ஆன்லைன் பூங்கொத்துக்களை அனுப்ப...இது ஒரு வித்தியாசமான வாழ்த்துப் பூங்கொத்தை அனுப்பும் இணைய தளம்.
மற்ற தளங்களில் அங்கு ஏற்கனவே இருக்கும் வாழ்த்து அட்டைகள்,அனிமேஷன்களை மட்டுந்தான் அனுப்ப முடியும்.
ஆனால் இந்த தளம் அப்படி இல்லை. நமக்கு பிடித்தமானவர்களுக்கு, நமக்கு பிடித்த நிறத்தில்,நமக்கு பிடித்த மாதிரி வடிவத்தில் அனுப்பும் சுகமான அனுபவத்தை தருகிறது.
இந்த இணைய தளம் போனால் விதவிதமான பூக்களையும்,பூஞ்சாடிகளையும் பார்க்கலாம்.
தேவையான வடிவத்தில் பூஞ்சாடிகளை தேர்ந்தெடுத்து, அதற்கான நிறத்தையும் கூட நாமே தேர்ந்தெடுக்கலாம்.அதற்கு பிறகு நமக்கு பிடித்த பூக்களை பிடித்து இழுத்து
வந்து,அந்த பூஞ்சாடிக்குள் நமக்குப் பிடித்த இடத்தில் நட்டு நிறுத்தி, அதோடு வாழ்த்துத் தகவலையும் சேர்த்து,அங்கிருக்கும் அழகான உறை ஒன்றையும் இணைத்து,நம் பிரியமானவர்களுக்கு,உங்களுக்குப் பிடித்த தேதியில், இமெயில் முகவரிக்கு அந்த ஆன்லைன் பூங்கொத்தை அனுப்பினால்...
அந்த பூங்கொத்தை திறந்த தகவலை இமெயில் ஓடோடி வந்து...
அந்த அன்புச் செய்தியை அழகாய் சொல்லும்...
http://www.flowers2mail.com/உங்கள் காலண்டரை நீங்களே உருவாக்குங்கள்
இந்த தளம் போய் நமக்கு தேவையான மாதம்,வாரம் என்று தேர்ந்தெடுத்து பிரிண்ட் எடுக்கலாம்.வாரத்தை திட்டமிட,ஒவ்வொரு நாளையும் திட்டமிட என தனித்தனியாக பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம். வித விதமான நிறங்களில் காலண்டர்களைப் பெறலாம் என்பது இதன் சிறப்பு.
அதோடு நிதி நிர்வாகம் ,உடல்நலம் தொடர்பான போன்ற பலவற்றையும் இலவசமாக பெற்றுப் பயன்படுத்தலாம்.
www.eprintablecalendars.com
வீடியோவில் இருந்து ஆடியோவைப் பிரிக்க...
இந்த தளம் தரும் இலவச சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்யவும். தேவையான கட்டளைகளை செயல்படுத்தி வீடியோவில் இருந்து ஆடியோவைப் பிரித்தெடுக்கலாம்.அந்த ஆடியோ பைலை mp3 வடிவத்திலும் மாற்றிக் கொள்ளலாம்.http://www.videohelp.com/வைரஸ் உள்ள இணையதளமா?
அறிமுகம் இல்லாத இணையதள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் நம் கம்யூட்டரை வைரஸ் போன்ற ஆபத்துக்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது.அந்த பிரச்னையை போக்குகிறது, இந்த தளம்.
இந்த தளம் போய் அந்த அறிமுகம் இல்லாத புதிய இணையதள முகவரியைத் தந்தால்,அந்த புதிய தளத்தை பிரிவியூ வடிவத்தில் காட்டும்...
இந்த தளம் வழங்கும் டூல் பாரை டவுன் லோட் செய்து,இயக்கினால் நம் பிரவுசரிலிருந்தே அந்த இணைய தள வசதியைப் பெறலாம்.ஆபத்தான இணைய லிங்கை கண்டறிந்து தவிர்க்கலாம்.
http://www.prevurl.com/
இணைய பக்கங்களில் தேவையான பக்கத்தை மட்டும் பிரிண்ட் எடுக்கஇந்த தளத்தில் இருக்கும் lexmark என்னும் டூல்பாரை டவுன்லோட் செய்ய வேண்டும்.இணைய பக்கங்களில் இருக்கும் தேவையில்லாத கிராபிக்ஸ்,படங்கள் போன்றவைகளை நீக்கி பிரிண்ட் எடுக்கலாம்.
கலர் பிரிண்ட்டுக்கு என தனி மெனுவும்,கருப்பு வெள்ளைக்கென்று தனி மெனுவும் இருக்கிறது.இதனுடன் picnik என்னும் புகைப்படங்களை எடிட் செய்யும் மென்பொருளையும் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். www.lexmark.comஒரே பிரவுசரில் இரண்டு இணைய தளத்தை திறக்கஇந்த இணைய தளம் போனால், ஒரே பக்கத்தில் இரண்டு இணையதளப் பக்கங்கள் இருக்கும்.அதில் நமக்கு தேவையான இணையதள முகவரிகளை டைப் செய்து, அவைகளை ஒரே பக்கத்தில் பார்க்கலாம்.நேரத்தை மிச்சப் படுத்தலாம்.
http://www.dualpage.com.br/ஒரே மாதிரி உருவத்தின்,ஒரே மாதிரி படத்தைத் தேட... இந்த தளம் போய் நமக்குத் தேவைப்படும் படத்தின் பெயரைக் கொடுத்து தேடச்சொன்னால்,ஏராளமான படங்களை திரையில் கொண்டுவந்து கொட்டும்,காட்டும்
அதில் நமக்குப் பிடித்த படத்தை மட்டும் தேர்வு வலப்புறத்தில் இருக்கும் தேடல் பகுதியில் கொண்டுபோய் விட்டால்...
உதாரணத்திற்கு தேடப்பட்ட படங்களில் ஐஸ்வர்யாராய் சேலை கட்டியிருக்கும் படத்தை மட்டும் அந்த வலப்புறத் தேடல் பகுதியில் கொண்டுபோய் விட்டு தேடச்சொன்னால்...
ஐஸ்வர்யாராய் சேலை கட்டியிருக்கும் எல்லா படங்களையும் பட்டியலிடும்...www.pixolu.de
வெப்சைட் வேட்டை (collection of website addresses)
welcome to your blog!
ReplyDeleteCongratulations
உபயோகமான தகவல். மிக்க நன்றி.
ReplyDeleteதமிழ் ஓவியா