ஓ...மனமே...!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒர் அலைவரிசை,ஓர் அதிர்வெண் ஓடுகிறது.அதை மிருகங்கள்,தாவர இனங்கள் கூட இனம் கண்டு கொள்ளும் என்கிறது,அறிவியல்.
சில மனிதர்களைப் பார்த்தாலே,அவர்களிடம் பழகி இருக்க மாட்டோம்,பேசி இருக்க மாட்டோம்,ஆனாலும் அவர்களை நமக்குப் பிடிக்காமல் போகிறதே,ஏன்?
அவர்களின் உடல் மொழி தான்!
அவர்களிடமிருந்து வெளியேறும் எண்ண அலைகளை,நம்மை அறியாமலேயே,படிக்கிற நம் மனந்தான், அவர்களை ஏற்க மறுக்கிறது என்கிறது, மனிதனின் மனதைப் பற்றி ஆராய்கிற அறிவியல்.
சிலரை,அவர்கள் தவறே செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,அப்படியே ஏற்றுக் கொள்கிறது, நம் மனம்...
அந்த இருவருக்கும் இடையே ஓடுகிற ஒரே அலை வரிசை தான்,அதற்கு காரணம்!
செடி,கொடி,மரங்களை காதலிக்கிற மனிதர்கள் அருகில் வரும்போது,தாவரங்கள் கூட தங்களுக்குள் சந்தோஷ அலைகளை பரப்பி ஆனந்த நடனமாடுகிறதாம்.
அதே மனிதன் அதே தாவரங்களை,அழிக்கும் நோக்கத்தோடு நெருங்கும் போது ,அந்த மனிதனின் தீய எண்ண மன ஓட்டத்தை முன்கூட்டியே அறிந்து,தன் சக தாவர உயிரினங்களுக்கு அபாய அலைகளை அனுப்பி எச்சரிக்கை செய்கிறதாம்.
இந்த நுண்ணறிவு விலங்களுக்கும்,பறவைகளுக்கும் கூட இருக்கிறது என்று நிருபித்திருக்கிறது,அறிவியல்.
என் சின்னஞ்சிறிய வயதில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன்...
எங்கள் வீட்டில் வளர்த்த,எங்கேயோ விளையாடிக் கொண்டிருந்த, என் சின்னஞ்சிறிய செல்ல நாய்க்குட்டி...
என் கால்களுக்கு இடையே மிதிபட்டு...
"வீல்...,வீல்...!" என்று நொண்டிக் கொண்டே கத்தியபடி ஓடிய பிறகு தான்...
தெரிந்தது
என் செல்லம் எனக்கு தெரியாமலேயே என்னை பின் தொடர்ந்த விஷயம்...
என் செல்லத்தை தூக்கி மடியில் போட்டு,நான் அழுத அழுகையைப் பார்த்து,என் செல்லம், தன் அழுகையை நிறுத்திக் கொண்டதாம்.
அதற்கு பிறகும் என் அழுகை தொடர்ந்ததாக,நாய் கூட போட்டி போட்டு அழுறான் என் மகன் என்று அம்மா எல்லோரிடமும் தன் கண்களில் கண்ணீர் பளபளக்க கிண்டல்,கேலியுமாக ,இன்றும் கூட எல்லோரிடமும் சலிக்காமல் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாள்.
இன்றும் கூட...
"பூனை,கோழி,நாய்,பேய் எல்லாம் இவன் வந்தா,இவன் கிட்ட தான் போய் ஒட்டிக்கிதுங்க.அப்படி என்ன தான் மந்திரம் போடுறானோ தெரியல" என்பாள்,அம்மா.நேரம் கிடைக்கும் போதெல்லாம்.
அப்படி ஒன்னும் அது ஒரு பெரிய ரகசியம் எல்லாம் இல்லைங்க
எப்படி ஒவ்வொரு மனுசனும் வாழ,இந்த பூமியில எல்லா உரிமைகளும் இருக்கோ,அது மாதிரி, அந்த உயிர்களும், இந்த பூமித் தாய் பெற்ற எல்லா உயிர்களுக்கும் எல்லா உரிமைகளும் இருக்குங்கிற உண்மைய உணர்ந்தால போதுங்க
நாம சாப்பிடுற மிச்சத்தை, வெறும் எலும்புத் துண்ட மட்டும் வீசி எறியாம,நாம சாப்பிடுற சாப்பாட்டில,அப்படியே கொஞ்சம் அதுங்களுக்கும் ஒதுக்கிப் பாருங்க..
எப்படிப்பட்ட மிருகமும்...
ஒரு பிஞ்சுக் குழந்தை, எப்படி தன் தாயின் தோள்களைத் தாவிப் பற்றிக் கொள்ளுமோ...
அது போலவே...
உங்கள் மேலும் தாவிப் பற்றிக் கொள்ளும்...!
_ஆதிசிவம்
www.beyouths.co.cc
♥ தூங்கும் புலியை....♥
-
தமிழ் mp3
*http://youthsmp3.blogspot.com/*
*வணக்கம் நண்பர்களே !எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு
பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com