"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, October 2, 2009

♥ மனிதன் .....! ♥

"மனிதன் .....!"
சிறுகதை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf1D8o0uyFi6fvwqYHDrwwIFmVnlI8EOHJkQ9yqQUZo1yY1bpVjNi72riDx75rt40FLno92kTbLnsAn_OlL8iOgy2hiPJtyVGCQGaCbGtwC3ja2bP6WjY9Z5MjURE86Z4S-qtcdJteD9U/s320/autorickshaw.jpg

செ
ன்னை...

அந்த ஆட்டோவில், அந்த கர்ப்பிணி பெண், வலி,சிணுங்கல் கொஞ்ச கொஞ்சமாக அதிகமாகவே, வெட்கத்தை விட்டு அழவே ஆரம்பித்து விட்டாள்!

அதற்கு மேல் வண்டியை வேகமாக விரட்டினால்...பயணம் சுகமாக இருக்காது, என்பதால் நிதானமான வேகத்தில் என் ஆட்டோவை விரட்டினேன்.

பிரசவ வலி தான் மனித வலிகளிலேயே மிகவும் கடுமையான வலி!
இதை மென்மையானவள் என்கிற பெண் தான் தாங்கிக் கொள்கிறாள்.

ஆனால் ஆணாதிக்க உலகம் என்னடா வென்றால் ஆண் தான் வலிமையானவன் என்கிறது.

மரணம் என்பது ஆணுக்கு ஒரு முறை தான் வருகிறது.

ஆனால் பெண்ணுக்கோ மரணம் குறைந்தது இரண்டு முறையாவது வந்து போகிறது, பிரசவம் என்கிற பெயரில்...

தாயின் பிரசவத்தில் பிறந்து, தானும் ஒரு குழந்தையை பெற்றுப் போட்டுவிட்டு, அற்ப ஆயுளிலேயே உயிரை விட்டு காற்றில் கரைந்து போகிற பெண்கள் ஏராளம், ஏராளம்!

ஆணை விட பெண்ணே குழந்தை பெற்றுக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்களாம்.

இந்தியா போன்ற ஜனத் தொகை மிகுதியான நாட்டில், இந்த பொட்டைங்களுக்கு இந்த மாதிரி புத்தி தேவையா? என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன் .

யாரோ ஒரு அமைச்சரோ, முதல்வரோ அந்த வழியாக போகிறார்கள் என்பதால் போக்குவரத்தையே நிறுத்தியிருந்தார்கள்......

http://topnews.in/healthcare/sites/default/files/pregnancy_1.jpg

மிருகங்களுக்கு
மனித மனங்களை படிக்க தெரிகிறதோ இல்லையோ. கெட்ட எண்ணங்களை சுமந்து அலைகிற மனிதர்களை கண்டால் ஒதுங்கிக் கொள்ளும்.
தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் முத்தமிழன் என்றாலும் அவர் கை பட்ட எதையும் அவர் வீட்டு நாய் சாப்பிடுவதே இல்லை என்ற உண்மை, உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? "கறை பட்ட கை என்பதாலோ?" முத்தமிழனுக்கு வயது, "அரசு வேலை பார்க்க இனி தகுதியில்லை உனக்கு வயதாகி விட்டது நீ வீட்டுக்குப் போகலாம்" என்று வீட்டுக்கு அனுப்புகிற 60 வயதோடு 20 வயதை கூட்டிக் கொள்ளுங்கள். அது தான் நம் முதல்வர் முத்தமிழனின் வயது. இன்று ஒரு விழாவில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்தார்.அவர் வீட்டு நாய் இருக்கும் பகுதிக்கு இவர் தான் போனார். அவர் வீட்டு நாய் அலட்சியமாய், கேவலமாய் ஒரு பார்வை பார்த்தது விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டது. முத்தமிழனுக்கு பயங்கர கோபம் வந்தது. போயும் போயும் நாயிடமா நம் கோபததைக் காட்டுவது என்று அடக்கிக் கொண்டார். "நாய் கூட சண்ட போடுறீங்களே இதில யார் நாய்,யார் மனுசன்னே எனக்குத் தெரியல" என்று சரியாகத் தான் திட்டுவாள் முத்தமிழனின் மனைவி. "நான் வெளியில போகும் போது, இந்த சனியனை என் கண்ணில காட்டாதீங்கன்னு நான் எத்தன தடவை சொல்லியிருக்கேன். இந்த வீட்ல யாருக்கும் அறிவில்ல" என்று சப்தமாக கத்தினார். "நாய் இருக்கிற பகுதிக்கு நீங்களா தான் போனீங்க. நாய் உங்ககிட்ட வரல". வீட்டுக்குள்ளிருந்து முதல்வரின் ஆறாவது மனைவி கிண்டலாக, நமட்டுச் சிரிப்போடு சொன்னாள். விழாவுக்கு நேரம் நெருங்கியதால் நம் முத்தமிழன் தன் பங்களா வீட்டு வாசலில் வந்து நின்று எல்லா வீடுகளிலிருந்து ஏதாவது ஒரு தலையாவது தெரிகிறதா என்று சுற்றும்முற்றும் பார்த்தார். ஒரே ஒரு காக்கை மட்டும் இருந்தது.அதுவும் கூட இவரை கண்டுகொள்ள வில்லை! பாத்துக்குங்க நான் தான் இந்த தமிழ்நாட்டுக்கே (அய்ந்து வருஷ ராஜா.அப்புறம் என்னங்க, அடுத்த தேர்தலில வெற்றி பெற்றால் தானே இவர் முதல்வர் பதவியில் மீண்டும் நீடிக்க முடியும்?)ராஜா அப்படின்னு காட்ட நெனச்சார், யாரும் பாக்கல வருத்தத்தோடு வண்டியில் ஏறி உட்கார்ந்தார். பூனைப் படை பாதுகாப்போடு முதல்வரின் ஊர்வலம் ஆரம்பமானது... "ஊழல் பெருச்சாளிக்கு கறுப்பூனைப் படை பாதுகாப்பு!" போகிற வழியில்..... 80 வயதில் 18 வயது இளைஞனைப் போல சுறுசுறுப்பாக இயங்கும் சூரியனே! உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம். இப்படிக்கு கூமுட்டைத் தொகுதி தறுதலைகள் என்று கலர் கலராக சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்...
jhon.jpg image by mokkaimhokan வாகனங்களின் வரிசை நீளமானது...! அந்த கர்ப்பிணிப் பெண் பெரிதாக அலற ஆரம்பித்து விட்டாள்! "நான் சொல்றத மட்டும் யாரும் எதுவும் கேள்வி கேக்காம செய்யுங்க..!" என்றேன். அந்த பெண்ணின் கூடவே வந்த கணவன் கால் பக்கம் பிடிக்க, நான் தலைப் பக்கம் பிடித்து தூக்கினோம்.அந்த பெண்ணின் தாய் முதுகுப் பக்கம் பிடித்துக் கொண்டாள். அந்த பெண்ணை நடுச்சாலையில் உட்கார வைத்தேன். வெயில் சூடு ஆரம்பிக்கிற நேரம். சட்டென்று என் சட்டையை கழற்றினேன்.ஓடிப் போய் என் ஆட்டோவில் இருந்த இன்னொரு காக்கி நிற சட்டையை சாலையில் விரித்து, அந்தப் பெண்ணைப் படுக்க வைத்தோம். செய்தியறிந்து எங்களின் மூன்று தலைகளோடு மக்கள் கூட்டம் சேர்ந்து முப்பது தலைகளானது. காவல்துறையினரும் நெருங்கி வந்தனர். "இங்க என்ன இவ்வளவு கூட்டம்?" என்று கேட்டார் காவல்துறை அதிகாரி ஒருவர். "முதல்வர் வருகிற நேரம் ஒரமா போங்க,இல்ல நான் கடுமையா நடந்துக்க வேண்டியிருக்கும்.முதல்ல அந்த முதல்வர் போகட்டும்.அப்புறந்தான் யாரா இருந்தாலும் போக அனுமதிக்க முடியும்" என்றார். "இந்த பெண் இப்ப செத்துப் போய்ட்டான்னு வைச்சுக்குங்க, மீண்டும் உயிர் தர முடியுன்னு உங்க அதிகாரத்த வைச்சு,இல்ல, அந்த முதல்வரால தான் செத்துப் போன பிறகு உயிர் பிழைக்க வைக்க முடியுமா? முடியுமுன்னா சொல்லுங்க. நாங்க ஓரமா காத்திருக்கோம்... மக்களை பாதுகாக்கத் தான், அவருக்கு முதல்வர் பதவி,உங்களுக்கு வேலை,இந்த சீருடை" என்று ஆவேசமாகத் தான் வார்த்தை வெளியில் வந்து வெடித்தது! "இப்ப என்னை என்னா பண்ணச் சொல்றீங்க?என்றார்" காவல் துறை. சாலையின் மறுபக்கம் இந்த ஆட்டோவ போக விட்டா போதும் அந்த பெண்ணை மருத்துவ மனையில் சேர்த்திருவேன் என்றேன்,நான். யாரிடமுமோ அந்த காவல்துறை அதிகாரி, தொலைபேசியில் தொடர்பு கொண்டார். "இங்க வர பத்து நிமிடமாகுமா, நன்றி!" என்று இணைப்பைத் துண்டித்தார். "நீங்க சாலையின் மறுபக்கம் போகலாம், ஆனால் சீக்கிரம்....!" என்று அடுத்த கட்டளையை பிறப்பித்தார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhK1uhBBF2zPVn3UTX0d-7Yq9zlGS3rKTLaEXnpCJSvoI3d2OGkR2Px4K-8ZGbMz8gHXLKcly9c-B7VFjx91nDgvt1WVcT3YtQTuV4KAJZNEoCzNXFecmrhJlk5N8Nc_KAf3q83UtPj_0/s400/auto.jpg

மருத்துவமனையில் சேர்த்து வாசல் வரை வந்து விட்டேன். யாரோ பின்னால் ஒடி வருவதை உணர்ந்து, திரும்பினேன். அந்த கர்ப்பிணிப் பெண்ணின் தாய் மூச்சு வாங்க என்னை நோக்கி, ஓடி வந்து கொண்டிருந்தாள். "தம்பி! உன் பெயர் என்னப்பா?" என்று கேட்டாள். சொன்னேன். "என் பேரப் பிள்ளைங்களுக்கு உம் பேர தான் வைப்பேன். நான் ஒரு உயிருக்கு மட்டுந்தான்ப்பா தாய் , ஆனா நீ ரெண்டு உயிர காப்பத்துன்ன தாய்!" என்றாள். என்னால் ஆட்டோவை ஓட்டமுடிய வில்லை. திரும்பிப் பார்த்தேன். அந்த தாய்க் கிழவி, தன் சேலைத் தலைப்பால் ஒரு கையில் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,இன்னொரு கையால் நான் போகிற திசைப் பக்கம் டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள், நெடுநேரம்... என்னால் எதிரில் வரும் வாகனங்களை சரியாகப் பார்க்க முடியவில்லை. எல்லாம் மங்கலாகத் தெரிந்தது.ஓர் ஓரமாக வண்டியை நிறுத்தினேன். என் கண்களில் கண்ணீர் மழை...!

_மனிதன்.

http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg







https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_p2TtwooHorAYxGOnnMUWLREOpTUt8hluvRpKggNfmoKXpPpFq-0aqPbc7mEIEzMA8CW9Qt5qR6xRhMxF0uYEEbEZxaeIV2UE5Ojt6DtkZn52pERrtzG2atQeDPzT6M6a69kPnbc42la5/s400/INSIDE+INDIA+AUTO.jpg

பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...



http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg



Update me when site is updated




Share/Save/Bookmark

Sunday, March 29, 2009

பூந்தோட்டமா, வாழ்க்கை?



காலை பத்து மணி...


எதிர் எதிரே வரும் வண்டியோட்டிகள் மொபைல் போனில் பேசியபடியே வண்டியோட்டி,அறிவியல் சாதனத்தை அவமானப் படுத்திப் போய்க்கொண்டிருந்தார்கள்.








ஒரு பிச்சைக்காரன் இரண்டு சாலைகளையும் பிரிக்கும் தடுப்புச்சுவரில் வானத்தைப் பார்த்து படுத்து காலை ஆட்டிக்கொண்டு , பரபரப்பாக சென்ற எல்லா சென்னைவாசிகளையும் கிண்டல் செய்து கொண்டிருந்தான்.




வழியில் என் உயிர் நண்பனை சதிஷ் என்னோடு சேர்ந்து கொண்டான்.


தலை மயிர்(வழுக்கை) போனது பற்றி கவலைப்பட்டான்.


என் ஈழத்து வீரத் தமிழன் உயிரையே மயிராக துச்சமாக நினைத்து போர்களத்தில் நிற்கிறான்.


"வாடா! என் தமிழ்நாட்டுத் தமிழா!" என்றேன்.


இன உணர்வு, தமிழன், இலங்கைத் தமிழர்களின் பிணத்தை வைத்து நடத்துகிற அரசியல்....


இந்த வெங்காயம் எல்லாம் வேண்டாங்க.




மனிதனை ,மனிதன்(சிங்களன்?) கொல்கிற காட்சிகளை பார்த்துக் கண்ணை மூடிக் கொண்டு போவது தான் மனிதத் தன்மையா?



திடீரென்று இலங்கைத் தமிழர்கள் மீது பத்திரிக்கைகளுக்கு பாசம் பொத்துக் கொண்டு வருகிறது.



கொலை, கொள்ளை,கற்பழிப்புப் புகழ் தினசரிகள் கூட, ஏன் நடிகைகளின் நாய்களைப் பற்றி எழுதும் வார இதழ்கள் கூட இலங்கை படுகொலை செய்திகளுக்கு, பக்கம் ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றன.


அந்த சாவுச் செய்திகளையும் தங்கள் பத்திரிக்கைகளில் வெளியிட்டு, விற்பனைகளை உயர்த்தி காசு பறிக்கும் உத்தி.


எது எப்படி இருந்தாலும், அதையும் வரவேற்போம்.


வேறு என்னத்தைச் சொல்ல?

அலுவலகத்தை தொட்டதும், அந்த தீச் செய்தீ எல்லோரையும் பற்றிக் கொண்டது. எங்கள் அலுவலக காரோட்டியின் மனைவி தீக்குளித்து செத்தே போய் விட்டாள்!





அலுவக ஊழியர்கள் அப்படியே மருத்துவ மனைக்கு கிளம்பினோம்.


எங்கள் அலுவலக காரோட்டி சரியான குடிகாரன். அந்த பெண் வேலைக்குப் போய் சம்பாதிக்கிற காசைக்கு கூட வாங்கிக் குடித்து விடுவான். ஏற்கனவே இரண்டு முறை தீக்குளிக்க முயன்றிருக்கிறாள்,அந்த பெண். திருமணமாகி இரண்டு வருடந்தான் ஆகுகிறது. பிள்ளை எதுவும் இல்லை.அந்த திருமணக் கடன் கூட இன்னும் முடியவில்லை என்ற தகவல்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
அந்த குடிகாரனோடு வாழ்ந்து தினம் தினம் செத்துக்கொண்டிருப்பதை விட ஒரே நாளில் மொத்தமாக செத்துப் போய் விடலாம் என்று அந்த பெண் முடிவெடுத்து விட்டாள்.

நானும் ஒரு நாள் குடிச்சேங்க. எங்க ஊர் மதுரையில நன்னாரி என்கிற வாசனையான வேர் போட்டு செய்த சர்பத் மாதிரி இருக்கும் என்கிற நினைப்பில...


பெப்சி, கோக், மிராண்டான்னு பூச்சிக் கொல்லி மருந்துகள் வந்த பிறகு மதுரையில் இப்பவெல்லாம் அந்த சர்பத் கிடைக்கிறதே இல்ல. கடை கடையாக தேடினாலும், அவ்வளவு எளிதில் கிடைக்கிறதில்லிங்க.


அந்த சர்பத் நினைப்பில தண்ணி கூட கலக்காம குடிச்சுப் பாத்தேன்ங்க. சகிக்க முடியாத சுவை.


இதுக்குப் போயா இந்த மனிதர்கள் அடிமையாக கிடக்கிறார்கள் என்று மனிதர்கள் மேல் கோபமும், பரிதாபமும் கூட வந்தது.


அதுதான் முதலும் கடைசியும்.அதுக்குப் பிறகு நான் குடிக்கிறதே இல்லைங்க.

பிணவறை வந்தது. பிணவறை ஊழியர் மூக்கைப் மூடிக்கொண்டு போய் பாருங்க என்று கதவை திறந்து விட்டார்.


நான் வேண்டுமென்றே மூக்கை மூடிக் கொள்ளாமல் உள்ளே நுழைந்தேன்.


காரணம்?


உண்மையின் வாசனையை எதற்கு பொய் கொண்டு மறைக்க வேண்டும்...? என்கிற ஞான(?)க்கிறுக்குத் தான்.


ஆனால் அது எவ்வளவு பெரிய விபரீதம் என்பதை பிணம் பார்த்து வந்த பிறகு தான் தெரிந்தது.


காய்ந்த மிளகை வெறும் சட்டியில் வறுத்தால் வருமே நெடி, அதற்கு இணையான நெடி, தொண்டையிலும் கசப்பாக நின்றது. வாந்தியும் குமட்டலும் வந்தது...


கதவோரம் பிறந்து, ஒரு வருடம் கூட முழுமையடையாத குழந்தை ஒன்று துணி விரிப்பில் அழகான ரோஜாப்பூப் போல கண் மூடி தூங்கிக் கொண்டிருந்தது.


இந்த குழந்தையுமா இறந்து விட்டது, என்று கண் கலங்க அந்த பிணவறை ஊழியனிடம் நம்ப முடியாமல் கேட்டேன்.


ஆம்! அதோ! அந்த குழந்தையின் தாய் என்று காட்டினான் பிணவறை ஊழியன்.


அந்த தாய் அழுவதும்,அழுகையை நிறுத்தி விட்டு மொபைல் போனில் யாரிடமோ அடிக்கடி பேசுவதுமாக இருந்தாள்...


ஆயிரமாயிரம் கோவில்களில் கிடைக்காத ஞானத்தை,வாழ்க்கைத் தத்துவத்தை அந்த பிணவறை எனக்கு கற்றுத் தந்தது.


நண்பர்கள் எல்லோரின் முகத்திலும் அமைதி. அதுவரை சலசலவென்று பேசிக் கொண்டு வந்தவர்கள். பேச முடியாத மவுனத்தில் இருந்தார்கள்.




அப்போதுதான் தலை நசுங்கி , சூடாக இரத்தம் வழிய இறந்து போன பிணத்தைக் கொண்டு வந்த ட்ராபிக் போலீஸிடம் காசு(இலஞ்சம்) வாங்கிய பிறகே பிணத்தை இறக்கிய பிணவறை ஊழியர்களின் அஞ்சாத நெஞ்சை, நேர்மையை(?) எண்ணி எண்ணி வியந்தேன்!


அந்த ட்ராபிக் போலீஸ் யாரிடம் இலஞ்சமாக வாங்கினானோ,அந்த இலஞ்சப் பணத்தை?


குடிகாரனுக்கு போன் போட்டு சொல்லி விட்டு அலுவலகம் போகலாம் என்று முடிவெடுத்தோம்.


வைத்திருந்த மொபைல் போனையும் விற்றுக்குக் குடித்து விட்டதாக மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியை யாரோ சொன்னார்கள்.

அந்த குழந்தையை விட, அந்த தாய் ரொம்ப அழகாக இருக்கிறாள் என்றான்,சதீஷ்.


அடிக்க கையை ஓங்கினேன், என் கைகளில் சிக்காமல், என் கைக்கெட்டும் தூரத்தைத் தாண்டி ஓடினான் சிரிந்தபடி, சதீஷ்.


அது ஒரு அரசு பொது மருத்துவமனை. அந்த மருத்துவ மனை கட்டியபோது சுவற்றுக்கு அடிக்கப் பட்ட வர்ணப் பூச்சாக இருக்க வேண்டும். பாதி உதிர்ந்து போய்க் கிடந்தது. ஒரு ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று பெயிண்ட உதிர்ந்துபோய், தொட்டால் பொல பொலவென்று உதிர்ந்து விடும் நிலையில் இருந்தது.


இப்படி எங்கு எங்கு நோக்கினும் அலங்கோலங்கள்...


இதே இந்தியாவில் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற டாட்டா பிர்லாக்கள்,அம்பானி பன்னிகளோடு, கலைஞர் கருணாநிதி குடும்பங்களும் வரிசையில் நிற்கின்றன.


சுவிஸ் வங்கியின் இரகசிய திருட்டுக் கணக்கில் இந்திய பணந்தான் முதலிடம் வகிக்கிறது என்கிறது, பத்திரிக்கைக் குறிப்பொன்று.


இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடு? என்று ஆனந்த தாண்டவமாடியது மனம்.


ஒற்றைத் தனிமனிதன் உண்டு கொழுக்க, ஒட்டு மொத்த நோயாளியாய் கிடக்கிறது, இந்தியா!
அலுவலகத்திற்கு கிளம்பினோம்.






திடீரென்று சதிஷ் கதறி அழ ஆரம்பித்தான்.


கண்களில் நீர்...


குடிக்கிறது எவ்வளவு பெரிய அசிங்கம்ன்னு உணர்ந்துட்டேன் .குடி ஒரு பெண்ணையே கொன்னுடுச்சு. ஒரு பொண்ண கொன்ன அவனெல்லாம் ஒரு மனுசனா? இல்ல குடிச்சுட்டு வந்து நிக்கிற நானெல்லாம் ஒரு மனுஷசனா? குடிகாரனுங்க எல்லாம் கொலைகாரனுங்க... என்று நீட்டி முழங்கிக் கொண்டே போனான்,சதீஷ்.




சதீஷ் எப்ப ஒயின்ஷாப் போனான்? அவன் பேச்சுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றோம்...!

ஆதிசிவம், சென்னை.



இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...

http://beyouths.blogspot.com/2009/03/blog-post_29.html#links

எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA
Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics