"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Sunday, December 28, 2008

வெப்சைட் வேட்டை (collection of website addresses)










ஆன்லைன் பூங்கொத்துக்களை அனுப்ப...


இது ஒரு வித்தியாசமான வாழ்த்துப் பூங்கொத்தை அனுப்பும் இணைய தளம்.


மற்ற தளங்களில் அங்கு ஏற்கனவே இருக்கும் வாழ்த்து அட்டைகள்,அனிமேஷன்களை மட்டுந்தான் அனுப்ப முடியும்.


ஆனால் இந்த தளம் அப்படி இல்லை. நமக்கு பிடித்தமானவர்களுக்கு, நமக்கு பிடித்த நிறத்தில்,நமக்கு பிடித்த மாதிரி வடிவத்தில் அனுப்பும் சுகமான அனுபவத்தை தருகிறது.


இந்த இணைய தளம் போனால் விதவிதமான பூக்களையும்,பூஞ்சாடிகளையும் பார்க்கலாம்.


தேவையான வடிவத்தில் பூஞ்சாடிகளை தேர்ந்தெடுத்து, அதற்கான நிறத்தையும் கூட நாமே தேர்ந்தெடுக்கலாம்.அதற்கு பிறகு நமக்கு பிடித்த பூக்களை பிடித்து இழுத்து


வந்து,அந்த பூஞ்சாடிக்குள் நமக்குப் பிடித்த இடத்தில் நட்டு நிறுத்தி, அதோடு வாழ்த்துத் தகவலையும் சேர்த்து,அங்கிருக்கும் அழகான உறை ஒன்றையும் இணைத்து,நம் பிரியமானவர்களுக்கு,உங்களுக்குப் பிடித்த தேதியில், இமெயில் முகவரிக்கு அந்த ஆன்லைன் பூங்கொத்தை அனுப்பினால்...


அந்த பூங்கொத்தை திறந்த தகவலை இமெயில் ஓடோடி வந்து...


அந்த அன்புச் செய்தியை அழகாய் சொல்லும்...


http://www.flowers2mail.com/



உங்கள் காலண்டரை நீங்களே உருவாக்குங்கள்


இந்த தளம் போய் நமக்கு தேவையான மாதம்,வாரம் என்று தேர்ந்தெடுத்து பிரிண்ட் எடுக்கலாம்.வாரத்தை திட்டமிட,ஒவ்வொரு நாளையும் திட்டமிட என தனித்தனியாக பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம். வித விதமான நிறங்களில் காலண்டர்களைப் பெறலாம் என்பது இதன் சிறப்பு.


அதோடு நிதி நிர்வாகம் ,உடல்நலம் தொடர்பான போன்ற பலவற்றையும் இலவசமாக பெற்றுப் பயன்படுத்தலாம்.






www.eprintablecalendars.com






வீடியோவில் இருந்து ஆடியோவைப் பிரிக்க...


இந்த தளம் தரும் இலவச சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்யவும். தேவையான கட்டளைகளை செயல்படுத்தி வீடியோவில் இருந்து ஆடியோவைப் பிரித்தெடுக்கலாம்.அந்த ஆடியோ பைலை mp3 வடிவத்திலும் மாற்றிக் கொள்ளலாம்.

http://www.videohelp.com/

வைரஸ் உள்ள இணையதளமா?


அறிமுகம் இல்லாத இணையதள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் நம் கம்யூட்டரை வைரஸ் போன்ற ஆபத்துக்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது.அந்த பிரச்னையை போக்குகிறது, இந்த தளம்.


இந்த தளம் போய் அந்த அறிமுகம் இல்லாத புதிய இணையதள முகவரியைத் தந்தால்,அந்த புதிய தளத்தை பிரிவியூ வடிவத்தில் காட்டும்...


இந்த தளம் வழங்கும் டூல் பாரை டவுன் லோட் செய்து,இயக்கினால் நம் பிரவுசரிலிருந்தே அந்த இணைய தள வசதியைப் பெறலாம்.ஆபத்தான இணைய லிங்கை கண்டறிந்து தவிர்க்கலாம்.


http://www.prevurl.com/


இணைய பக்கங்களில் தேவையான பக்கத்தை மட்டும் பிரிண்ட் எடுக்க

இந்த தளத்தில் இருக்கும் lexmark என்னும் டூல்பாரை டவுன்லோட் செய்ய வேண்டும்.இணைய பக்கங்களில் இருக்கும் தேவையில்லாத கிராபிக்ஸ்,படங்கள் போன்றவைகளை நீக்கி பிரிண்ட் எடுக்கலாம்.


கலர் பிரிண்ட்டுக்கு என தனி மெனுவும்,கருப்பு வெள்ளைக்கென்று தனி மெனுவும் இருக்கிறது.இதனுடன் picnik என்னும் புகைப்படங்களை எடிட் செய்யும் மென்பொருளையும் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

www.lexmark.com

ஒரே பிரவுசரில் இரண்டு இணைய தளத்தை திறக்க

இந்த இணைய தளம் போனால், ஒரே பக்கத்தில் இரண்டு இணையதளப் பக்கங்கள் இருக்கும்.அதில் நமக்கு தேவையான இணையதள முகவரிகளை டைப் செய்து, அவைகளை ஒரே பக்கத்தில் பார்க்கலாம்.நேரத்தை மிச்சப் படுத்தலாம்.


http://www.dualpage.com.br/


ஒரே மாதிரி உருவத்தின்,ஒரே மாதிரி படத்தைத் தேட...

இந்த தளம் போய் நமக்குத் தேவைப்படும் படத்தின் பெயரைக் கொடுத்து தேடச்சொன்னால்,ஏராளமான படங்களை திரையில் கொண்டுவந்து கொட்டும்,காட்டும்


அதில் நமக்குப் பிடித்த படத்தை மட்டும் தேர்வு வலப்புறத்தில் இருக்கும் தேடல் பகுதியில் கொண்டுபோய் விட்டால்...


உதாரணத்திற்கு தேடப்பட்ட படங்களில் ஐஸ்வர்யாராய் சேலை கட்டியிருக்கும் படத்தை மட்டும் அந்த வலப்புறத் தேடல் பகுதியில் கொண்டுபோய் விட்டு தேடச்சொன்னால்...


ஐஸ்வர்யாராய் சேலை கட்டியிருக்கும் எல்லா படங்களையும் பட்டியலிடும்...

www.pixolu.de










Share/Save/Bookmark

Sunday, December 7, 2008

"தற்கொலை ஆயுதம்!"-கவிதை











"தற்கொலை ஆயுதம்!-கவிதை"





ஊழல் பெருச்சாளிகள்

ஊர்வலம் போகும் சாலைகளில்...

மழைத்துளிகள் கூட
வெடிகுண்டுகளானது

சாலைப் பள்ளங்கள்...!






நண்பனே...!

குப்பைத் தொட்டி
நிறைய கவிதைகள்
எழுத வேண்டாம்!

பெண்கள் புத்திசாலிகள்!

நம்பு!!

நீ குப்பைத் தொட்டியாக கூட இரு...!

ஆண்களுக்கு வருவது ஆசைகள்

பெண்களுக்கு வருவது பேராசைகள்!

புரிந்து கொள்!

உன்னை பழி கொடு,

உன் ஆயுளை அழி!

உன் குப்பைத் தொட்டி
நிறைய நிறைய
பணக் காகிதத் தாட்கள் ஏந்தி வா!

பெண்களின் ஆசை, ஆடம்பரங்களை
நிறைவேற்று

தயவு செய்து கவிதைகள் மட்டும் எழுத வேண்டாம்!

காதலிக்க மாட்டாள்!

அட! இன்னுமா...?

"எப்படி என்று கேட்கிறாய்?"

காதலித்துப் பார்!

உன் பேனா முள்ளும்

உன்னைக் கொல்லும்

கொலை ஆயுதமாகும்...!










Share/Save/Bookmark

Wednesday, November 19, 2008

"ஞாபக மரம்"- கவிதை


"ஞாபக மரம்"- கவிதை


காயத் தழும்புகளோடு
இயேசு
உயிரோடு வந்தார்...!

ஆச்சரியக் குறியாய்
மக்கள் கூட்டம்!

உங்களில் யோக்கியமானவர்கள்
இந்த தேவாலயத்திற்குள் நுழையலாம்
என்றார்

மறுநாளே
அந்த கிறிஸ்தவக் கோவில்
நிரந்தரமாக மூடப்பட்டது....!









அனாதைப் பிணம்

"ஈ" மொய்க்கும்

மனிதநேயம்!









என் மனப் பறவை

வாழ்க்கை வானத்தில்

மனசு வலிக்க
தேடி பறந்து கொண்டேதான்
இருக்கிறது....!

நீயும் நானும்
அமர்ந்து பேசிய

ஞாபக மரம்
வெட்டப் பட்டது
தெரியாமல்.....






_ஆதிசிவம்,சென்னை.
Share/Save/Bookmark

Tuesday, October 28, 2008



வேலைத் தொல்லையால்....
நம் இருவருக்கும் இடையே இடைவெளி விழுந்து விட்டது....
விரைவில் இணையத்தால் இணைவோம்......!


_ஆதிசிவம்,சென்னை.




Share/Save/Bookmark

Thursday, October 9, 2008

"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 8



மின்வெட்டு

தூக்கம் போனது

மின்சார அமைச்சருக்கு.....



( தேர்தல் பயம்...!)

_ஆதிசிவம்,சென்னை.













பாகம் 8
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை




சிறையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறான்!சுட்டுக் கொல்லப் படுகிறான்.

இந்திய ராணுவ வீரர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே தருகிறான்.

போர்க் காலங்களில் அந்த ஆங்கிலேயே பேடி நாய்கள், நமது இராணுவ வீரர்களை எதிரிகளின் பீரங்கிக்கு முன்பாகத் தள்ளிவிட்டு பின்னால் பதுங்கிப் பதுங்கிச் சென்று உயிர் தப்பி விடுகின்றான்.

உங்களின் பெற்றோர்கள்,உங்கள் சகோதரர்கள்,மனைவி,மக்களின் அவலக் குரல்கள் உங்களின் காதுகளில் விழவில்லையா?

மரணம் எல்லோருக்கும் நிச்சயம்!அந்த உயிர் உங்கள் நாட்டை காப்பதற்காக போகட்டும்!"
என்று செண்பகராமன் 1915 ஆம் ஆண்டு ஜீலை 31 இல் இந்திய ராணுவ வீரர்களுக்கு உணர்ச்சிமிக்க வேண்டுகோள் விடுத்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதில் வெகு தீவிரமாக இருந்த மன்னர் மகேந்திர பிரதாப் 1915 இல் ஜெர்மனிக்குச் சென்றார்.ஏற்கனவே செண்பகராமனைப் பற்றி கேள்விபட்டிருந்த பிரதாப்,ஹர்தயாள் செண்பகராமன் மூவரும் மன்னர் கெய்சரை சந்தித்தார்கள்.நடக்கின்ற உலகப் போர் ஆங்கிலேய ஆட்சிக்கு முடிவு கட்டும்! என்றார்,கெய்சர்.பல இந்திய தீவிரவாதிகளை இப் பேச்சு உற்சாகப்படுத்தியது.

ஜெர்மனியில் தங்கியிருந்த ராஜா மகேந்திர பிரதாப்பை ஆப்கானிஸ்தான் மன்னரான ஹபிபுல்லா தன் நாட்டிற்கு வரும்படி அழைத்திருந்தார்.புரட்சியாளர்களுடன் நம் செண்பகராமனும் காபூலுக்குப் போனார்.

அங்கு வரலாற்றுப் புகழ்மிக்க பாபர் அரண்மனையில் அனைவரும் தங்க ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தது.சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக அங்கு சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தனர்.

1915 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி புதன்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இந்தியாவின் சுதந்திர சர்க்கார் என்ற குழு (provisional government of india)உதயமானது.

மகேந்திர பிரதாப் பிரஸிடெண்ட் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.பிரதம மந்திரி பதவிக்கு மவுலானா பரக்கத்துல்லா நியமிக்கப்பட்டார்.மவுலானா உபயதுல்லா உள்துறை அமைச்சர்.அடுத்து ரஷ்ய நாட்டிலுள்ள மொஹம்மது அலி,ஜெர்மனியிலுள்ள அல்லாஹ் நவாஸ் இருவருக்கும் முக்கியப் பொறுப்புகள் வழக்கப்பட்டன.செண்பகராமனுக்கு சுதந்திர இந்தியாவின் வெளிநாட்டு மந்திரிப் பதவி வழங்கப்பட்டது.ஷம் ஷேர் சிங்,பஷீர்கான் ஆபனி முக்கர்ஜி,ஷெளக்கத் உஸ்மானி ஆகியோர்களைத் தவிர சில புரட்சி வீரர்களுக்கும் பல முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. அக்கூட்டத்தில் இளவரசர் அமானுல்லாகானும் கலந்து கொண்டாராம்.

காபூலில் இந்தியாவின் சுதந்திர சர்க்கார் அமைத்தைப் பற்றி ரஷ்ய நாட்டிலிருந்து லெனின் தனது வாழ்த்துச் செய்தியை செண்பகராமனுக்கு அனுப்பியிருந்தாராம்.

முதல் உலகப் போரில் ஜெர்மனி வெற்றிபெறும். ஜெர்மானியரின் உதவியுடன் பிரிட்டிஷாரை விரட்டியடித்து காபூலில் தொடங்கிய இந்தியாவின் சுதந்திர சர்க்காரை தில்லிக்கு மாற்ற வேண்டும்.பின்னர் இந்திய வரலாற்றையும் வரைபடங்களையும் மாற்ற வேண்டும் என திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் முதல் உலகப் போரின் நிலையோ வேறுவிதமாக மாறியது!











எல்லா அசிங்ககளுக்கும் ,அவலங்களுக்கும் துணை போகிற அமெரிக்கா போரில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக களம் இறங்கியது.ஜெர்மனிக்குக் கெட்ட காலம் ஆரம்பமாயிற்று.ஜெர்மானியருடைய சரக்குக் கப்பல்கள் கடல் மார்க்கமாகச் செல்வது தடுக்கப் பட்டது.திடீரென ஜெர்மானியரின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் போர்க் கப்பல்கள் எதிரிகள் வசமாயின.

1918 ஆம் ஆண்டில் ஜெர்மானியருக்கு வெற்றியா,தோல்வியா? என்ற பிரச்சினைக்கு தீர்வு தெரியாமலேயே முடிந்து போனது.வார்சேல்ஸ் உடன்படிக்கையின்படி உலகப் போருக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

ஜெர்மனியிலுள்ள இந்தியத் தீவிரவாதிகளை பிரிட்டிஷ் அரசு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாம். ஆனால் அந்த வேண்டுகோளை ஜெர்மனி நிராகரித்ததால்,பிரிட்டிஷாருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.

செண்பகராமன் கட்டிய கனவுக் கோட்டை தன் கண் முன்னாலேயே சரிந்து விழுந்ததால், நொறுங்கி விழுந்தார்!...செண்பகராமன்.

அடிமைத் தனம் எந்த திசையில் இருந்து வந்தாலும்,எந்த வடிவம் எடுத்து வந்தாலும் வாள் ஏந்திச் சாய்ப்பவன் அல்லவா, போராளி?

வெள்ளை நிறத்திற்கு ஒரு சட்டம்! அடிமைக் கறுப்பு நிறத்திற்கு வேறு ஒரு சட்டம்! என்ற அசிங்கங்களைக் கேள்விபட்டு.....


எந்த நாடு அடிமைப் பட்டிருக்கிறதோ அந்த நாடே என் தாய் நாடு என்று 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணமானர்.
தலைநகர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் இருந்த ஜனாதிபதி உட்ரோ வில்சனை சந்தித்து நீக்ரோ மக்களின் அடிமை வாழ்வு குறித்து விவாதித்தார்.

நம் செண்பகராமனின் பேச்சுத் திறமையைக் கண்டு வியந்த வில்சன் நீக்ரோக்கள் மீது அனுதாபம் காட்டினார்.அமெரிக்க நாட்டு மக்களின் எண்ணத்திற்கு நேர்விரோதமாக இருக்கிறது, உங்கள் பேச்சு,அந்த பிரச்சனைகள் மீது என்னால் எந்த நடவடிக்கைகளும் எடுக்க முடியாத தர்மசங்கட்டமான இக்கட்டில் நான் இருக்கிறேன் என்று நாசுக்காக மறுத்தார்.

அதன் பிறகு அமெரிக்காவில் பல இடங்களில் நீக்ரோக்களின் விடுதலைக்காக பகிரங்கமாக
பிரச்சாரங்கள் செய்தார்.அதைக் கேட்ட நீக்ரோக்கள் நம் செண்பகராமனின் தியாக குணத்தைப் பெரிதும் பாராட்டி வரவேற்றனர்.ஆனால் அமெரிக்க வெள்ளையர்களோ திடுக்கிட்டனர்!

அமெரிக்காவிலிருந்த பிரிட்டிஷ் ஒற்றர்கள் செண்பகராமனை கைது செய்ய முயற்சித்தபோது,அவர் மாறுவேடத்தில் வெளிநாடு சென்ற செய்தி தான் பதிலாகக் கிடைத்தது!

எப்படி தப்பிச் சென்றார் என்ற விவரம் யாருக்கும் தெரியவே இல்லை!

காந்தியடிகளைச் சந்திக்க விரும்பி தென்னப்பிரிக்கா வந்தார்.ஆனால் அதற்கு முன்பாகவே காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தனது போராட்டங்களை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.

அங்கு நிலவிய வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, இந்தியர்கள் நீக்ரோக்கள் போராட முன் வர வேண்டும் என்று அங்கும் சுதந்திரக் கனலை கக்கினார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்த தமிழ் அன்பரான விருத்தாசலம் பிள்ளை அவர்கள் செண்பகராமனிடம் அன்றைய தென்னப்பிரிக்காவின் அரசியல் நிலையைப் பற்றிக் கூறுவதுடன், அங்கும் தொடரும் பிரிட்டிஷ் ஒற்றர்கள் பற்றி கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கவும் செய்வார்!

வழக்கம்போல மாறுவேடத்தில் தப்பித்து ஜெர்மனிக்கு திரும்பினார்.

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் அனைவருமே செண்பகராமனின் திறமையையும் துணிச்சலையும் பெரிதும் பாராட்டினார்கள்.அந்த நாட்டின் பிரபல கவுரவ விருதான "வான்" என்ற பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது.அன்று முதல் சாதாரண செண்பகராமன் "வான் செண்பகராமன் பிள்ளை" என்றே அழைக்கப்பட்டார்.

முதல் உலகப் போர் முடிந்ததும் கெய்சர் சக்கரவர்த்தியின் செல்வாக்கு தேயத் தொடங்கியது!கெய்சருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுத்தன.1918 இல் கெய்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டார்.

அந்த எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி "நாஜிக் கட்சி" என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.அவர்களால் வெய்னர் என்ற குடியரசும் தோற்றுவிக்கப் பட்டது!

அதனால் ஜெர்மனியில் இருந்த இந்திய தீவிரவாதிகளுக்கு இருந்த ஆதரவு மொத்தமாக சரிந்தது.....!


முழக்கம் உயரும்...


_ஆதிசிவம்,சென்னை.




Share/Save/Bookmark

Sunday, October 5, 2008

நீ இருந்த இடம்-கவிதை




நீ இருந்த இடம்


மனசுக்கும்
அறிவுக்கும் போட்டி நடந்தது...!

தூரத்தில்
இருக்கும் காதலை
யார் போய்
முதலில் சேர்வதென்று...

அறிவு முதலாவதாக
வந்து காதலைக்
கூட்டிப் போய் விட்டது!

கடைசியாக இரத்த வியர்வையோடு
வந்த மனசு
காதல் இருந்த இடத்தில்
கண்களில்
இரத்தம் வர அழுது தீர்த்தது...!

"எப்படித்தான் மனசே
இல்லாதவனோடு
காலம் முழுவதும் வாழப் போகிறாளே? "


(அறிவு இல்லாமல் கூட வாழலாம்.அன்பு,நல்ல மனசு இல்லாமல் இருத்தலாகாது)


_ஆதிசிவம்,சென்னை.






Share/Save/Bookmark

“கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:





“கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:
------------ --------- --------- --------- --------- -----


உலகளாவிய பங்கேற்பில் சென்னை, மதுரை, புதுகைக்குப் பரிசுகள்!வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள்! புதுக்கோட்டையில் வாழ்ந்து மறைந்த பிரபல மக்கள் எழுத்தாளர் கந்தர்வன் நினைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஆண்டுதோறும் சிறுகதைப் போட்டி நடத்திப் பரிசுகள் வழங்கி வருவது தெரிந்ததே. இரண்டாவது ஆண்டாக நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்த ஆண்டு ‘கல்கி’உள்ளிட்ட பல்வேறு அச்சிதழ்களிலும், திண்ணை, பதிவுகள், கீற்று, மென்தமிழ் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் போட்டி அறிவிப்பு வெளிவந்ததால், உலக அளவிலான பங்கேற்புடன் 450க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருந்தன என்று, போட்டி அமைப்பாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளருமான கவிஞர் நா.முத்து நிலவன் முன்னிலையில், சங்கத்தின் பொதுச்செயலர் ச.தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சிறுகதைப் போட்டியில் உலகளாவிய பங்கேற்பு! கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 382 கதைகள் வந்திருந்தன. பரிசு வழங்கும் விழாவில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினார். இந்த -இரண்டாம்- ஆண்டில் நடத்தப்பட்ட போட்டிக்கு, 450க்கு மேற்பட்ட கதைகள் வந்திருந்தன. உலகளாவிய பங்கேற்பும் கூடுதலாக இருந்தது. தமுஎச.வின் மாநில நிர்வாகிகள் வழிகாட்டுதலில, பிரபல எழுத்தாளர் உதயசங்கர் தலைமையில் 8பேர் கொண்ட நடுவர்குழுவினர். 15 நாட்களுக்கும் மேலாகக் கதைகளைப் பரிசீலித்து முடிவுகளை தெரிவித்தனர். இம்முடிவுகள், அக்.2ஆம் தேதி மதுரையில் நடந்த மாநிலச் செயற்குழு மற்றும் தமுஎசவின் மாநிலத்தலைவர் பேரா.இரா.கதிரேசன் ஆகியோர் ஒப்புதலுடன் அறிவிக்கப் படுகிறது. தேர்வு செய்யப் பட்ட கதைகளும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களும் :





முதல் பரிசு ரூ.5,000 : “வெட்டிவேலை” : ம.தி.முத்துக்குமார், சென்னை19 –பேசி:9884217447

இரண்டாம் பரிசு ரூ.3,000 : "தாத்தாவின் டைரிக்குறிப்புகள்" ச.சுப்பாராவ்,மதுரை-14--பேசி:9442182038

மூன்றாம் பரிசு ரூ.2,000 : " பொதுத்தொகுதி"சு.மதியழகன், ஆலங்குடி, புதுகை(மாவ)--பேசி:9842910383


தலா ரூ.250 மதிப்புள்ள பரிசுகளைப்பெறும் இதரகதைகள் விவரம் :


1.’கிளாவரில் தொலைந்த சீட்டுக்கட்டுகள்’–லஷ்மி சரவணக்குமார், சென்னை-19 பேசி: 97905774602.

’காந்தாரி’- ஆர்.ஸ்ரீதரன், மதுரை-2 --- பேசி: 9443060431 3.’கூத்துப் பொட்டல்’ - தீபம் முத்து, திருச்சி --- 9788064304

4.’பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது’ – கலைபாரதி, மன்னார்குடி --- பேசி: 99431799095

’மழை’ –லெஷ்மி மோகன் சென்னை-28 --- பேசி: 99621293336.

’சீக்கு’ –தாண்டவக்கோன் திருப்பூர் -- பேசி: 93602542067.

’வலை’-பெரணமல்லூர் சேகரன், தி.மலை மாவ. --- பேசி: 94421452568.

’கருவேல முட்கள்’ – வி.ர.வசந்தன், திருச்சி --- பேசி: 98941246839.

’கடைசி நாள் படுக்கை’ – எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை-24 -- பேசி:044-24832664



தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்த கதைகளுக்கான “சிறப்புப் பரிசு” விவரம் : 1.

1’ஒருவகை உறவு’ – கே.எஸ்.சுதாகர், ஆஸ்திரேலியா,

2.’காணமட்டும் சுகமான கனவுகள்’ – பொன். கருணாகர மூர்த்தி, ஜெர்மனி,

3.’யார் குற்றவாளிகள்?’ – முகம்மட் முனாஸ் பாத்திமா, இலங்கை,

4’அப்பாவின் கண்ணம்மா’ – குரு.அரவிந்தன், கனடா,

5.’நீ நான் நேசம்’ – எம்.ரிஷான் ஷெரீப், கத்தார்,

6.’பாம்புத் தலை’- மைதிலி சம்பத், செகந்திராபாத்.



-- ஆக மொத்தம் 18 கதைகள் தேர்வு செய்யப் பெற்றுள்ளன. இவற்றை ஒரு தொகுப்பாக அச்சிட்டு, வரும் திசம்பர் மாதம் சென்னையில் நடக்க உள்ள தமுஎச மாநில மாநாட்டின் போது நூலாக வெளியிட உள்ளதாக நா.முத்து நிலவன் தெரிவித்தார். பரிசுத் தொகை ஏற்பு:மேற்காணும் பரிசுகளுக்கு உரிய தொகையில் ரூ.10,000ஐ திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் அவர்களும், ரூ.5,000ஐ கீரனூரைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் கணபதி சுப்பிரமணியன் அவர்களும் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிட்டுப் பாராட்டத் தக்க செய்தியாகும் பிரபஞ்சன், சீமான், நா.முத்துக்குமார், பங்கேற்கும் பரிசளிப்பு விழா!புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில்; பிரபல எழுத்தாளரும் -சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான பிரபஞ்சன், திரைப்பட இயக்குநர் சீமான், திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக் குமார், கவிஞர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் பாலா, ஆகியோருடன் தமுஎச பொதுச்செயலர் ச.தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மேற்கண்டவாறு, பரிசளிப்பு விழாவும், மாவட்ட மாநாடும், ‘புதுகை பூபாளம்’குழுவினர்க்குப் பாராட்டு விழாவும் எதிர்வரும் 17,18ஆம் தேதி(வெள்ளி சனிக்கிழமை)களில் விரிவான அளவில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளன. பிரபல எழுத்தாளர் தூத்துக்குடி உதய சங்கர் தலைமையில் எழுத்தாளர்கள் அல்லி உதயன், கடலூர் ஜீவகாருண்யன், கோவை கோதண்டராமன், திருப்பெருங்குன்றம் வெண்புறா, சென்னை மணிநாத், சேலம் ஷேக்அப்துல்லா, விமர்சகர் மு.அசோகன் ஆகிய 8 பேர், சிறந்த கதைகளைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் பணியாற்றியதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் நா.முத்து நிலவன் தெரிவித்தார்துணைச்செயலர் கவிஞர்ஜீவி, மாவட்டத் தலைவர்கள் தங்கம்மூர்த்தி, ரமா.ராமநாதன், பிரகதீஸ்வரன் நீலா, மதி, தனிக்கொடி, பேரா.செல்வராசு,ராசி.பன்னீர்செல்வன், புதுகை சஞ்சீவி முதலான விழாக்குழுத் தலைவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை விரிவாகத் திட்டமிட்டுச் செய்து வருகிறார்கள்.



நன்றி!

வணக்கம்.

தங்கள் உண்மையுள்ள, நா.முத்து நிலவன்


கந்தர்வன் நினைவு-தமுஎச-சிறுகதைப் போட்டி-2008 அமைப்பாளர்
மற்றும்,
த.மு.எ.ச. மாநிலத் துணைப் பொதுச்செயலர்.
96.சீனிவாச நகர் 3ஆம் தெரு,புதுக்கோட்டை – 622 004
cell : +91 9443193293
E-mail: naamuthunilavan@ yahoo.co. in




_ஆதிசிவம்,சென்னை.
Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics