அறிந்து,புதுவை பிரெஞ்சு அரசு உதவியுடன்,புதுவை இந்தியத் தீவிரவாதிகள் தங்கி இருந்த இடங்களையெல்லாம் பிரிட்டிஷ் போலீஸ் சோதனை இட்டது.

இதற்கிடையில் எம்டன் கப்பலில் இருந்து இறங்கிய ஓர் இளைஞன் மீனவர்களை சந்தித்துப் பேசிய இரகசியத் துப்பு கிடைத்தது.அம்மீனவர்களை விசாரித்துப் பார்த்தார்கள்.அவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது எனத் தட்டிக் கழித்தனர்.

ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷார் செண்பகராமனை உயிருடனோ அல்லது பிணமாகவே கொண்டு வருபவர்களுக்கு உயர்ந்த தொகை வெகுமதியாக வழங்கப் படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது!

இந்த அறிவிப்பைக் கேட்டு ஆண்களை மயக்குவதில் கில்லாடியான இளம் நங்கை மதாஹரி என்பவள் துள்ளி எழுந்தாள்.

எல்லா மொழிகளையும் சரளமாகப் பேசும் ஒய்யாரி!மேல் நாட்டு இசைக்கேற்ப அரைகுறை ஆடைகளில் ஆடி பல மேல்நாட்டு தனவந்தர்களை தன் அடிமையாக்கியவள்.பிரிட்டிஷாரின் பேராதரவு பெற்ற இவள் ஒரு வேவுக்காரியாகவும் செயல்பட்டாள்.

இந்த பேராசைக்கார சாகசக்காரி ஜெர்மனியில் தங்கியிருக்கும் செண்பகராமனைத் தேடிச் சென்றாள்.

செண்பகராமன் ஓர் ஆடம்பரமான கிளப்பில் இருப்பதைக் கேள்விப்பட்டு செல்வ சீமாட்டியைப் போல நவநாகரீக ஆடை அணிந்து ,செண்பகராமன் முன்னால் அமர்ந்து தன் மோகப் பார்வையை செண்பகராமனின் மேல் அள்ளி வீசினாள்!

கிளப்பில் இருந்த மற்றவர்கள்,அந்த வேற்றுநாட்டு அரசிளங்குமரி தன்னை வந்து தீண்டமாட்டளா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள்!

ஆனால் செண்பகராமனோ வெறுப்புப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு கையில் மதுக் கிண்ணத்தையும், மறுகையால் செண்பகராமனின் கையையும் கோர்த்துக் கொண்டு,அங்கு ஒலித்த மேல்நாட்டு இசைக்கேற்ப உடலை வளைத்து நெளித்து அவரை மயக்க முயற்சித்தாள்!

தீவிர பிரம்மச்சாரியான செண்பகராமன் அவள் மீது கடுங்கோபப் பார்வை வீசிப் பார்த்தார்.

அந்த மாயக்காரி விடுவதாக இல்லை.மாயக்காரியான மதாஹரி சில வாலிபர்களிடம் மட்டும் கண்களை சிமிட்டி ஏதேதோ இரகசிய செய்திகளை பரிமாறிக் கொள்வதை செண்பகராமன் பார்த்துவிட்டார்.அவர்கள் அனைவரும் அவளைச் சேர்ந்த ஆட்கள்! இதில் ஏதோ சூது இருக்கிறது என்பதை வெகு எளிதாக கண்டுபிடித்து விட்டார்!

திடீரென்று மதாஹரிக்கு இணையாக ஆடினார். செண்பகராமனின் இந்த திடீர் போக்கை வாய் பிளந்து எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்து கொண்டிருக்கும் போதே,பாதி நடனத்தில் திடீரென்று அவளது பிடியை உதறிவிட்டு ,அங்கிருந்த அறைக்குள் வேகமாகச் சென்று மறைந்து போனார்,செண்பகராமன்.

நீண்டநேரமாகியும் அந்த அறையிலிருந்து செண்பகராமன் வெளியே வராமலிருக்கவே, சந்தேகப்பட்ட மாயக்காரி அந்த அறைக்குள் சென்று தேடினாள்.

அது சமயலறை. செண்பகராமன் அங்கு நுழைந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அங்கிருந்த சமையல்காரர்களும் வியப்படைந்தார்கள்.அப்படி ஒரு புது நபரை யாரும் பார்க்கவே இல்லை என்றார்கள்.

மாயக்காரி மதாஹரிக்கு முன்னால் மாயமானது எப்படி?

அந்த அறைக்குள் நுழைந்த செண்பகராமன் எவருக்குமே தெரியாமல் சில நொடிகளில் அங்கிருந்த உடைகள் மற்றும் விசேஷத் தலைப்பாகைகளை தனக்கு மாற்றிக் கொண்டு, கையில் சர்வரைப் போல வெளியேறிய இரகசியம் யாருக்கும் தெரியாது!

பிரிட்டிஷ் துப்பறியும் இலாகாவும்,ஸ்காட்லாந்து யார்டும் செண்பகராமனைப் பிடிக்க படுத் தீவிரமாக அலைந்தன.

1914 ஆகஸ்டில் தொடங்கிய உலகப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதாரவாக இந்தியர்கள் போரிட்டு உயிர் விட்ட செய்தியும், பலத்த காயங்களுடன் குற்றுயிராகக் கிடந்த மீதி இந்தியர்களைப் பார்க்க வந்த பிரிட்டிஷ் மன்னர் அய்ந்தாம் ஜார்ஜ் தனது பட்டத்து ராணியுடன் பார்வையிட்டு அனுதாபமாக பேசியதைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியர்கள் நம் அடிமைகள், அவர்களுக்கு நாம் கருணை காட்ட
தேவையில்லை. கொஞ்சம் இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள் என்று அவமானப் படுத்தி அசிங்கப் படுத்திய செய்தீ ஜெர்மனியில் இருந்த செண்பகராமனையும் எட்டிச் சுட்டது!

இந்திய ராணுவ வீரர்களுக்கு நெருப்புக் கங்கு செய்தியை அனுப்பி வைத்தார்.

"ஹிந்து வீரர்களே! பஞ்சாப் சிங்கங்களே!நீங்கள் அடிமையாக இருப்பதற்கு வெட்கப் படவேண்டாமா? உங்கள் சொந்த சகோதரன் தூக்கில் தொங்குகிறான்!....."

முழக்கம் உயரும்...


_ஆதிசிவம்,சென்னை.
Share/Save/Bookmark

Thursday, September 25, 2008

த.மு.எ.ச சிறுகதை போட்டி அறிவிப்பு


த.மு.எ.ச சிறுகதை போட்டி அறிவிப்பு


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் ‘கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி’! -நா. முத்துநிலவன் -

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், மாபெரும் எழுத்தாளரும், இங்கு எங்களுடன் பல்லாண்டுகள் வாழ்ந்து இரண்டாண்டுக்கு முன் மறைந்தவருமான கவிஞர் கந்தர்வன் அவர்களின் நினைவாக ஒரு பெரும் சிறுகதைப்போட்டியை நடத்திடத் திட்டமிட்டிருக்கிறோம்.

ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 11-09-2008 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
படைப்பாளியின் சொந்தக் கற்பனையாகவும் எதிலும் வெளிவராததாகவும் இருக்கவேண்டும். பக்க, உள்ளடக்க வரையறை இல்லை. நடுவர் குழுவால் தேர்வு பெற்ற கதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2.000கதைகளை அனுப்ப அஞ்சல்/மின்னஞ்சல் முகவரி:

நா.முத்து நிலவன்,
(மாநிலத் துணைப் பொதுச்செயலர்-தமுஎச),
96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,
மச்சுவாடி - அஞ்சல்,
புதுக்கோட்டை-622 004 - தமிழ் நாடு.
மின்னஞ்சல்:naamuthunilavan@yahoo.co.in
செல்பேசி: 94431-93293.

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --
நா.முத்து நிலவன், 96, சீனிவாச நகர் 3ஆம் தெரு, மச்சுவாடி அஞ்சல்,(தஞ்சைச் சாலை)செல்பேசி : 94431-93293புதுக்கோட்டை – 622 004 மின்னஞ்சல் : naamuthunilavan@ yahoo.co. .in
------- --------- --------- --------- --------- --------- --------- --------- -----
பெறுநர் : இணைய இதழ் நண்பர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் அன்பிற்குரிய நண்பர்க்கு, வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது. 2007இல், தங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் காட்டிய ஆர்வம் காரணமாக உலக அளவில் நல்ல ஆதரவு கிடைத்தது. வந்திருந்த 382 கதைகளில் 30க்கு மேற்பட்ட கதைகள் வெளிநாடுகளிலிருந்தே – மின்னஞ்சல் வழியாகவும், மண்ணஞ்சல் வழியாகவும் - வந்திருந்தன பரிசளிப்புவிழாவும் சிறப்பாக நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்தத் தலைவர்களோடு, பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும், திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் அவர்களும் கலந்து கொண்டு தேர்வுபெற்ற கதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகையை வழங்கியது மேலும் சிறப்பாக அமைந்திருந்தது. அதில் முதல்பரிசு பெற்ற “எச்சங்கள்” சிறுகதை பிரபல முற்போக்கு இலக்கிய இதழ் “செம்மலர்” மாதஇதழில் வெளிவந்ததோடு, தமுஎச நண்பர்களால் குறும்படமாகவும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.“கந்தர்வன் நினைவாக, த.மு.எ.ச.நடத்தும் சிறுகதைப்போட்டி-2007” அறிவிப்பை கடந்தஆண்டு வெளியிட்டுத் தந்தது போலவே இந்தஆண்டும் வெளியிட்டு, போட்டி விவரத்தினை உலகம் முழுவதும் உள்ள தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் தாங்கள் உதவவேண்டுமாய் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.. எனது மின்னஞ்சல் முகவரியினையும் தவறாமல் குறிப்பிடவேண்டுகிறேன்.வணக்கம். தங்கள் தோழமையுள்ள நா.முத்து நிலவன் இணைப்பு: தங்கள் இதழில் வெளியிட்டு உதவ வேண்டிய போட்டி பற்றிய அறிவிப்புக் குறிப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம,; கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.முதல் பரிசு ரூ.5,000 இரண்டாம் பரிசு ரூ.3,000 மூன்றாம் பரிசு : ரூ.2,000 மற்றும் தேர்வுபெறும் சிறந்த சிறுகதை ஒவ்வொன்றிற்கும் ரூ.250 பரிசளிக்கப் படுவதோடு, கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.இந்த ஆண்டு பரிசுத்தொகையை,பிரபல திரைக்கவிஞர் நா.முத்துக்குமார் வழங்குகிறார். விதிமுறைகள்:ஒருவரே எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.பக்க அளவும், கதைக் கரு தேர்வும் எழுத்தாளரின் கருத்துக்கேற்ப இருக்கலாம். கதை, தனது சொந்தக் கற்பனையே என்றும் வெளிவராதது என்றும் உறுதிதந்து, பெயரைத் தனித்தாளில் முகவரி, தொலைபேசி எண்ணுடன் தரவேண்டும். (கதைப் பக்கங்களில் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது)வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, கதைகளை அனுப்பலாம்.

சிறுகதைகள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் : 11-09-2008 சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

--------- --------- ------------ --------- --------- --------- --------- --------- -
நா.முத்து நிலவன்,(துணைப் பொதுச்செயலர் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,புதுக்கோட்டை – 622 004 செல்பேசி : 94431-93293 மின்னஞ்சல் : naamuthunilavan@ yahoo.co. in

------------------------------------------------------------------------------------
Share/Save/Bookmark

Monday, September 15, 2008

"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 6

பாகம் 6
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை


"யுவர் ஹானர்! இவர்தான் தங்களிடம் கூறியிருந்த எனது நண்பர் செண்பகராமன் பிள்ளை. புரோ இண்டியா பத்திரிக்கையின் ஆசிரியர்!" என்று அறிமுகப் படுத்தினார்.

செண்பகராமனும் கெய்சர் முன்பு சென்று இந்திய முறையில் சல்யூட் அடித்தார்.கெய்சரும் கையைக் குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் செண்பகராமனைப் பற்றி ஜூரிச்சிலுள்ள ஜெர்மன் கான்ஸலும் இவரைப் பற்றி முழு விவரங்களைத் தெரிவித்தார்.

"வீர இளைஞனே! உங்கள் இந்திய விடுதலை முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்!இந்திய ஆங்கிலேய ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் வெகு விரைவில் வந்தே தீரும்!" என்றார் கெய்சர்.

"மேன்மை தாங்கிய மாமன்னரின் எண்ணம்தான் இந்தியர்களின் எண்ணமும் கூட! ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்ட வேண்டிய காலம் நெருங்கி விட்டது. வெகுவிரைவிலேயே நாங்கள் வெற்றி பெறுவோம்!" என்று செண்பகராமன் உணர்ச்சியோடு கூறிய விதம் மன்னர் கெய்ஸரை மிகவும் கவர்ந்து இழுத்ததாம்!

செண்பகராமனின் தேசப் பற்று, புரட்சிகரமான துணிச்சலானப் பேச்சால் கவரப்பட்ட மன்னர் தனக்கு ஆலோசனைகளைக் கூறுபவராக அமர்த்திக் கொண்டார்.

ஜெர்மனியில் நடைபெறும் எல்லா அரசியல் விழாக்களுக்கும் செண்பகராமனுக்கு சிறப்பு அழைப்புகளும் அளித்தனர்.இதனால் அவருடைய பெயரும் செல்வாக்கும் பெர்லின் மற்றும் இதர இடங்களில் பரவியது.

மன்னர் கெய்சரின் வேண்டுகோளின் படி செண்பகராமன் இராணுவத்தில் ஒரு சாதாரண சோல்ஜராகச் சேர்ந்தார்.ஆனால் செண்பகராமன் ஜெர்மன் நாட்டுக் கடற்படையில் சேர விரும்பினார்.

ஜெர்மன் தனக்கென்று கடற்படையை அதுவரை உருவாக்கி இருக்க வில்லை. 1892 இல் தான் அதற்கான எண்ணம் செயல் வடிவம் பெற்றது.

பிரிட்டிஷாரின் போர்க்கப்பல்களின் விவரங்களை ஜெர்மனி துல்லியமாக அறிந்திருந்தது.ஆனால் பிரிட்டனோ ஜெர்மானியருடைய போர்க் கப்பல்களின் வல்லமையை அறியவில்லை.ஜெர்மனியக் கப்பல்களை பொம்மைக் கப்பல்கள் என்று கேலி பேசின.

ஜெர்மன் அரசோ தங்களது கடற்படை வலிமை வேறு எவருக்கும் தெரியக் கூடாதென்று தங்களுக்குள் ரகசியமாகவே வைத்திருந்தது.

கெய்சர் செண்பகராமனை கடற்படையில் சேர அனுமதித்தார். 1914 மார்ச்சில் செண்பகராமன் ஜெர்மன் கடற்படையின் கமாண்டர்களில் ஒருவரான வான்முல்லர் என்பவரின் கீழ் பணியாற்றத் தொடங்கினார்.தனது பொறி இயல் திறமையினால் வெகு குறுகிய காலத்திற்குள்ளேயே...


ஒரு சிறந்த கேப்டனுக்கு உரிய அத்தனை தகுதிகளையும் தானே வளர்த்துக் கொண்டார்.இதைக் கண்ட வான்முல்லர் செண்பகராமனைத் தனது நேரிடை உதவியாளராக நியமித்துக் கொண்டார்.

1914 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்...!

முதல் உலகப் போர் மூண்டது!அதில் ஜெர்மனியும் பிரிட்டனும் நேருக்கு நேர் கடுமையாக மோதிக் கொண்டன.

முதல் உலகப் போர் முதன்முதலாக மேற்கு அய்ரோப்பாவில் ஆரம்பமாகி அதுவே கொஞ்சம் கொஞ்சமாகக் கிழக்கு நாடுகளிலும் பரவியது.

இந்தியக் கடற்கரைப் பகுதியில் தாக்குதல்களை நடத்த எம்டன் கப்பலுக்கு பிரதம கமாண்டராக வான்முல்லர் பொறுப்பேற்றார்.அவருக்கு துணையாக நம் செண்பகராமனும் களம் இறங்கினார்!

இந்தியாவைத் தாக்க முற்படும்போது ,தன் ஆலோசனைக்கு உட்பட்டே தாக்குதலை தொடுக்க வேண்டும் என்றும் அவசியம் ஏற்பட்டால் எம்டனிலிருந்து தான் மட்டும் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு, மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பி வர அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்தார்,செண்பகராமன்.

கடற்படை அதிகாரிகளும் அவர் கேட்ட சிறப்பு அனுமதியை வழங்கினார்கள்.செண்பகராமனை சுமந்து கொண்டு எம்டன் கப்பல் தன் வெற்றிப் பயணத்தை துவங்கியது!

முதலில் சீனக் கடற்பகுதியில் சென்ற மார்க் கோனியா என்ற சரக்குக் கப்பலை வேகமாக துரத்தித் தாக்கி சரணடய வைத்தது. மார்க்கோனியா கப்பலோ எம்டன் கப்பலுக்கு நிலக்கரி சப்ளை செய்யும் கப்பலாக மாறிப் போனது!

எம்டன் கப்பலின் வலிமை தீயாய் எல்லா திசைகளிலும் பரவிக் கொண்டிருந்த சமயம்...

இந்தியாவிற்குள்,சென்னையை குறிவைத்து மிதந்து வந்தது எம்டன் தாக்கிய ஒவ்வொரு குண்டும் செண்பகராமனின் ஆலோசனைப் படியே வீசியெறிப்பட்டது!

பிரிட்டிஷாரின் ராணுவத்தைத் தாக்கி அழிப்பது, ஆயுத கிடங்குகளை குண்டுகள் போட்டு அழிப்பது, அதே சமயத்தில் இந்தியர்களின் உயிருக்கும் உடமைக்கும் எந்த விதத்திலும் சேதம் விளைவிக்காத பாதுகாப்பான தாக்குதல் என்பதுதான் நம் செண்பகராமனின் உள்நோக்கம்!

ஜெர்மன்- பிரிட்டிஷ் மோதலை இந்திய தீவிரவாதிகள் பெரிதும் வரவேற்று கொண்டாடினார்கள்! ஜெர்மன் நாட்டிலிருந்து ஆயுத உதவிகள் கிடைக்கும். அதைக் கொண்டு ஆங்கிலேயர்களின் கொட்டத்தை அடக்கலாம் என்று சந்தோஷப்பட்டார்கள்.ஜெர்மனும் ஆயுதங்கள் வருகின்றன என இரகசிய கடிதங்களை அனுப்பி வைத்து உற்சாகப்படுத்தியது!

சென்னையில் எம்டன் குண்டு போட்டதைப் பற்றி சிலர் வேடிக்கையான பாடல்களையும் தட்டிவிட்டனர்.

"எம்டன் விட்ட குண்டு...!
எரிந்த டாங்கி ரெண்டு...
விழுந்த பொணம் மூணு...!
அழுத பெண்கள் நாலு...!"

எம்டன் கப்பல் பாண்டிச்சேரி துறைமுகத்துக்கு சுமார் 3 மணிக்கு வந்து சேர்ந்தது.

எம்டன் புதுவைக்கு முன்கூட்டியே வர இருப்பதை இரகசியமாக அறிந்திருந்த வ.வே.சு அய்யர் பாரீஸ் நகரிலிருந்த மாறு வேடத்தில் அவசரமாக புதுவைக்குத் திரும்பினார்.

புதுவையில் இருந்த சுத்தானந்த பாரதி வ.வே.சு அய்யரிடம் ரகசிய ஒற்றராக இருந்தார்.தமிழ்,ஆங்கிலம்,தெலுங்கு,இந்தி,வங்கம்,பிரெஞ்சு,சப்பான் ஆகிய பல மொழிகளை நன்கு அறிந்தவர்.இதனால் வ.வே.சு அய்யர் இவரை புரட்சியின் தூதுவராக நாடெங்கும் அனுப்பி வைப்பார்.

இவரைப்போலவே ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளையும் மாறு வேடங்களைப் பூண்டு ஆங்கிலேயரின் திட்டங்களை அறிவதில் திறமைசாலி! ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் என்பரைக் கொன்ற கொலை வழக்கில் தலை மறைவாகிவிட்ட முக்கியக் குற்றவாளி!இவரும் வ.வே.சு அய்யரின் எண்ணங்களோடு இணைந்து செயல்பட்ட வீரர்.

சுத்தானந்த பாரதியும்,மாடசாமியும் அந்த இருட்டில் எம்டன் வருகைக்காக காத்திருந்தார்கள்.வந்து சேர்ந்ததும் நூலேணியின் உதவியால் கப்பலின் மேல் தளத்தை அடைந்தனர்.அங்கு இவர்களின் வருகைக்காகக் காத்திருந்த அந்த உருவம் இவர்களைக் கட்டித் தழுவி அன்புடன் வரவேற்றது!

அந்த உருவம் வேறு யாரும் அல்ல?

"நம் செண்பகராமன் தான்!"

"அந்த வீரத்தமிழன் தன் வீரத் தமிழிலில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தயாராகுங்கள்!" என்று முழங்கிய அத்தனை விவரங்களையும் வ.வே.சு அய்யரிடம் இருவரும் விவரித்தார்கள்.

சென்றது, மறுநாளில் தான் தங்கள் துறைமுகத்துக்கு வந்து போனது எம்டன் கப்பல் என்பதை அறிந்து அதிர்ந்தது,புதுவை அரசு!

எம்டன் போன திசையை மோப்பம் பிடித்து ,அந்த ஒற்றைக் கப்பலை மடக்க மூன்று கப்பல்களை ஏவியது,பிரிட்டிஷ் அரசு.

அதற்குள் காற்றை விட வேகமாக அந்த விஷயம் எம்டனைத் தொட்டது!

உஷாரான எம்டன் இந்தியாவின் மேற்கேயுள்ள அரபிக் கடலில் பிரவேசித்து லட்சத் தீவுகள் வழியே சென்று மறைந்தது!

1914 ஆம் ஆண்டில் எம்டன் கப்பலில் இருந்து இறங்கிய செண்பகராமன் திருவனந்தபுர கடற்கரையில் இறங்கிக் கொண்டார்.

அந்த சமயம் தான் இரண்டு மீனவர்களைச் சந்தித்தார்.உணர்ச்சி ததும்ப பேசிய பிறகு அம்மீனவர்கள் அன்புடன் தந்த ஆகாரத்தை மகிழ்ச்சியோடு உண்டார்.பதிலுக்கு அவரும் தெர்மாஸ் கூஜாக்களை பரிசாக கொடுத்து விடைப் பெற்றார்.முழக்கம் உயரும்...

_ஆதிசிவம்,சென்னை.


Share/Save/Bookmark

Monday, September 8, 2008

"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 5

பாகம் 5
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை


"அன்பார்ந்த மாணவ மணிகளே! இக் கல்லூரியில் என் அன்பு வளர்ப்பு மகனும் படிக்கிறான்...
அவனை உங்களுக்குத் தெரியுமா" என சாதாரணமாகத் தான் கேட்டார்.

யாருக்கும் தெரியவில்லை!

"நீங்கள் எல்லோரும் பிளாக் கண்ட்ரி ஸ்டூடண்ட்! பிளாக் இண்டியன் ஸ்டூடண்ட்! என்று கேலி செய்வீர்களே, அந்த மிஸ்டர் செண்பகராமன்தான் என் வளர்ப்பு மகன்!" என்றார்.

எல்லா மாணவர்களும் வெட்கப் பட்டு வேதனையோடு தலை குனிந்தபடி நின்றார்கள்.

மறுநாள் செண்பகராமனின் வருகைக்காக காத்திருந்த மாணவர்கள் அவரைக் கண்டதும் அன்புடன் கைகுலுக்கி வரவேற்றனர்.அதோடு மட்டுமில்லாமல் நீங்கள் ஸ்டிரிக்லாந்தின் வளர்ப்பு மகன் என்பதை முதலிலேயே ஏன் தெரிவிக்க வில்லை என்று அன்புடன் கடிந்து கொண்டார்கள்.

அதற்கு பிறகு அய்ரோப்பிய மாணவர்கள் செண்பகராமனிடம் காட்டிய அன்பு அலாதியனது!

1912 ஆம் ஆண்டு ஜீன் மாதம் செண்பகராமன் ஸ்விட்சர்லாந்து ஜூரிச் நகரிலேயே சர்வதேச இந்திய ஆதரவுக்குழு என்ற பெயரில் ஒரு ஸ்தாபனத்தை நிறுவி,"புரோ இந்தியா" என்ற ஓர் ஆங்கிலப் பத்திரிக்கையும் வெளியிட்டார்.

இந்தியர்களை ஆங்கிலேயர்கள் துன்புறுத்தும் அவலத்தை,வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவது, இந்தியாவிற்கு வெளியே சிதறிக் கிடக்கும் இந்தியர்களை ஒன்று சேர்ப்பது, இந்தியாவின் சார்பில் குரல் கொடுக்க முன்வரும் வேற்று நாட்டு முன்னணிப் பிரமுகர்களை கவுரவ உறுப்பினராகச் சேர்த்தல் என்பன போன்ற பல காரியங்களில் ஈடுபட்டார்.

செண்பகராமனால் இந்திய விடுதலைக்கான வெளிச்சம் வெளிநாடுகளிலும் ஆதரவாக குவிவதை,எழுவதை பார்த்து வெளிநாட்டவரும் வியந்தனர்!

அடுத்த சில மாதங்களில் ஸ்டிரிக்லாந்து செண்பகராமனை ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்கு கூட்டிச் சென்றார்.அங்குள்ள சர்வகலா சாலையில் சேர்ந்து அரசியல்,பொருளாதாரம், மற்றும் பொறியியல் கல்விகளைப் பயில ஏற்பாடுகள் செய்தார்.

கல்லூரி விடுமுறை நாட்களில் செண்பகராமன் பெர்லின் மற்றும் இதர நகரங்களுக்குச் சென்று இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களின் கொடுமைகளைப் பற்றி பீரங்கியாய் முழங்கி தள்ளினார்.

ஓர் இந்திய மாணவனின் நெருப்புப் பேச்சைப் பற்றி கேள்விபட்ட ,ஜெர்மனியில் இருந்த இந்திய தீவிரவாதிகள் செண்பகராமனைத் தேடி வந்து,நெருங்கிப் பழகி நண்பர்களானார்கள்.

ஜெர்மன் நாட்டில் செண்பகராமன் சந்தித்த இந்திய புரட்சியாளர்களுள் மாடம் காமா அம்மையார் என்பவர் மிகவும் முக்கியமானவர் ஆவார்.


1861 இல் பிறந்த திருமணமான மாடம் காமா அம்மையார் தம் 30 வயது வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை நேரில் கண்டறிந்தவர்.

மாடம் காமா அம்மையார் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலைமையை அறிய லண்டன் மற்றும் அமெரிக்கா,பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸூக்கும் சென்றார்.

ஏற்கனவே பாரிஸில் இருந்த பல இந்தியப் புரட்சியாளர்கள், அம்மையாரின் தீவிர சுதந்திர வேட்கையைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர்.

இந்திய கல்கத்தாவில் ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட்டு வந்த "வந்தே மாதரம்" பத்திரிக்கையை,தடை செய்யப் பட்டதை கருத்தில் கொண்டு "வந்தே மாதரம்" என்ற பத்திரிக்கையை ஜெனிவா நகரில் தொடங்கினார்.

பாரீஸில் இந்தியப் புரட்சியாளர்கள் ஏற்படுத்தி அபிநவபாரத் என்ற இயக்கத்தில் மாடம் காமாவும் உறுப்பினராகச் சேர்ந்தார்.அந்த இயக்கத்திற்கென ஒரு கொடியையும் தானே உருவாக்கினார்.

உங்களுக்குத் தெரியுமா?

அந்த மூவண்ணக் கொடிதான் நம் தலைக்கு மேல் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடிக்கு முன்னோ(கொ)டி என்று!

இக்கொடி முதன் முதலாக 1906 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 இல் கல்கத்தாவிலுள்ள பார்ஸி பகன்ஸ்கொயர் என்ற பூங்காவின் கொடிமரத்தில் ஏற்ப்பட்டதாகச் சிலர் கூறுவர்.இதற்கு முன்பே மாடம் காமா பாரிஸ் நகரிலும் பின்னர் ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெரிலினில் நடந்த சர்வதேசப் புரட்சியாளர்கள் மாநாட்டிலும் ஏற்றியதாகவும் கூறுவர்.

இக்கொடியில் மேலே சிவப்பு மத்தியில் மஞ்சள்,கீழே பச்சை நிறமும்,சிவப்பு நிறப்பட்டையில் எட்டு வெண்தாமரைப் பூக்களும்(அல்லி)மஞ்சள் நிறப்பட்டையில் வந்தே மாதரம் என்ற தேவநாகரி எழுத்துக்களும் நீலநிறத்தில் பச்சைப் பட்டையில் இடது பக்கம் வெண்கதிர் வீசும் சூரியனும் வலது பக்கத்தில் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டிருந்தன.

1909 ஆம் ஆண்டு 18 இல் ஜெர்மனியிலுள்ள ஸ்டட்கார்டு என்ற இடத்தில் பலநாட்டு புரட்சி வீரர்கள் சோஷலிஷ்ட் காங்கிரஸ் என்ற மாநாட்டைக் கூட்டினார்.அந்த மாநாட்டில் படபடக்கும் மூவர்ணக்கொடியோடு , பலத்த கோஷம் வானைப் பிளந்து எங்கும் எதிரொலிக்க கம்பீரமாக மேடை ஏறினார்கள்,நம் மாடம் காமா அம்மையார் அவர்கள்.


"வந்தே மாதரம்! பாரத மாதாவுக்கு ஜே!! வீரச் சகோதரர்களே,உங்கள் அனைவரின் முன்பாக அறிமுகப்படுத்தி பறக்க விடும் இந்த மூவண்ணக் கொடிதான், எங்கள் புண்ணிய பாரத தேசத்தின் சுதந்திரக் கொடி! என் பாரத தேசத்து வீரப் புத்திரர்களே!

இதர தேசத்து சகோதரர்களே! இந்தக் கொடிக்கு நீங்கள் எல்லோரும் எழுந்து வீர வணக்கம் செலுத்துங்கள்!" என்றார் வீராவேசத்தோடு.

மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் "வந்தே மாதரம்" என்ற பலத்த கரகோஷத்தோடு அக்கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்கள்.ஒவ்வொரு மாதமும் பாரீஸ் நகரிலிருந்த மாடம் காமா அம்மையார் அனுப்பிய வந்தே "மாதரம்,மதன் தல்வார்" பத்திரிக்கைகள் மற்றும் புரட்சி எண்ணங்களைத் தூண்டும் சிறு சிறு பிரசுரங்கள் இந்தியா, புதுவையிலும் பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்தியிருந்தன.

இந்தியாவுக்கு வெளியே, இந்திய விடுதலை வேட்கை ஜெர்மனி இந்தியர்களிடம் தான் தீவிரமாக பற்றி எரிகிறது என்பதை இந்தியர்கள்,நன்கு அறிந்தனர்.

செண்பகராமனும், மாடம் காமா அம்மையாரும் ஏற்கனவே ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு
அறிந்து வைத்திருந்தார்கள்.

விரைவிலேயே பெர்லினில் ஒரு கூட்டத்தில் இருவரும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அம்மையார் செண்பகராமனிடம் தனது அன்பையும்,ஆசியையும் கூறிப் பெரிதும் பாராட்டினார்.மேலும்,இந்தியாவைத் தவிர உலகில் பிற நாடுகளிலும் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் கொடிக் கட்டிப் பறப்பதை விவரித்தார்.

ஜெர்மானியர்களைப் போலவே, இந்தியப் புரட்சியாளர்களில் பெரும்பாலனோர் கெய்ஸர் மீசை மீது மோகங்கொண்டு தாங்களும் அது போலவே வைத்துக் கொள்வார்களாம்.மகாகவி பாரதியாரும் தனது முறுக்கிய மீசையை இது அஞ்சா நெஞ்சன் "கெய்ஸர் மீசை" எனப் பெருமையுடன் கூறி மேலும் முறுக்கிக் காட்டுவாராம்!

அந்நாளில் ஜெர்மனி நாட்டை சர்க்கரவர்த்தி இரண்டாம் கெய்ஸர் தான் ஆட்சி செய்தார்.அந்த கூராக முறுக்கேறிய கறுக்கு மீசைக்கு சொந்தக்கார, கெய்ஸர்!பார்வைக்கு கம்பீரமான போர்வீரனைப் போல இருப்பார்.நல்ல உயரம்.அதற்கேற்ற உடற்கட்டு!

ஜெர்மனிய இந்திய புரட்சியாளர் ஹர்தயாள் கெய்ஸரிடம் நெருங்கி பழகுபவர் என்பதைக் கேள்விப் பட்டு காமா அம்மையார் மூலம் லாலா ஹர்தயாளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்,செண்பகராமன்.

ஒரு நாள் அய்யா நான் ஜெர்மன் சக்கரவர்த்தி கெய்சரை அவசரமாகச் சந்திக்க வேண்டும் என்றார் செண்பகராமன், ஹார்தயாளிடம்.

கெய்ஸர் மாளிகையில் தீவிர கண்காணிப்பு இருக்கும். நிறைய விதிமுறைகள் இருக்கும் அவரை அவ்வளவு எளிதில் சந்திக்க முடியாதே எனத் தயங்கினார்,ஹர்தயாள்.

ஆனாலும் கூட்டிப் போய் அறிமுப்படுத்தினார்.


முழக்கம் உயரும்...
_ஆதிசிவம்,சென்னை.Share/Save/Bookmark

Friday, September 5, 2008

கண்களை மூடி உறங்கும் கவிதை,நீ!

கண்களை மூடி உறங்கும் கவிதை,நீ!

பெண் சிசுக்களை, பெண்ணே சுமந்து பெற்றாலும் பிஞ்சிலேயே நஞ்சைக் கொடுத்து கொல்லும் அதிகாரம் ஆண்களுக்கே சொந்தம் என்கிறது ,நம் வெட்கம் கெட்ட சமுதாய அமைப்பு.

பெண்ணும் கூட அந்த கொடுமைகளுக்கு உடந்தையாக இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறது, நம் பெருமை மிகு இந்திய சமுதாயம்!

ஆனால்...

எங்கள் உடல், எங்கள் உரிமை என்கிறது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் தொடங்கிய பெண்ணுரிமை இயக்கம்.பெண்களின் கருப்பை மீதான உரிமையை பெண்களே தீர்மானிப்பதாக இருக்க வேண்டும் என்கிறது,அந்த இயக்கம்!

வாழ்த்துவோம்!!

உங்களுக்குத் தெரியுமா?

மேக்-அப் போட்டே காலம் தள்ளும் பெண்கள் தான் தூங்கும்போதும் கூட, ஆண்களை விட அழகாக தூஙகுவார்களாம்!

பெண்ணை வர்ணிக்கும் கவிஞர்கள், கவிதைகள் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்!
_ஆதிசிவம்,சென்னை.
Share/Save/Bookmark

வெப்சைட் வேட்டை! collection of website address()


வெப்சைட் வேட்டைhttp://www.spywareterminator.com/

http://www.allmy-faves.com/ (set ur browser's home page )

http://www.facesearch.com/ (face only)

http://www.free.grisoft.com/(anti virus)

http://www.threatfire.com/ (anti virus)

http://www.myeverydaypage.com/ (set ur browser's home page)

http://www.snaboy.com/ (password recover, free software)

http://www.penzu.com/ (online diary)

http://www.ilocker.org/ (text locker,password protection )

http://www.ekko.tv/ (video,audio, text chat)

http://www.getnetwise.org/ (internet safety tips)

http://www.keyxl.com/ (short cut keys)

http://www.vidtomp3.com/ (i-pod, mobile phones audio, video converter)

http://www.hellotree.com/ (upload, share ur family photos)

http://www.kidzui.com/ (download free kid's internet browser)

http://www.printdriver.com/ (universal document converter)

http://www.cryptcd.com/ (download free software? CD password maker)

www.gimp.org/windows (photo shop, image editing)

http://www.flash-slideshow-maker.com/

http://www.starfall.com/ (online english teacher for kids)

http://www.printablepaper.net/ (set print paper background)

http://www.zoho.com/ (online office)

http://www.in.maps.yahoo.com/ (map in tamil)

http://www.tineye.com/ (same photo search)

http://www.news.googles.com/ (news in tamil)

http://www.im_history.com/ (download software, save chatting message)

http://www.moneycontrol.com/ (share market update)

http://www.investopedia.com/ (share market update)

http://www.irctc.co.in/ (railway ticket booking )

http://www.pancard.net/ (income tax, id card)

http://www.passportapplication.in/

http://www.aangilam.blogspot.com/ (online english teaching, in tamil)

http://www.adsense.com/ (create advertisement link for earn money)

http://www.bidvertiser.com/ (creat advertisement link for earn money)

http://www.cj.com/ (create advertisement link for earn money)

http://www.futureme.org/ (e mail sending date setting)

http://www.adrive.com/ (online files storage)

http://www.isobuser.com/ (CD files recover)

http://www.rememberthemilk.com/(reminder)

http://www.yourgmap.com/ (map maker)

http://www.yourli.st/ (free e mail reminder)

http://www.media-convert.com/ (file converter)

http://www.samsar.com/ (file convert)

http://www.iconv.com/ (file convert)

http://www.fileinfo.com/ (file convert)

www.google.com/mapmaker

http://www.errorkey.com/ (computer error finder)

http://www.medipedia.com/ (medi encyclopaedia)

http://www.beware.com/ (download free software? hardware,software manager)

http://www.acoustica.com/ (down load free cd/dvd writing software)

http://www.nero.com/ (down load free cd ,dvd writing software)

http://www.ntius.com/ (free cd,dvd writing software)

http://www.roxio.com/ (free cd,dvd writing software)
http://www.parieware.com/ (free popup window stopper)

http://www.lavasoftusa.com/ (spyware stopper, free software)

http://www.freegabmail.com/ (video email)
http://www.springdoo.com/ (video email)

http://www.azoocamail.com/ (video email)

http://www.voice-me.com/ (video email)

http://www.ccleaner.com/ (unwanted files cleaner)
www.zabkat.com/x2lite.htm (one window files manger)

http://www.tastespotting.com/ (cooking)

http://www.ticketkaran.in/ (online booking)

http://www.indiantemples.com/

http://www.thepaperboy.com/ (online papers)

http://www.umapper.com/ (map maker)

http://www.hairol.com/ (hair colour matching)

http://www.passpup.com/ (pass word maker)

http://www.splashup.com/ (photo, image edit, save)

http://www.safeweb.norton.com/ (safe website? report alert)

http://www.appstick.com/ (pen drive's softwares)

http://www.fumpr.com/ ( photo, image super fast upload, save)

http://www.passwordchart.com/ (pass word maker)

www.nkprods.com/ncleaner (files manager, unwanted file cleaner)

http://www.picviewr.com/ (slide show maker)

http://www.samfind.com/ (create ur online website address book)

http://www.privnote.com/ (safe e mail )

http://www.photofunia.com/ ( photo fun)

http://www.good-tutorials.com/ (html, photoshop...ex)
http://www.remime.com/ (online reminder)

http://www.orbitfiles.com/ (online files storage)

http://www.uploadway.com/ (online files storage)

http://www.mailbigfile.com/ (send big size file)

http://www.hotlinkfiles.com/(online file storage)

http://www.mturk.com/ (online earning)

http://www.tamilhindu.com/

http://www.lettermelater.com/ ( email sending date setting)

http://www.timecave.com/ (email sending date setting)

http://www.dailyme.com/ (paper news alert)

http://www.howjsay.com/ (english pronounce)

http://www.classicmagic.net/ (magic tutor)

http://www.fightingmaster.com/ (fight tutor)Share/Save/Bookmark

Monday, September 1, 2008

"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 4பாகம் 3
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை


"ஓணான்,பல்லி, பூச்சிகளைப் பிடித்துத் திரியுமே அந்த அரைப் பைத்தியம் கூடவா,போகப் போகிறாய்?" என்று மிரண்டாள் அம்மா.

அவரை பற்றி தனக்கு தெரிந்த உண்மைகளைச் சொன்னான்,ராமன் தன் அன்னையிடம்.

பேச்சோடு பேச்சாக ராமனின் இந்த விபரீத ஆசையை,அவனின் அப்பாவிடம் பக்குவமாக தெரிவித்தாள்.

திடுக்கிட்ட ராமனின் அப்பா அதட்டிக் கேட்டால் எந்த விவரமும் வெளிவராது என்பதால்,தன் கோபத்தை மறைத்து,உண்மையான அக்கறையோடு விசாரித்த பிறகு...

உடனே தன் உயிர் நண்பன் பள்ளிச் சரித்திர ஆசிரியர் செரியனிடம் போய் நம்பாமல் அந்த அரைப் பைத்தியத்தைப் பற்றி விசாரித்தார்.

"அந்த அய்ரோப்பியரின் நடை உடைகளைப் பார்த்து தப்புக் கணக்குப் போட வேண்டாம். அவர் ஒரு பெரிய படிப்பாளி,விஞ்ஞானி,பேரறிஞர்! உங்கள் மகனை அவர் தன்னுடன் அழைத்துச் செல்வது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை!"என்றார் செரியன்.

மனநிறைவடைந்த சின்னசாமி தன் மகன் ராமனுடன் ஸ்டிரிக்லாந்தைக் காணச் சென்றார்.

கண்ணாடி ஜாடியிலுள்ள ஜீவராசிகளைப் பற்றி குறிப்பெழுதிக் கொண்டிருந்த ஸ்டிரிக்லாந்து நிமிர்ந்தார்.

"அய்யா!, நீங்கள் இங்கு வருவதற்கு முன்,உமக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்!" என்று ஸ்டிரிக்லாந்து கேட்டதும் இருவரும் திடுக்கிட்டார்கள்.

"உங்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும் என்று ஆச்சரியமாக கேட்டார்",ஏட்டு சின்னச்சாமி.

"நீங்கள் குற்றவாளிகளைப் பற்றி எப்படி துப்பறிகிறீர்களோ,அது போல தான் என் தொழில் என்றார்",சிரித்தபடி.

"அப்படி என்றால் தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்,சின்னச்சாமி.

"அய்யா! நான் உங்கள் மகனின் ஆப்த நண்பன்!அவன் வருங்காலத்தில் என்னை விட சிறப்பாக வருவான்.அவனை ஓர் உன்னத புருஷனாக உயர்த்திக் காட்டுவேன்,இது உறுதி!" என்றார்

அந்த பேச்சைக் கேட்டு சின்னசாமிக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது!
உடனே உணர்ச்சிவசப்பட்ட சின்னசாமி ஸ்டிரிக்லாந்தின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு "தன் மகனையும்,அவனது எதிர்காலத்தையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்றார்,உருக்கமாக.

"அய்யா! இது வரை இவன் உங்கள் மகன்.இந்த நிமிடம் முதல் அவன் என் மகன்.அவனைப் பற்றிய கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.

ஆனால் ஒரு நிபந்தனை...!

உங்கள் மகன் ஜெர்மனிக்கு போகிற விஷயம் சிறிது காலம் வரையில் உமது உறவினர்கள்,வெளிநபர்கள் யாருக்கும் தெரியக் கூடாது" என்றார்,ஸ்டிரிக்லாந்து.


ஏட்டு சின்னசாமியும் "சரி" என்றார்.

"சின்னசாமி! போலீசைக் கண்டுதான் ஜனங்கள் நடுங்குவார்கள்.ஆனால் அதே போலீஸ் உன் மகன் செண்பகராமனை பார்த்தால் நடுங்கிப் போவார்கள்" என்று ராமனின் ஜாதகத்தைப் பார்த்து எப்போதோ சொன்ன,அடிக்கடி வரும் சோதிடரின் வாக்கு ஏனோ ராமனின் அப்பாவிற்கு அப்போதும் வந்தது.

ராமன் பயணத்திற்கு தயாரானான்.அதே சமயம் தன் நண்பனின் குடும்பத்தினரும் பத்மநாபனை ஜெர்மனுக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை கவனித்தனர்.

செண்பகராமனும் பத்மநாபனும் தங்கள் தங்கள் தகப்பனாருடன் திருவனந்த புரம் கடற்கரைக்கு வந்தனர்.

சிறிது நேரத்தில் தன் வழக்கமான அசிங்கமான அநாகரிகத் தோற்றத்தோடு,கையில் பெட்டி படுக்கையுடன்,கிளி ஒன்று அடைக்கப்பட்ட கூண்டையும் கூடவே கொண்டு வந்து சேர்ந்தார்,ஸ்டிரிக்.

"இந்தக் கூண்டுக்கிளியைப் பார்த்ததே இல்லையே?" என்று ஆவலுடன் கேட்டான்,நம் ராமன்.

"வரும் வழியில் இதை வைத்திருந்த முரடன் குச்சியால் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.அதனால் தான் விலை கொடுத்து வாங்கி வந்து விட்டேன்," என்றார்.

"அப்படியானால் இதனை உங்களுடன் ஜெர்மனிக்கு கொண்டு போகப் போகிறீர்களா? இல்லை!" என்று அப்பொழுதே அந்த கிளியை பறக்க விட்டார்.

சுதந்திர வானில் நீச்சல் அடித்தது அந்த கிளி!..பிரிட்டிஷாரின் கொடுமையிலிருந்து விடுவித்து,தன்னோடு அழைத்து செல்லும் மகிழ்ச்சியை அவனுக்கு உணர்த்த தான், அதை விலைக்கு வாங்கினாராம்,ஸ்டிரிக்.

அந்த வாயில்லா ஜீவனிடம் காட்டிய அன்பைப் பார்த்து தன் மகனும் அவரிடம் பத்திரமாக இருப்பான் என்று மனம் மலர்ந்து போனார்.

கண்ணீரும் அழுகையும் புலம்பலுமாக விடை பெற, அவ்விருவரோடு ஸ்டிரிக்லாந்தையும் சுமந்து கொண்டு புறப்பட்டது, அச்சிறு நீராவிக் கப்பல்...

அக் கப்பல் இலங்கையிலுள்ள கொழும்புக்கு வந்து சேர்ந்தது.

1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 இல் என்.ஜி.யார்க் என்ற ஜெர்மானியக் கப்பல் மூலம் இத்தாலிக்கு வந்தனர்.

செண்பகராமனைக் கேட்டு பக்கத்து கிராமத்தார்களும்,நண்பர்களும் நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.போலீஸ் தான் எங்கேயோ கடத்திப் போய் இருக்கிறது என்று திடீரெனக் கிளம்பிய புரளி போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டது.மேலதிகாரிகளும் செண்பகராமன் காணாததைப் பற்றி புகார் செய்தனர்.

இந்த காணாமல் போன விஷயம் சூறாவளியாய் திருவனந்த புரத்தையே புரட்டியடித்து.

ஒரு வெளிநாட்டு நாடோடியுடன் இரண்டு இந்திய சிறுவர்கள்,அதே நாடோடியுடன் ஜெர்மனிக்குச் செல்லும் கப்பலில் சென்ற விட்டார்கள் என்ற ரகசியக் குறிப்பு வந்ததும், தீவிரமாக துப்புத் துலங்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.

விரைவிலேயே அந்த நாடோடி ஸ்டிரிக்லாந்து என்றும், அவருக்கும் செண்பகராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதையும்,அந்த நாடோடி ஜெர்மனி நாட்டு உளவாளி என்பதையும் (நாட்டை விட்டே போன பிறகுதான்) வெற்றிகரமாக கண்டுபிடித்தது!போலீஸ்.

ஸ்டிரிக்லாந்து உளவாளி என்று கேட்டதும் அந்த அரைப் பைத்தியக்காரனை நம்பி மோசம் போனோமே என்று கலங்கிப் போனார்,ராமனின் அப்பா.

போலீஸ் மேலதிகாரிகள்செண்பகராமனைப் பற்றி அவனின் அப்பாவிடம் பகிரங்கமாக விசாரித்தனர்.

"தன் மகனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் ,சில காலமாகவே தனக்கும் அவனுக்கும் பேச்சு வார்த்தைகள்,ஒற்றுமை சீராக இல்லை. அவனைப் பற்றிய தகவல்கள் தனக்கு எதுவுமே தெரியாதென" மவுனம் சாதித்தார்.

இனி மகனை தொடர்பு கொள்ளவே முடியாது .அது ஒன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்ற அதிர்ச்சியான உண்மை செண்பகராமனின் அம்மாவை தாக்க, படுத்த படுக்கையானாள்.மகனின் நினைவாகவே இருந்து 1912 ஆம் ஆண்டு உயிரையும் விட்டாள்.குடும்ப விளக்கு அணைந்ததது.குடும்பமே இருண்டது!

கப்பல் பயணத்தின் போது ஸ்டிரிக்லாந்து தன் அநாகரீகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டார். பெரும் பணக்காரர்கள் அணியும் மேநாட்டு உடைகள்,தலையில் மடிப்புத் தொப்பி இவற்றுடன் படுமிடுக்காகக் காட்சி அளித்தார்.அந்த உருவில் அவரைக் கண்டதுமே செண்பகராமனுக்கு வியப்பாக இருந்தது.எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

அவர்கள் இத்தாலியை அடைந்தனர்.அங்குள்ள நேபிள் நகரிலுள்ள பிரபல பெரிலிஸ்ட் லாங்வேஜ் காலேஜில் புதிய மாணவராகச் சேர்ந்தார்.இக்கல்லூரி பிறநாட்டு மொழிகளை வெகு எளிதில் பயிற்றுவிக்கக் கூடியது.

செண்பக ராமன் புது மாணவன் என்பதால் "பிளாக் கண்டரி ஸ்டூடண்ட்","ப்ளாக் இண்டியன் ஸ்டூடண்ட்" என் கேலி பேசி ராக்கிங் செய்தனர். செண்பகராமனுக்கோ பெரிய அவமானமாக இருந்தது!

அன்றொரு நாள் ஸ்டிரிக்லாந்து வேறு வேலையாக பெரிலிஸ்ட் காலேஜ் பக்கமாகச் செல்ல நேரிட்டது.காலேஜுக்கு வெளியே இருந்த சில மாணவர்கள் ஸ்டிரிக்லாந்தைக் கண்டதும் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்தினார்கள்.

முழக்கம் உயரும்...


_ஆதிசிவம்,சென்னை.

Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics