"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Friday, July 25, 2008

தினத்தந்தி முதலிடம் வந்த கதை -பாகம் 2பாகம் 2

தினத்தந்தி முதலிடம் வந்த கதை"சேட், உன்னிடம் அடகு வைக்க என்னிடம் எதுவுமில்லை. இருந்ததையெல்லாம் உன்னிடந்தான் அடகு வைத்திருக்கிறேன்.என்னை நம்பியிருக்கும் ஊழியர்களுக்கு இன்று நான் ஊதியம் கொடுத்தே ஆக வேண்டும்,இந்த வெள்ளை பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தருகிறேன்.சேட் நீ, இதில் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்.நான் கட்டுப் படுகிறேன்!" என்றார்,ஆதித்தனார்.

அன்றே சம்பளம் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு அது மாதிரி சம்பவம் அவர் வாழ்க்கையில் வரவே இல்லை. எல்லாம் வெற்றிமுகம்,ஏறுமுகம் தான்!

ஒரு நாள் நள்ளிரவில் அமெரிக்க சனாதிபதி கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட
செய்தி வந்தது.ஏற்கனவே அச்சான பிரதிகள் நிறுத்தப்பட்டு,கென்னடியின் மரணச் செய்தியுடன் பத்திரிக்கை அச்சிடப்பட்டு எல்லா ஊர்களுக்கும் அனுப்பப்பட்டது.

மறுநாள் அந்த செய்தி தினத்தந்தியில் மட்டுமே இடம் பெற்றிருந்து.எந்த ஆங்கில,தமிழ் தினசரியிலும் அச்செய்தி பிரசுரமாகவில்லை!

அதைப் போலவே நேருவுக்குப் பிறகு பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியின் மரணச் செய்தி,இரவு 3 மணிக்கு வந்தது.இச்செய்தி தினத்தந்தியில் மட்டுமே முதல் பக்கம் எட்டுப் பத்தி செய்தியாக வெளி வந்தது.பெரும்பாலன பத்திரிக்கைகள் தவற விட்டன.சில பத்திரிக்கைகள் மட்டும் கடைசி செய்தியாக சிறிய அளவில் பிரசுரித்தன.

கென்னடி சுட்டுக் கொன்ற செய்தியை படித்து விட்டு, "இந்த செய்தியை ஏன் இரவிலேயே எனக்கு சொல்ல வில்லை?", என்றார்.

"அய்யா, அந்த செய்தி இரவு 2 மணிக்குத் தான் எங்களுக்கே கிடைத்தது. உங்கள்
தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்று தான் சொல்ல வில்லை", என்றார்,ஊழியர்.

"தூங்குகிறவன் பத்திரிக்கையாளன் அல்ல. இதை எழுதி கண்ணில் படும்படி,மேசை மீது ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள்" , என்றார்,ஆதித்தனார்.குமுறும் எரிமலையாய்...ஒரு முறை ஒரு கிராமத்து தந்தி ஏஜெண்டு ஆபிசுக்கு வந்திருந்தார்.அந்த விற்பனைப் பிரிவு குமாஸ்தா அவரை நிற்க வைத்தபடி பேசிக் கொண்டிருப்பதை ,தற்செயலாக தனது அறையில் இருந்து வந்த அய்யா,இதை பார்த்து விட்டார்.

உடனே அந்த ஏஜெண்டை தன் அறைக்கு அழைத்து, நாற்காலியில் உட்காரச் சொன்னார்
.பின்னர் விற்பனைப் பிரிவு குமாஸ்தாவைக் கூப்பிட்டு, "இவர் விற்றுக் கொடுக்கும் காசில் இருந்து தான் நமது பத்திரிக்கை நடக்கிறது.அதில் தான் உங்கள் சம்பளமும் அடங்குகிறது", என்றார்.

அந்த குமாஸ்தா ,தன் நடத்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

2 ஆவது உலகப் போர் நடந்த சமயம்.

"ரஷியா,ஜெர்மனி,இங்கிலாந்து என்று தினமும் செய்தி போடுறீங்க.அவை எங்கே இருக்கு? ", என்று ஆதித்தனார்,அய்யா கேட்டார்.

"இந்தியாவுக்கு மேற்கே", என்று தயக்கமாக பதில் வந்தது.

"சரி,அந்த நாடுகள் எங்கே இருக்குன்னு சாதாரண மக்களுக்கு புரியுமா,வாட்ச்மேன் கிட்டே முதலில் கேட்டு வாங்க", என்றார்,அய்யா.

"வாட்ச்மேன் தெரியவில்லை", என்று சொல்லி விட்டார்.

"பார்த்தீங்களா!யாருக்கும் புரியல.எந்த நாடு இந்தியாவுக்கு எந்தப் பக்கம் இருக்கு,எத்தனை மைல் தூரம்ன்னு எழுதி மேப் போடுங்க" ,என்றார்,அய்யா.

அடுத்த நாள் தந்தியின் விற்பனை இரண்டு மடங்கானது!

கென்னடி சுட்டுக் கொல்லப் பட்டார் என்று செய்தியை படித்த பிறகு அந்த ஆசிரியரை கூப்பிட்டு ,"சுட்டுக் கொல்லப் பட்டார் என்று தலைப்பை நீட்டி முழங்கக் கூடாது! சுட்டுக் கொலை! என்று தான் இருக்க வேண்டும்.இதற்குத் தான் அழுத்தம் அதிகம்!உச்சந்தலையில் ஓங்கி அடித்தது போலிருக்கும்!எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!", என்றார்,அய்யா.

கணேசன் என்பவர் தினத்தந்தி,கார்டூனில் சென்னை லைட் ஹவுசைக் காட்ட வேண்டியிருந்தது.

லைட் ஹவுஸ் படம் சரியாக இல்லை என்று தோன்றியது.ஆனால் அதை அப்படி மாற்று,இதை இப்படி மாற்று என்று சொல்ல வில்லை.

பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து "நேராகப் பாரீஸ் கார்னர் போய்,லைட் ஹவுசைப் பார்த்து விட்டு வாருங்கள்", என்றார்.

சித்திரக்காரர் தயங்கினார்.

"போய்ப் பார்த்துவிட்டு வாங்க,ஊம் போங்க என்று கண்டிப்புடன்", கூறினார்,ஆதித்தனார்.

கணேசன் லைட் ஹவுசைப் பார்த்து விட்டு வந்து தத்ரூமாக வரைந்தார்.பிறகே அதைப் பிரசுரம் செய்தார்,ஆதித்தனார்.இந்தியாவிலேயே தமிழ் பத்திரிக்கைகள் தான் அதிகம் விற்பனையாகின்றன.இதற்குக் காரணம்,பேச்சு வழக்கில் உள்ள மொழியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.இதற்கு வழிகாட்டியது தினத்தந்தி என்றார்,ஒரு முறை, பண்டித நேரு.

தினத்தந்தி அலுவலகத்தில் காவல்காரராக இருந்தவர்,"ஆத்தி", தினத்தந்தி வாசகர் என்பதற்கு அன்று அளவு கோலாக இருந்தவர் இந்த ஆத்தி தான்.

ஒரு முறை திருப்பதி லட்டு விலை உயர்ந்த போது,"திருப்பதி இலட்டு விலை உயர்வு" என்று அ.மா.சாமி என்பவர் இலக்கணச் சுத்தமாகச் செய்தியை எழுதியிருந்தார்.இதழ் அச்சாகி வந்து,அதைப் பார்த்த ஆதித்தனார்,ஆத்தியை அழைத்தார்.இந்த செய்தியைப் படிப்பா என்றார்.

ஆத்தி எழுத்துக் கூட்டிச் செய்தியைப் படித்தார்."தி...ரு...ப்...ப...தி... திருப்பதி, இ...ல...ட்...டு...ஈலட்டு", என்று படித்த போது,ஆதித்தனார் குறுக்கிட்டார்."அது என்னப்பா ஈ லட்டு?", என்று கேட்டார். "ஈ மொய்த்த லட்டு போல் இருக்கிறது, அய்யா!", என்று ஆத்தி சொல்ல, ஆதித்தனார் உட்பட செய்தி அறையிலிருந்த அத்தனை பேரும் "கொல்" என்று சிரித்து விட்டார்கள்.

பிறகென்ன,ஈ மொய்க்காத செய்தி வெளியானது.

ஆதித்தனார் அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் முடிந்ததும் சிறுவர்,சிறுமியர்கள் ஆட்டோ கிராப்பில், கையெழுத்து வாங்க நிற்பார்கள்.அவர்களிடம் ,"தம்பி நீ யார்?", என்று அய்யா கேட்பார்."நான் தமிழன்!", என்று கூறினால்தான் அவனுக்கு கையெழுத்தே கிடைக்கும்.இப்படி சிறுவர்,சிறுமியர்களிடையே தமிழன் என்ற உணர்வை ஊட்டி வளர்த்தவர்,நம் அய்யா ஆதித்தனார்.

ஒரு முறை ஆதித்தனார் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.உதவியாளர் வெரி அர்ஜெண்ட் என்று போட்டிருந்த தபாலை இரண்டு முறை எடுத்து அய்யா பார்வையில் படும்படி எடுத்து நீட்டினார்.

அந்த எழுத்துக்களை உற்றுப் பார்த்துவிட்டு ,"இதை நீ எழுதினாயா?",என்றார்.

"இல்லையே", என்று திகைத்தார்,உதவியாளர்.

"நான் எழுதினேனா?", என்று கேட்டார்.

"இல்லையே", என்றார்,மறுபடியும்.

"வெரி அர்ஜெண்ட் என்று நீயும் எழுதவில்லை,நானும் எழுத வில்லை.இது அவனுக்கு வெரி அர்ஜெண்ட்.அவன் எழுதியிருக்கிறான்.நமக்கு எது அர்ஜெண்டோ அதைக் கவனி", என்றார்,அய்யா.1981 இல் மே 24 நாளில் அய்யா ஆதித்தனார் அவர்கள் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

இது வரை தினத்தந்தி ஆபாசம் என்ற சொல்லுக்கு ஆளானது இல்லை.

ஆதித்தனார் வெறும் பத்திரிக்கையாளர் மட்டுந்தான் என்று யாரும் தயவு செய்து நினைத்து விட வேண்டாம்.

தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்.நம் உரிமையை,நாம் ஏன் மத்திய (டெல்லி)அரசிடம் பிச்சையாக கேட்க வேண்டும்? என்று மேடைகளில் முழங்கியது மட்டும் அல்லாமல், பெரியார்,காமராசர்,அண்ணா,ஜீவா மாதிரி தலைவர்களோடும் சிறைக்குச் சென்றவர்.

வெறும் பணம் சம்பாதிக்க மட்டும் தோன்றியதில்லை,தினத்தந்தி!இன்று வரை தமிழுக்கு எதிராக,தமிழ் இனத்துக்கு எதிராக,தமிழ் மக்களுக்குஎதிரானஎந்த செய்தியையும்
வெளியிட்டதில்லை.


தமிழ் உயர..

தமிழ்நாடு உயரும்...!

தமிழ்நாடு உயர்ந்தால்..?

நாம் உயர்வோம்....!


இந்த செய்தியைத் தான்,

நாம் வீட்டு வாசல்கள் தோறும் வந்து

தினம் தினம்

சொல்லாமல்.....
சொல்லிச் செல்கிறது...

....தினத்தந்தி.....!


_ஆதிசிவம்,சென்னை.

Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics