"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Wednesday, October 1, 2008

வெடிகுண்டு!-கவிதைவெடிகுண்டு


மதவாத நச்சுப் பாம்பு
முட்டையிட்டது...
வெடிகுண்டு!

உன் குழந்தைக்கு
என் பெயரை
வைக்கப் போவதாகச் சொன்னாய்
போதும் நிறுத்து
உன் தண்டனையை
என்னோடு...!

என்னை விட்டால்
வேறு பெண்ணே
கிடைக்க மாட்டாளா?
என்று கேட்டாய்...

என்ன செய்வது
என்னை
ஒரு தாய் தானே சுமந்து பெற்றாள்...!


_ஆதிசிவம்,சென்னை.Share/Save/Bookmark

வெடிகுண்டுகளும் வெறிநாய்களும்
வெடிகுண்டுகளும் வெறிநாய்களும்

உங்கள் கண்ணுக்கு முன்னால் போகும் பிள்ளையார் ஊர்வலத்திற்கும்,பெங்களூர்,மும்பை, டில்லியில் வெடித்த வெடிகுண்டுகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற செய்தியை உங்களால், நம்ப முடிகிறதா?

நம்புங்கள், அதுதான் உண்மை!

இந்தியா, இந்து மத நாடு என்கிறது. இந்து மத வெறி நாய்களின் கூட்டம். அது முஸ்லிம்களைத் தாக்குவோம், கிறித்துவர்களைத் தாக்குவோம் என்கிறது.

இந்து மதம் என்றால் அர்த்தம் என்னவென்று முதலில் பார்ப்போம்!

இந்து மதத்தின் உண்மையான பெயர் பிராமண மதம் என்பதாகும். பெரியார் பாணியில் சொன்னால் இந்து மதத்தின் உண்மையான பெயர் பார்ப்பன மதம் ஆகும்.

ஒரு முஸ்லிம் குரான் படித்து தேவையான தகுதியை வளர்த்துக் கொண்டால் மசூதிக்கு நிர்வாகியாகலாம்,ஒரு கிறித்துவன் பைபிள் படித்து அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் கிறித்துவ கோவிலின் பாதராகலாம்.
ஆனால் ஒரு இந்து வேதம் படித்து, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் இந்து மத கோவிலுக்கு அர்ச்சகராக , நிர்வாகியாக முடியாது.அதற்கு ஒரே தகுதி பிராமண சாதியில் பிறந்திருக்க வேண்டும் என்கிறது,வெட்கம் கெட்ட,கேவலமான இந்துமதம். இப்படி கேடு கெட்ட மதம் உலகில் வேறு எங்கும் இருக்கிறதா, இருந்தால் சொல்லுங்கள்?

ஆண்டவனுக்கு முன்னால் அனைவரும் சமம் என்கிறன எல்லா மதங்களும்.ஆனால் இந்து மதம் அதை ஒப்புக் கொள்வதில்லை.பிராமணர்கள் மட்டுந்தான் உயர்ந்தவர்கள்.மற்றவர்கள் கீழ் சாதியினர் என்கிறது, தினம் தினம், இந்து மதம்.

இந்தியாவில் இருக்கிற முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் மதம் மாறிய இந்தியர்கள்.
இவர்களைத்தான் அந்த இந்து மத வெறி நாய்கள் குறி வைக்கின்றன!

என்றைக்கு மனிதன் கோவிலுக்குப் பூட்டுப் போட்டுப் பாதுகாத்தானோ, அன்றைக்கே கடவுள் நம்பிக்கை செத்துப்போன இரகசியம் உங்களுக்குத் தெரியுமா? தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுளால் உங்களை எப்படிக் காப்பாற்ற முடியும், சிந்தியுங்கள்!
கடவுள் என்று ஒன்று இருந்தால் எல்லோரையும் அவர் காப்பாற்றட்டும். மத வெறி நாய்களே நீங்கள் யார் கடவுளைக் காப்பாற்ற?

ஓ... மனிதன் படைத்த கடவுளை மனிதனே காப்பாற்றுகிறான் என்ற உண்மையை ஊருக்கும்,உலகத்துக்கும் வெளிச்சம் போட்டுக்காட்டவா?

காந்தி இந்து- முஸ்லிம் ஒற்றுமை வலியுறுத்துகிறார் என்று காந்தியைக் கொன்றது, இந்து மத வெறியன் தான் என்று நிரூபிக்கப் பட்ட பிறகும் இன்று வரை காந்தியைக் கொன்றது நாங்கள் தான் என்று ஒத்துக் கொள்ளும் தைரியம் இல்லை, இந்த பேடிகளுக்கு...!

பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம், பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம் கோவில் இருக்கும் தெருப் பக்கந்தான் ஊர்வலம் போவோம் என்று போய் மசூதிக்குள் கல்லை விட்டு எறிவது,கிரிஸ்தவ கோவில்களைத் தாக்குவது போன்றஅந்தக் கூட்டத்தின் நாற்றமடிக்கும் சாதனைப் பட்டியல்கள் நீளுளுளுகின்றன.......

இந்த இந்து மதவெறிநாய்களின் ஆட்டம் பார்த்து தான் எதிர்வினை என்ற பெயரில் முஸ்லிம் மதவெறி நாய்கள் நாடு விட்டு நாடு வந்து, நாட்டுப் பற்றை விதைக்காத,இந்த தேசத்தில் மதத்தின்,கடவுளின் பெயரால் ஆட்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி தருகிறார்கள், வெடிகுண்டு வெடிக்க நாட்டுப் பற்றை விதைக்க வேண்டிய பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்கள் அமெரிக்கா முன்பு மண்டியிட்டு கிடக்கும்போது, சாதாரண இந்திய முஸ்லிம் குடிமகனுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?

அந்தியர்களை துரத்தியடித்த அதே காங்கிரஸ் கட்சி இன்று அந்நிய பெண் சோனியா காந்தி,அமெரிக்கா என்று அடிமைப்பட்டுக் கிடக்கிற அசிங்கம் இங்கே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க கம்பெனிகள் அங்கே அமெரிக்காவில் மூடப்பட்டால் ,இங்கே இந்தியர்கள் உடனே வேலை இழந்து நடுத்தெருவுக்கு வரும் அதிசயத்தை தான் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, மானங்கெட்ட காங்கிரஸ் கட்சி.

இந்து மதத்தின் பெயரால் ஏய்த்துப் பெண்களை சூறையாடுகிற சாமியார்களாக பிரேமானந்தா முதல் காஞ்சி காமக்கேடி சங்கராச்சாரியார்கள் வரை பிடிபடுகிறார்கள்.போலீஸில் பிடிபடாதவனை சாமியார் என்றும், பிடி பட்டவனை போலி சாமியார் என்றும் வருணிக்கின்றன, பத்திரிக்கைகள்.

மதத்தின் பெயரால்,கடவுளின்  பெயரால் நடக்கின்ற தவறுகளை பெரியார், பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்)இயக்கங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டும் போது, அந்த இந்து மதவெறி நாய்கள் "அய்யோ! இந்து மதத்தையும்,இந்துக்களையும் புண்படுத்துகிறார்களே!" என்று ஊளையிடுகின்றன.

இந்திய அரசியலில் இரண்டே இரண்டு அணி தான்.ஒன்று மதத்தை தலையில் வைத்து ஊர்வலம் போகிற அணி, இன்னொன்று அந்த மதவாதத்தை எதிர்க்கிற அணிஅந்த மதவெறிநாய்களை மண்டையில் "நச்"சென்று அடிக்கிற எதிர்சக்தியாக பெரியார் இயக்கம், அதைச் சார்ந்த இயக்கங்கள், பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்)இயக்கங்கள், அதைச் சார்ந்த இயக்கங்களே அந்த சாதி,மத வெறிபிடித்த வெறி நாய்களுக்கு சாவுமணி அடிக்கிற சக்தியாக இருக்கின்றன.

நாளைக்கே உங்கள் வீட்டு வாசல் முன்பு நின்று அத்வானி,வாஜ்பேய்,இராம.கோபாலன்,இல.கணேசன் ,துக்ளக் சோ எனப் பல பெயர்களில் உங்கள் வீட்டுக்கு முன்னால் நின்று ஓட்டுப் பிச்சைக் கேட்டுவருவார்கள்மதத்தின் பெயரால்,கடவுளின் பெயரால்,சாதியின் பெயரால் மனிதர்களுக்கு எதிராக கிளம்பும் எந்த சக்தியும் சிலுவை சுமந்தோ,முஸ்சுலிம் குல்லாய் போட்டோ,  எந்த வேஷம் போட்டு வந்தாலும், அந்த  மத நச்சுப் பாம்புகளை தயங்காமல் தலையில் தட்டி நசுக்கித் தூக்கியெறியுங்கள்...!

நன்றி!

_ஆதிசிவம்,சென்னை.


Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics