"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Sunday, October 5, 2008

நீ இருந்த இடம்-கவிதை
நீ இருந்த இடம்


மனசுக்கும்
அறிவுக்கும் போட்டி நடந்தது...!

தூரத்தில்
இருக்கும் காதலை
யார் போய்
முதலில் சேர்வதென்று...

அறிவு முதலாவதாக
வந்து காதலைக்
கூட்டிப் போய் விட்டது!

கடைசியாக இரத்த வியர்வையோடு
வந்த மனசு
காதல் இருந்த இடத்தில்
கண்களில்
இரத்தம் வர அழுது தீர்த்தது...!

"எப்படித்தான் மனசே
இல்லாதவனோடு
காலம் முழுவதும் வாழப் போகிறாளே? "


(அறிவு இல்லாமல் கூட வாழலாம்.அன்பு,நல்ல மனசு இல்லாமல் இருத்தலாகாது)


_ஆதிசிவம்,சென்னை.


Share/Save/Bookmark

“கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:

“கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:
------------ --------- --------- --------- --------- -----


உலகளாவிய பங்கேற்பில் சென்னை, மதுரை, புதுகைக்குப் பரிசுகள்!வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள்! புதுக்கோட்டையில் வாழ்ந்து மறைந்த பிரபல மக்கள் எழுத்தாளர் கந்தர்வன் நினைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஆண்டுதோறும் சிறுகதைப் போட்டி நடத்திப் பரிசுகள் வழங்கி வருவது தெரிந்ததே. இரண்டாவது ஆண்டாக நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்த ஆண்டு ‘கல்கி’உள்ளிட்ட பல்வேறு அச்சிதழ்களிலும், திண்ணை, பதிவுகள், கீற்று, மென்தமிழ் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் போட்டி அறிவிப்பு வெளிவந்ததால், உலக அளவிலான பங்கேற்புடன் 450க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருந்தன என்று, போட்டி அமைப்பாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளருமான கவிஞர் நா.முத்து நிலவன் முன்னிலையில், சங்கத்தின் பொதுச்செயலர் ச.தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சிறுகதைப் போட்டியில் உலகளாவிய பங்கேற்பு! கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 382 கதைகள் வந்திருந்தன. பரிசு வழங்கும் விழாவில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினார். இந்த -இரண்டாம்- ஆண்டில் நடத்தப்பட்ட போட்டிக்கு, 450க்கு மேற்பட்ட கதைகள் வந்திருந்தன. உலகளாவிய பங்கேற்பும் கூடுதலாக இருந்தது. தமுஎச.வின் மாநில நிர்வாகிகள் வழிகாட்டுதலில, பிரபல எழுத்தாளர் உதயசங்கர் தலைமையில் 8பேர் கொண்ட நடுவர்குழுவினர். 15 நாட்களுக்கும் மேலாகக் கதைகளைப் பரிசீலித்து முடிவுகளை தெரிவித்தனர். இம்முடிவுகள், அக்.2ஆம் தேதி மதுரையில் நடந்த மாநிலச் செயற்குழு மற்றும் தமுஎசவின் மாநிலத்தலைவர் பேரா.இரா.கதிரேசன் ஆகியோர் ஒப்புதலுடன் அறிவிக்கப் படுகிறது. தேர்வு செய்யப் பட்ட கதைகளும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களும் :

முதல் பரிசு ரூ.5,000 : “வெட்டிவேலை” : ம.தி.முத்துக்குமார், சென்னை19 –பேசி:9884217447

இரண்டாம் பரிசு ரூ.3,000 : "தாத்தாவின் டைரிக்குறிப்புகள்" ச.சுப்பாராவ்,மதுரை-14--பேசி:9442182038

மூன்றாம் பரிசு ரூ.2,000 : " பொதுத்தொகுதி"சு.மதியழகன், ஆலங்குடி, புதுகை(மாவ)--பேசி:9842910383


தலா ரூ.250 மதிப்புள்ள பரிசுகளைப்பெறும் இதரகதைகள் விவரம் :


1.’கிளாவரில் தொலைந்த சீட்டுக்கட்டுகள்’–லஷ்மி சரவணக்குமார், சென்னை-19 பேசி: 97905774602.

’காந்தாரி’- ஆர்.ஸ்ரீதரன், மதுரை-2 --- பேசி: 9443060431 3.’கூத்துப் பொட்டல்’ - தீபம் முத்து, திருச்சி --- 9788064304

4.’பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது’ – கலைபாரதி, மன்னார்குடி --- பேசி: 99431799095

’மழை’ –லெஷ்மி மோகன் சென்னை-28 --- பேசி: 99621293336.

’சீக்கு’ –தாண்டவக்கோன் திருப்பூர் -- பேசி: 93602542067.

’வலை’-பெரணமல்லூர் சேகரன், தி.மலை மாவ. --- பேசி: 94421452568.

’கருவேல முட்கள்’ – வி.ர.வசந்தன், திருச்சி --- பேசி: 98941246839.

’கடைசி நாள் படுக்கை’ – எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை-24 -- பேசி:044-24832664தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்த கதைகளுக்கான “சிறப்புப் பரிசு” விவரம் : 1.

1’ஒருவகை உறவு’ – கே.எஸ்.சுதாகர், ஆஸ்திரேலியா,

2.’காணமட்டும் சுகமான கனவுகள்’ – பொன். கருணாகர மூர்த்தி, ஜெர்மனி,

3.’யார் குற்றவாளிகள்?’ – முகம்மட் முனாஸ் பாத்திமா, இலங்கை,

4’அப்பாவின் கண்ணம்மா’ – குரு.அரவிந்தன், கனடா,

5.’நீ நான் நேசம்’ – எம்.ரிஷான் ஷெரீப், கத்தார்,

6.’பாம்புத் தலை’- மைதிலி சம்பத், செகந்திராபாத்.-- ஆக மொத்தம் 18 கதைகள் தேர்வு செய்யப் பெற்றுள்ளன. இவற்றை ஒரு தொகுப்பாக அச்சிட்டு, வரும் திசம்பர் மாதம் சென்னையில் நடக்க உள்ள தமுஎச மாநில மாநாட்டின் போது நூலாக வெளியிட உள்ளதாக நா.முத்து நிலவன் தெரிவித்தார். பரிசுத் தொகை ஏற்பு:மேற்காணும் பரிசுகளுக்கு உரிய தொகையில் ரூ.10,000ஐ திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் அவர்களும், ரூ.5,000ஐ கீரனூரைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் கணபதி சுப்பிரமணியன் அவர்களும் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிட்டுப் பாராட்டத் தக்க செய்தியாகும் பிரபஞ்சன், சீமான், நா.முத்துக்குமார், பங்கேற்கும் பரிசளிப்பு விழா!புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில்; பிரபல எழுத்தாளரும் -சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான பிரபஞ்சன், திரைப்பட இயக்குநர் சீமான், திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக் குமார், கவிஞர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் பாலா, ஆகியோருடன் தமுஎச பொதுச்செயலர் ச.தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மேற்கண்டவாறு, பரிசளிப்பு விழாவும், மாவட்ட மாநாடும், ‘புதுகை பூபாளம்’குழுவினர்க்குப் பாராட்டு விழாவும் எதிர்வரும் 17,18ஆம் தேதி(வெள்ளி சனிக்கிழமை)களில் விரிவான அளவில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளன. பிரபல எழுத்தாளர் தூத்துக்குடி உதய சங்கர் தலைமையில் எழுத்தாளர்கள் அல்லி உதயன், கடலூர் ஜீவகாருண்யன், கோவை கோதண்டராமன், திருப்பெருங்குன்றம் வெண்புறா, சென்னை மணிநாத், சேலம் ஷேக்அப்துல்லா, விமர்சகர் மு.அசோகன் ஆகிய 8 பேர், சிறந்த கதைகளைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் பணியாற்றியதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் நா.முத்து நிலவன் தெரிவித்தார்துணைச்செயலர் கவிஞர்ஜீவி, மாவட்டத் தலைவர்கள் தங்கம்மூர்த்தி, ரமா.ராமநாதன், பிரகதீஸ்வரன் நீலா, மதி, தனிக்கொடி, பேரா.செல்வராசு,ராசி.பன்னீர்செல்வன், புதுகை சஞ்சீவி முதலான விழாக்குழுத் தலைவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை விரிவாகத் திட்டமிட்டுச் செய்து வருகிறார்கள்.நன்றி!

வணக்கம்.

தங்கள் உண்மையுள்ள, நா.முத்து நிலவன்


கந்தர்வன் நினைவு-தமுஎச-சிறுகதைப் போட்டி-2008 அமைப்பாளர்
மற்றும்,
த.மு.எ.ச. மாநிலத் துணைப் பொதுச்செயலர்.
96.சீனிவாச நகர் 3ஆம் தெரு,புதுக்கோட்டை – 622 004
cell : +91 9443193293
E-mail: naamuthunilavan@ yahoo.co. in
_ஆதிசிவம்,சென்னை.
Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics