

காந்தி தேசமே....!
கள்ள நோட்டில்
உன் படத்தை அச்சடித்து
உன் பிறந்தநாளை
கொண்டாடினோம்....!
(சோனியா )காந்தி என்று
உன் பெயர் வைத்து
நாங்கள் சிங்களனுக்கு
ஆயுதம் அனுப்பினோம்...!
உன் பிறந்தநாளில்
ஒயின் ஷாப் விடுமுறையாம்...
கூடுதலாக
ரூபாய் நோட்டு கொடுத்து
பதுக்கல் சரக்கு வாங்கி...
தண்ணி அடிச்சோம்...
எல்லா இம்சைகளையும்
கண்ணை மூடி
ஏற்றுக் கொள்ளும்
எங்களுக்கு ....!
போதை தெளிந்தாலும்
எங்களுக்கு
புத்தி தெளியவில்லை....!
காந்தி....!




பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
