"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Friday, July 4, 2008

கமல் அவதாரம்

பட விமர்சனம்
தசாவதாரம்


கதை:கிருமி கண்ட சோழன் கமலஹாசன் எய்ட்ஸை போலவே, அல்லது அதை விட மோசமாக பரவிக்கொல்லும் ஓர் உயிரியல் வெடிகுண்டை சதிக்கும்பலிடமிருந்து மீட்டு உலகையும் காப்பது .கதையின் கதை:


சைவ,வைணவப் பிரச்னையில் சிக்கிச் சாகடிக்கப்படும் (மறைந்த எழுத்தாளர் ரங்கராஜன் என்ற சுஜாதாவுக்கு அர்ப்பணமா,கமல்?இந்த பெயர் சூட்டல்?)ரங்கராஜ நம்பி (கமல் 1)யின் நடிப்பும் பின்னணியில் ஆக்ரோஷமாக வெளிவரும் கமலின் கர்ஜனையும் சிங்கத்தின் சிலிர்ப்பு.

அமெரிக்க ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானியாக வரும் தமிழ் கோவிந்த ராமசாமி(கமல் 2),கிருமி வெடிகுண்டையை பணத்துக்காக விற்க விரும்பும் சதிக்கூட்டத்துக்கு கிடைக்காமல் தப்பி ஓட, துரத்துகிறார்,வில்லன் கமல் (3).நண்பனின் வீட்டில் பதுங்கி இருக்கும் போது, வில்லனால் சாகடிக்கப்படுகிறார்கள் நண்பனும் ,நண்பனின் மனைவியும்.இதைக் கேள்விப் பட்டு நண்பனின் மனைவியின் அண்ணனாக
வில்லனைத் தேடிக் கிளம்புகிறார், சா ப்பானிய கராத்தே கமல்(4).தமிழ்நாட்டு விமான நிலையத்தில் சிக்கிக்கொள்ளும் நாயகன் கமலை ,விசாரிக்க வருவது ஆந்திர போலீஸ் கமல்(5).வில்லன் கமலிடம் மாட்டித் தப்பிக்க முயற்சிக்கையில் வில்லன் கமல் துப்பாக்கியில் சுட, அது பாடகராக வரும் சிங் கமல்(6) மேல் பட்டு அவர் பிழைத்துக் கொள்கிறார்.

அந்த கிருமி வெடிகுண்டு வயதான கிழவிக்கு (கமல் 7) அனுப்பப் பட,அது சாமியின் சிலைக்குள் சிக்க சிலையோடு தப்பிக்கும் போது அசினும் பிசின் போல ஓட்டிக் கொள்ள, காரில் ஏறி தப்பித்துப் போகும் போது, நடக்கும் விபத்துக்குள்ளான காரின் உள்ளிருத்து கிளம்புகிறார்,கட்டை வைத்து நடக்கும் இன்னொரு உயரமான கமல்(8), அந்த குண்டை கடலில் தூக்கிப் போட்டு அழிக்க முயலும் போது, அது வில்லன்
கமலிடம் சிக்க, அவரைத் தேடி வந்த சப்பானிய கமலுக்கும் நடக்கிற சண்டையின் இறுதியில்,அந்த கிருமி குண்டை உடைத்து வில்லன் கமல் வாய்க்குள் போட, சுனாமியின் வாய்க்குள் வில்லனோடு சேர்ந்து கிருமி குண்டும் மாட்டி அழிந்து போகிறது.அந்த அழிவில் மாட்டிக் கொண்டு மாண்டுபோவது பூவராகன் என்ற கமலும் (கமல் 9) கூட.

அதை அமெரிக்க ஜார்ஜ் புஷ் (கமல் 10) தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நடந்த சம்பவங்களை விளக்குகிறார். படம் முடிகிறது!

நாட்டைக் கெடுத்த நல்லவர்களும் தலை காட்டி விட்டுப் போகிறார்கள்.

உயரமான கமலும்,சிங் கமலும் வீண்.அசின் கமல் காதல் இளநீர் இதம். என்றால் இன்னொரு பக்கம் பார்த்தால் கதைக்கு அதுவே வேகத்தடை.உலகநாயகன் கமலை விட வில்லன் கமலிடம் நல்ல வேகம்.வில்லன் கமலும் அசினும் படம் முழுக்க பரவியிருக்கிறார்கள்.நம்ம வீட்டு டிவிப் பெட்டியில் ஆங்கிலப் பேய்கள் கூட தமிழ் பேசும் போது, படத்தில் நிறையப் பேர் அந்நிய மொழிகள் பேசுகிறார்கள்.
பாடல்கள்...

"உலக நாயகனே!"... என்ற வைரமுத்துவின் வைரவரிகளுக்கு கே.எஸ்.ரவிக்குமார் வந்து கரகாட்டம் ஆடுவது கொடுமை.

"கல்லைக் கண்டால்"... என்ற பாடல் கல் மனசையும் கரைக்கும் வாலியின் மயக்கும் வரிகள்.

"முகுந்தா முகுந்தா"... என்ற பாடல் சாதனா சர்க்கத்தின் ஐஸ் கிரீம் குரல் நம்மை கரைந்து போகச் செய்கிறது.


1929 ஆம் ஆண்டிலேயே வந்த only me என்ற ஆங்கில இங்கிலாந்து படத்தில் அந்த படத்தின் கதாநாயகன் lutino lan 24 வேடங்களில் நடித்து விட்டார் என்றும், ஏற்கனவே பலபேர் 12,14 வேடங்களில் நடித்து விட்டார்கள்.இவர் என்ன பெரிய உலக நாயகனா? என்ற கமலுக்கு எதிரான அந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்.

இந்த மண்ணில் கமலைத் தவிர உலக நாயகன் என்ற பெயருக்கு தகுதி யாருக்கு இருக்கிறது?

சாதி, மதம் பார்த்து வளரும் மேல்சாதிக்கார மனநிலை தவறிய கிழவி,சுனாமியில் இறந்த கீழ்சாதியில் பிறந்த கமலைக் கட்டிக் கொண்டு அழும்போது, மனநிலை தவறியவள் அந்த கிழவி இல்லை நாம் தான் என்று உணர வைப்பது பல பரிசுகளை வென்ற பக்கா கமல் தனம்.


"ஏசுவும்,அல்லாவும் இந்தியாவுக்குள் அல்லது அதன் அரசியலுக்குள் புகாத நூற்றாண்டு.மோதிக் கொள்ள வேறு கடவுள்கள் இல்லாததால் சைவம்,வைணவம் என்று பிரிந்து பக்தர்கள் வாயிலாக தமக்குள் மோதிக் கொண்ட நூற்றாண்டு."

"யானைக்கும் சரி,மனிதனுக்கும் சரி.மதம் பிடித்துப் போனால் தொல்லை தான்."

"மத நெறி ,மத வெறி ஆனது."

கமலிடமிருந்து சாமி சிலையை பிடுங்கி தொடர் வண்டிப் பெட்டிக்குள் உள்ள ஒரு கழிவறைக்குள் புகும் அசின் "அய்யோ! சவ்ச்சாலயம்" என்று செத்துப் போன சமஸ்கிருதத்தில் கொஞ்சலாக கத்த...
"சரி விடுங்க அதுவும் ஆலயந்தானே" என்னும் கமலின் நக்கல் வசனங்களுக்கும்

"எனக்கு சாமி தான் முக்கியம்", என்று அசின் ஓட...
"எனக்கு மனுசங்க தான் முக்கியம்" என்று கமல் விபத்து நடந்த இடத்துக்கு ஓட...

தூணியிலயும்,துரும்பிலயும் இருக்கிற உன் கடவுள் பாண்டிச்சேரியில் இருக்கா மாட்டாரா?

கடவுள் இல்லைன்னு நான் எங்க சொன்னேன் இருந்தா நல்லா இருக்கும்னுதானே சொல்றேன்(எப்படி கமல் நீங்க மட்டும் இப்படி இதமா சொல்றீங்க?)

என்ற எல்லா வசனங்களுக்கும் பெரியார் திடல் வழங்கும் விருது, நிச்சயம்!
"உங்கள் சாதனையை,உங்களால் தான் முறியடிக்க முடியும்."

தசாவதாரம் படம் பற்றி....

தமிழர் தலைவர் "கி.வீரமணி"


சேதி:


கடவுளை இல்லை. மனிதர்களைப் பற்றி கவலைப் படுபவர்களால் மட்டுமே இந்த பூமியை காப்பாற்ற முடியும்.


_ஆதிசிவம்,சென்னை.

Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics