"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Wednesday, January 7, 2009

"என் இனிய இயந்திரா...!" கவிதை















"என் இனிய இயந்திரா...!" கவிதை

என் மீசையை
நான் எடுத்தால்
நீ...!
திட்ட மாட்டாய்...!

என் நிறம்
என் வேலை
என் பலம்
என் பலவீனம்
எல்லாம்
தெரிந்த பிறகு...

உங்கள் குணத்துக்காகத்தான்
உங்கள் மீது காதல் வந்தது
என்று
பொய் சொல்லமாட்டாய்...

ஏற்கனவே
அழகான உன் முகத்தை
மேலும்
அழகு கூட்டி
உன் அழகுக்கு முன்னால்...
என்னை
மண்டியிட செய்ய மாட்டாய்...!

நான் உனக்காகவும்
நீ எனக்காகவும்
வாழ்ந்து தீர வேண்டிய
கட்டாயப் பொய் வாழ்க்கைக்கு என்னை
ஆளாக்க மாட்டாய்...

மனிதர்கள் எல்லாம் இயந்திரங்களாகி வருகிறார்கள்...!

என் இனிய இயந்திரப் பெண்ணே..!

வா...!






நீயாவது என்னை மனிதனாக்கு...!

(குறிப்பு: வர இருக்கும்,மனித உணர்ச்சிகள் உள்ள பெண் ரோபாக்களை வரவேற்கிற கவிதை)







Share/Save/Bookmark

அடுத்த முதல்வர் விஜயகாந்த் தான்!



அடுத்த முதல்வர் விஜயகாந்த் தான்!

திமுக(கலைஞர்),அதிமுக(ஜெயலலிதா), தேமுதிமுக(விஜயகாந்த்) போன்றவர்களின் ஆர்ப்பாட்டங்கள்,கூட்டங்களுக்கு செய்தி சேகரிக்கப் போனால்...


அவர்கள் நிகழ்ச்சியை நாங்கள் கவர் செய்ய போவதால்,எங்களுக்கு அவர்கள் கவர் தருவது வழக்கம்!திமுக தரும் கவரில் ரூபாய் 200 இருக்கும், அதிமுக தரும் கவரில் ரூபாய் 500 இருக்கும்.

ஆனால்.....
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலஞ்சத்தை ஒழிப்போம்!", என்று மேடையில் முழங்கும்...

நம்ம அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தரும் கவரில் ரூபாய் 1000 இருக்கும்!

(சென்ற மாதம் சென்னையில் நடந்த வலைப் பதிவர் கூட்டத்தில்,நிருபராக இருக்கும் ஒரு வலை பதிவர் புல்வெளியில் சொன்ன, புல்லரிக்க வைத்த செய்தி!)





Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics