"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Wednesday, July 16, 2008

இந்தியா+அமெரிக்கா=அடிமை இந்தியா


இந்தியா+அமெரிக்கா=அடிமை இந்தியாஅந்நிய அமெரிக்க (பன்னாடை) பன்னாட்டு கம்பெனிகள்,நம் இந்தியாவிற்குள் நுழைந்து,இந்த மண்ணில் முளைத்த நமக்கு சொந்தமான சிறிய பெரிய குளிர்பானக் கம்பெனிகள்,குளியல்,சலவை சோப்பு கம்பெனிகள் என ஏராளமான கம்பெனிகளை விலைக்கு வாங்கியோ அல்லது விலைக்கு வாங்காமலோ ஒழித்துக் கட்டிக் கொண்டு...

பெப்சி,கோலா, இந்துஸ்தான் யுனிலீவர் மாதிரியான பெயர்களில், நமக்கு முன்னால் சப்தமில்லாமல் மினுமினுப்புக் காட்டி ஆட்டம்போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த கம்பெனிகள் எல்லாம் அமெரிக்காவை தான் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

அதே போன்றே சாப்ட்வேர்,BPO எனப்படும் call centre கம்பெனிகள் பெரும்பாலும் அமெரிக்கா தரும் ஆர்டர்களை நம்பியே இங்கே கடை விரித்து இருக்கின்றன.

என்றைக்கு அமெரிக்கா மனசு மாறி கையை விரிக்கிறதோ, அந்த நிமிடமே அதைச் சார்ந்த கம்பெனியில் வேலையில் இருப்பவர்கள் எல்லாம் வேலையிழந்து, டைக் கட்டி நடுத்தெருவுக்கு வர வேண்டியிருக்கும் .திரைப் படங்களில் கூட அமெரிக்க மாப்பிளைக்களுக்கு தான் அமோக மரியாதை,சாலைகளில் இருசக்கர வண்டிகளில் பறக்கும் இளசுகளின் தலைகளில் கட்டப்படும் கைக்குட்டைகளில் கூட அமெரிக்க கொடிதான்.நாட்டைக் கெடுத்த பெரும் புள்ளிகள் கூட தம் வாரிசுகளை படிக்க வைக்க அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்து தான், பூரித்துப் போய்கிறார்கள்.இப்படி அங்கு இங்கு என எங்கு திரும்பினாலும்
அமெரிக்க மோகம் தலை விரித்தாடுகிறது.

இது இப்படி இருக்க...

சமீபத்தில் கூட "இந்தியர்கள் நிறைய சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.அதனால்தான் உலக அளவில் உணவு பஞ்சம் வந்து விட்டது", என்று திமிர் பேச்சு பேசி மகிழ்ந்து, தன்னை யார் என்று அடையாளப் படுத்திக் கொண்டது,அமெரிக்கா அரசு.

இப்படிப்பட்ட வக்கிர புத்தியுள்ள அமெரிக்காவுடன் தான், கொஞ்சிக் குழைந்து இந்தியாவை அமெரிக்காவிற்கு அடகு வைத்திருக்கிறது, நம் மன்மோகன் "சிங்(க)" அரசு.


ஒரு பக்கம் உலக அளவில் சமாதனத்திற்காக அதிகமான நோபல் பரிசு வாங்கிய நாடு,இன்னொரு பக்கம் ஆபத்தான அணுகுண்டு அழிவு ஆயுதங்களை தயாரித்துக் குவிக்கும் நாடு என்ற பெருமை பெற்றது, ,அமெரிக்கா!இந்த இரட்டைக் கோணல்முகங்களை புரிந்து கொண்டாலே போதும் அமெரிக்கவைப் பற்றி புரிந்து கொள்ள...

நாட்டின் அதிவேகமான வளர்ச்சிக்கு தேவையான மின் சக்தியை,அணு மின் சக்திக் கொண்டுதான் சரி செய்ய முடியும். ஆகவே தான் அணுமின் உற்பத்திக் கருவிகளையும், அதற்கு தேவைப்படும் யுரேனியத்தையும் வாங்கிக் கொள்ளத் தான் இந்த அமெரிக்க ஒப்பந்தம் என்கிறது,நம் ம(ண்)ன் மோகன் சிங் அரசு.

உண்மை தான் என்ன?

அணு ஆயுதப் பரவலைத் தடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஐ.நா. வால் அமைக்கப்பட்ட குழுவில் அணுகுண்டு வியாபார நாடான அமெரிக்காவும் ஒன்று.இந்தியாவோடு சேர்ந்து மொத்தம் 36 நாடுகள்.

அந்த குழு தான் நம் நாட்டு அணு உலைகளை ஆய்வு செய்யும்.அந்த குழுவுக்கு திருப்தி இல்லை என்றால், எல்லா உதவிகளையும்,எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ள அதற்குத் தான் உரிமை இருக்கிறது.

நாம் மட்டும் என்ன அணு ஆராய்ச்சியில் குறைந்தவர்களா? என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது.இத்துறையில் உலகத் தர வரிசையில் இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது.

அணு ஆராய்ச்சியில் 1952 ஆம் ஆண்டிலேயே இறங்கி விட்டது, நம் இந்தியா.நம் அப்துல்கலாம் காலத்தில் கூட அணுகுண்டை வெடிக்க வைத்து சோதித்து வெற்றி கண்டது.

ஏற்கனவே, ஒருமுறை 1963 இல் ஒப்பந்தம் செய்து கொண்ட அமெரிக்கா, 1983 இல் யுரேனியம் அனுப்புவதை நிறுத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்து டாட்டா காட்டி விட்டுப் போனது,அமெரிக்கா.மீண்டும் அந்த தாராப்பூர் அணுமின் நிலையம் ரஷ்ய உதவியுடன் மின் உற்பத்தியை தொடங்கியதெல்லாம்,பழைய கதை.

அந்த ஒப்பந்தத்தில் இன்னொரு பெரிய சிக்கலும் இருக்கிறது. ஹைட் என்னும் அமெரிக்க சட்டத்திற்கு இந்திய அரசு கட்டுப்படவேண்டுமாம்.அதாவது அமெரிக்காவில் அவர்கள் போடுகிற தாளத்துக்கு இங்கிருக்கிற இந்திய அரசு ஆட்டம் போட வேண்டுமாம். இந்த கிறுக்குக்கோமாளித் தனத்தை தான் செய்து விட்டு வந்திருக்கிறது,நம் மன்மோகன் சிங் அரசு.

அந்த சட்டம் சொல்வது தான் என்ன?

அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் எல்லா உலக சமாதனத் திட்டங்களுக்கும் ,இந்தியாவும் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமாம்.

அதாவது ஈராக் மீதோ அல்லது வேறு நட்பு நாட்டின் மீதோ அமெரிக்கா அத்து மீறி நுழைந்து அக்கிரமம் செய்யுமாம்.நாமும் அவர்கள் சொல்படி கேட்டு அமெரிக்காவுக்கு ஆதரவாக சண்டைக்குப் போக வேண்டுமாம் அல்லது ஆமாம் சாமி போட்டு விட்டு சும்மா இருக்க வேண்டுமாம்.

அப்படி அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்ளாத பட்சத்தில் அணு ஆலைக்கு செய்யும் எல்லா உதவிகளையும் , அமெரிக்கா எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ளுமாம்...

சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விடவேண்டும் என்று அப்போதே சொன்னார்,அதன் தலைவராக இருந்த நம் காந்தி.அந்நியர்களை வீரத்தோடு தொரத்தி அடித்த அதே காங்கிரஸ் தான் இன்று வளர்ந்து நம் நாட்டையே அந்நிய அமெரிக்கனுக்கு அடகு வைத்து விட்டு நிற்கிறது!

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துதான் கம்யூனிஸ்டுகள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏன் இன்றும் கூட எதிர்த்து வருகிறார்கள்.


_ஆதிசிவம்,சென்னை.
Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics