"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Sunday, May 10, 2009

என் தேசத்து இளைஞனுக்கு...



திரையரங்க கடைவாசலில்...

"விஜயை மீட் பண்ணணுமா? coke குடிங்குங்க"

என்று சொல்லும் விளம்பரப் படத்தில் நம்ம அண்ணன் "இளைய தலைவலி"விஜய் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

"இந்த கோக் மாதிரி கூல்டிரிங்ஸில பூச்சிக் கொல்லி மருந்துங்க அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல கலந்திருக்கானுங்களாம்.அதெல்லம் இவனுக்குத் தெரியாது? இந்த மயிரும் நாளைக்கு அரசியலில குதிக்கப் போகுதாம். எப்படியா இந்த நாடு உருப்படும்?" என்று யாரோ சொல்லி நகர...

நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

சொன்னது யார் என்று அறிய முயற்சித்தேன், முடியவில்லை.

எனக்கு கடைசியாக பார்த்த படம் ஞாபகத்திற்கு வந்தது.

அந்த படத்தின் பெயர்
"யாவரும் நலம்."

படம் பார்த்து அசந்துட்டேன் போங்க...

செத்துப் போனவங்க எல்லாம், ஒரு குறிப்பிட்ட வீட்டு டிவியில மட்டும்,அதுவும் சரியா ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அவங்க வீட்டு டிவியில மட்டும் வர்ற தொடர் நாடகத்தில நடிக்கும் கதாபத்திரங்களா வருவாங்களாம்...

(சிரிக்காதீங்க)

காதுல பூ வைக்கிறத கேள்விப் பட்டிருக்கோம்.இந்த படத்தில தாராளமா டிவி கேபிள் வயரையே சுத்தி வீட்டுக்கு அனுப்புறானுங்க.

இந்த மாதிரி ஹைடெக் பிச்சைக்காரனுங்க இணையத்திலும் புகுந்தாச்சு.

அதுங்க எல்லாம் , வித விதமா இருக்கிற ஏதாவது ஒரு கடவுள் பெயரில , ஏதாவது ஒரு வாய்க்குள்ள நுழைய முடியாத பேர்ல இணைய தளத்த ஆரம்பிக்குதுங்க. அந்த கோயில் கணக்குல கிரிடிட் கார்ட் வழியா , பணம் கட்டினா,நம் வீட்டுக்கே பிரசாதத்தை அனுப்பி வைக்குங்களாம்.

நாம அத வாங்கி வீட்லேயே மொட்டைய போட்டுட்டு,நாமத்த நெத்தியில பூசிக்கிட்டு, அதுங்க கொடுக்கிற பிரசாதத்த வாய்ல வைச்சுக்கிட்டு "பக்தி பழமா" மாறி உக்காந்துகலாமாம்.

"இன்னும் எத்தனை நாளக்கிடா, எங்கள ஏமாத்துவீங்க?..."


"மரியாதை" என்ற படத்திற்குப் போயிருந்தேன்.

"இயக்குநர் விக்ரமன்" என்றால் கண்ணை மூடிக்கொண்டு வரவேற்கிற ஆள் நான்.

அதே மாதிரி அவரின் படப்பாடல்களை யோசிக்காமல் வாங்கிக் கேட்கிற ஆட்களில் நானும் ஒருத்தன்.

அவர் மேல் வைத்திருக்கிற நம்பிக்கை தான் காரணம்.

கதைக்காக அங்க,இங்க, ஏன் இங்கிலீஷ் படத்தப் பார்த்து காப்பியடிக்கிறது. அதெல்லாம் கெடையாதுங்க.

மனுசன் தன்னம்பிக்கையான ஆளு...

தன் படத்தை தானே காப்பியடிச்சுக்குவார்.

"வானத்தைப் போல,உன்னை நினைத்து...,சூர்யவம்சம்"...ன்னு பெரிய பட்டியலே நீளுது மீதிய நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க.

ரெண்டு விஜயகாந்த் இருக்காங்க,ஆனா உண்மையிலே ஹீரோ யாருன்னா நம்ம ரமேஷ் கண்ணா தான்!

படம் முழுக்க சிரிப்பு வெடிய கொளுத்திப் போட்டுக்கிட்டே போகிறார்.ஆங்கில படப்பாணி, ஒரே மாதிரி சிரிப்புத் தான் என்றாலும்,ரசிக்க,சிரிக்க முடிகிறது.

ஆனந்த விகடன், குமுதம் மாதிரி நாட்டுப் பற்றோடு வெளி வருகிற தேசிய வார ஏடுகளில் வந்த பழைய குப்பைகளை, அர்த்தமுள்ள நகைச்சுவைகளை(சிரிக்காதீங்க....!).

எப்படி ஒரு குப்பையும் ஒரு கலைஞனின் கைப் பட்டால் கலைப் பொருளாகுமோ,அந்த அதிசயம் இந்த படத்திலும் நடந்திருக்கிறது.

சமூகம் பெண்ணை நடமாடும் அழகுநிலையமாகவும், ஆணை பணம் கொட்டும் ATM இயந்திரமாகத் தான் பார்க்கக் கற்றுத் தருகிறது.

காதல் கருகி,வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதில் வாழ்க்கையும், மனசும் கருகிப் போன என் தேசத்து இளைஞனுக்கு தனக்கு தெரிந்த மொழியில் ஆறுதல் சொல்லிப் போகிறது,இந்த படம்.

தனக்குள்ளே சிரிக்க, அழுகிற, பூப்பூக்கிற படைப்புக்கு சொந்தக்காரன், நம்ம விக்ரமன்.

அவன் படப்பாடல்களைக் கேட்கும் போது,காதுகள் இருந்த இடத்தில் காதுகள் மறைந்து,பூக்கள் பூக்கும்.

வீட்டில் எல்லோரையும் துரத்தி எங்காவது அனுப்பி விட்டு கதவு சன்னல்களை மூடிவிட்டு இவன் படப்பாடல்களை மட்டும் ஒலிக்க விட்டு கேளுங்கள்...

ரோசாபபூ... சின்ன ரோசாப்பூ...(படம்-சூர்ய வம்சம்) ஒலிக்க விட்டு ஒரு பிறவிக் குருடனை கேட்கச் சொல்லுங்கள்.அவனையே ஒரு ரோஜாப் பூவாக மாற்றும் சக்தி அந்த பாடலுக்கு உண்டு.

ஏனோ இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் பெருத்த ஏமாற்றம்.

வழக்கம் போல விக்ரமன் படங்களில் வரும் , மிகைப் படுத்தப்படாத வில்லன்களே இதிலும் .

காதலித்து ஏமாற்றும் மீனா கதாபாத்திரத்தின் மீது கூட கடைசியில் பரிதாபந்தான் வருகிறது.

நல்ல உத்தி!


அம்மாவின் சமையலை கிண்டலடிக்கும் காமெடி சற்று அதிகமாகவே வருவதால்,அம்மாவோடு படம் பார்த்தால்,உங்கள் அம்மாவின் கைகள் உங்கள் முதுகில் படமுடியாத தூரத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அப்பத்தான் தப்பிக்க முடியும்.

பெற்றோர்களே, உங்கள் விருப்பங்களை உங்கள் பிள்ளைகள் மேல் திணிக்காதீங்க.அவர்களை,அவர்களாகவே சுயமாக சிந்திக்க,முடிவெடுக்க விடுங்கள்.

பெண்கள் வெறும் சமையல் செய்யும் இயந்திரமல்ல,மனுசி!...

என்பது மாதிரியான நல்ல வசனங்களுக்கு பஞ்சமில்லை.

பல நேரங்களில் நாடகத்தனம் தலை தூக்கினாலும், அது ஒன்றும் குறையாகத் தோன்ற வில்லை.

கதாநாயகனே திரையில் தோன்றி கஞ்சா ( நான் கடவுள்) கேட்கிறான்.அப்படி ஒரு கிறுக்கு வேகத்தில் தமிழ் திரையுலகம் பயணிக்கும் போது...

அம்மா( விக்ரமன்) ஊட்டும் பால் நிலாச் சோறு எத்தனை பேருக்குப் பிடிக்கும்? என்று தெரியவில்லை.



சில கல் தொலைவில் நடக்கும் தமிழீழ மனிதப் படுகொலைகளைப் பற்றி,ஒரு சின்ன நேரடி, மறைமுக காட்சியோ,வசனமோ வைக்காமால் படங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வெளிவருகிறது...!

"போங்கடா நீங்களும், உங்க கலைகளும்...மனுசங்களாடா நீங்க...?"






இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல..
http://www.beyouths.blogspot.com/2009/05/blog-post_10.html#links


எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA


Share/Save/Bookmark

Saturday, March 14, 2009

பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள்

பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ

+

"நான் கடவுள்" விமர்சனம்




எல்லோரும் திருட்டு CD வாங்கியாவது நான் கடவுள் படத்தைப் பார்த்து தங்களின் சனநாயகக் கடமையை நிறைவேற்றியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தலைவன் என்ற தகுதி கூட இல்லாதர்களை அரசியல் தலைவராக்கி,நடிக்கவே தெரியாதவர்கள் முன்ணனி நடிகனாக்கி கோவில் கட்டிக் கொண்டாடும், நாடு...

நம் தமிழ்நாடு என்பதால்...

தமிழர்கள் மீதான கோபம் உங்களைப் போலவே எனக்கும் கொஞ்சம் சற்று அதிகமாகவே உண்டு.




அப்படி என்ன தான் இருக்கிறதாம்,நான் கடவுள் படத்தில்...?

பணக்கட்டுத் தந்தால் புல்லுக்கட்டையையும் தின்னத் தயார் என்று கவிப்பேரரசுகள் வாழ்கிற தமிழ்த் திரைப்படத்துறையில், காசுக்காக கண்டதையும் எழுதிப் பிழைக்க மாட்டேன் என்று ஒதுங்கியிருக்கும் கொள்கைச் சிங்கம் கவிஞர் அறிவுமதி கண்டுபிடிப்பு, இயக்குநர் பாலா.

எதையும் நேரடியாகச் சொல்லாமல், உள் மறைந்து நின்று முகத்தில் அறைந்து கருத்துச் சொல்வது பாலாவின் பாணி.








கேமிராவில் கோவில் கோபுரத்தைக் காட்டி மணியாட்டி ஆரம்பிக்கிற படத்தின் துவக்கக் காட்சி இதில் இல்லை.

மூக்கைத் துளைக்கிற பிணம் எரிகிற நாற்றத்தோடு படம் துவங்குகிறது.

தமிழ் சினிமா இலக்கணத்தை உடைக்கிற,மூடநம்பிக்கையை உடைக்கிற,முதல் காட்சி, முதல் புரட்சி.

சோதிடத்தை நம்புகிற எல்லோரையும் முகத்தில் அறைவது,இரண்டாவது புரட்சி.

பெண் ஆணை அறைவது மூன்றாவது புரட்சி.

இப்படித்தான் படத்தின் ஆரம்பமே நமக்குள் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறது,மரியாதையோடு...

சாமியார் வேஷம் போட்டு கடவுள் கருத்துக்களை கேலி பேசும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வசனங்கள் ...

படம் நெடுக...

பாலாவின் மூன்று வருட உழைப்பு வீண் போகவில்லை.





மகன் பிறந்தால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்ற சோதிடனின் பேச்சைக் கேட்டு சிறுவயதிலேயே காசியில் விட்டு வந்த மகனை இளைஞனான பிறகு அவனை படாத பாடுபட்டு தேடி வீட்டுக் கூட்டி வருகிறார், தந்தை.

பிச்சைக்காரர்களை வைத்து தொழிலதிபராகும் நபர்களை போட்டுத் தள்ளி விட்டு மீண்டு...

குடும்பச் சூழலோடு ஒத்துப் போகாதா வாழ்க்கை அவனுடையது என்பதை தன் குடும்பத்துக்கு உணர்த்தி விட்டு...

அந்த சாமியார் இளைஞன் மீண்டும் பழைய வாழ்க்கைக்கே திரும்புவது...

அவ்வளவு தாங்க கதை.


இந்த படத்தை அம்பானிகள் பார்த்துத் தொலைத்தால்,பிச்சைக்காரர்களின் பிழைப்பில் கூட மண் விழும் அபாயம் இருக்கிறது. பிச்சையெடுப்பதையும் பிஸினெஸ் உத்திகளில் ஒன்றாக்கி...

கிளைகளைப் பரப்பி இருப்பார்கள்,பரப்பி...





"நானே போலீசுக்கு பயந்து இங்க வந்து மலையில ஒளிஞ்சுக்கிட்டு இருக்கேன்" என்று சாமியார் பேசுவது.

பிச்சைக்காரர்களை வைத்து பிச்சையெடுக்கும் முதலாளியின் கையாள் முருகன் கோவிலுக்கு சாமி கூம்பிட வரும்போது...

"கோவில் உண்டியல விட உனக்குத் தான் நல்ல வசூலாமே"... என்ற நக்கல்...

"இவன் செய்யிற பாவத்துக்கு ஊர்ல இருக்கிற எல்லா சாமிங்களையும் கும்பிட்டாக் கூட தீக்க முடியாது "என்று கையாளை கேலி பேசுவது ...

"கையும் காலும் இல்லாம கல்லாக உட்கார்ந்திருந்தால், அவன் என்னடா சாமி?" என்று மாங்காட்டு சாமியாரை அகோரி சாமியார், ஒரு பிடி பிடிப்பது...

கண்ணுக்கு முன்னால் தப்பு நடந்தால், தட்டிக் கேள்... அப்படிக் கேட்டால் நீயும் கடவுள் தான், என்று..

வழக்கம் போல...

உலக சினிமாவுக்கு போட்டி போடுகிற தகுதியோடு,விருதுக்குரிய, அதே சமயம் வசூலை வாரிக் குவிக்கிற, பாமர மக்களின் இரசனையை உயர்த்துகிற, கடினமான விஷயங்களையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான திணிக்கப்படாத, ஆரோக்கியமான வசனங்கள்,கலையம்சமான காட்சி அமைப்புகள், என...

தன்னுடைய மற்ற எல்லாப் படங்களையும் விட சற்று அதிகமாகவே உடுக்கை ஒலி அதிர சொல்லிப் போயிருக்கிறார்,பாலா.





படத்தில் வருகிற சண்டைக் காட்சிகளில் விழும் அடி நம் மேல் விழுகிற அடியாக பலமாக விழுகிறது. சண்டைக் காட்சிக்காக பல்லை உடைத்துக் கொண்டதாக அறிந்தேன். மிரட்டல்.



படத்தில் வரும் கதை மனிதர்கள் அழுக்காக இருக்கிறார்கள்...

உழைப்பின் நிறம் அழுக்கு...

ஆம்...!

அழுக்கு ஜெயிக்கும்...!

இந்த உண்மையை ஓங்கி வானத்தில் எகிறிக் குதித்து உரக்கச் சொல்லியிருக்கிறார்,பாலா.

அதில் வெற்றியும் பெற்று விட்டார்...

பாலா...!

_ஆதிசிவம், சென்னை

பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ படம் பார்க்க....












இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...

http://beyouths.blogspot.com/2009/03/blog-post_14.html#links


எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA

Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics