காதலை ஆதரிக்கிறவர்களைப் பற்றி நாம் இங்கே கவலைப்படப் போவதில்லை.அது நமக்கு தேவையுமில்லை.
காதலை எதிர்க்கிறவர்களைப் பற்றித் தான் இனி இங்கே பார்க்கப் போய்கிறோம்.
காதலர் தினம் நம் தமிழ்க் கலாச்சாரத்திற்கு ஏற்றது இல்லை. அது நம் இந்திய கலாச்சாரத்தை, அதாவது இந்துக் கலாச்சாரத்தை அழிக்கிறது என்றும், இன்னும் ஒருபடி மேலே போய் காதலையும் விபச்சாரச் சட்டத்தில் சேர்த்து காதலிப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், காதலர் தினத்தன்று கட்டாயத் தாலி கட்டச் சொல்லி கலாட்டா செய்ய வேண்டும் என்று இந்தியா முழுவதும் வேறு வேறு
பெயர்களில் இயங்குகிற,இந்து மதம் சார்ந்த அமைப்புகள் கூச்சலிடுகின்றன.
பொது இடத்தில் நாகரீகம் இல்லாமல் காதலர்கள் நடந்து கொள்கிறார்கள் அதனால்தான் அதை எதிர்க்கிறோம் என்கிறார்கள். இந்த நல்ல விஷயத்தை நாமும் வரவேற்போம்.
அதற்கு முன்னால் காதல் திருமணம் எப்படி நல்லது,எப்படி கெட்டது? என்பதை கொஞ்சம் பார்த்து விடுவோம்.
ஒரு புதிய வகுப்பறைக்குள் நுழைகிற ஆணோ, பெண்ணோ,அந்த வகுப்பு முழுவதும் நிரம்பி இருப்பவர்களில் மிகச் சிலரைத் தான், தன் நண்பர்களாக தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்ள முடிகிறது.
அதில் பெரும்பாலும் ஒரே ஒரு நண்பனை மட்டும் தான் தேர்ந்தெடுத்து, நம் சுகத் துக்கங்ளை பகிர்ந்து கொள்கிறோம்.
அந்த உயிருக்கு உயிரான நட்பு, ஆணை நோக்கியும் ,பெண்ணை நோக்கியும், இடம் மாறி நகரும்போது,அது காதலாகி விடுகிறது.
தனக்காக உருகி வழிகிற அந்த ஆண், பெண்ணின் தூய நட்புக்கு முன்னால்,அந்த காதலுக்கு முன்னால்...
போலித்தனமாக மனிதர்களை பிரித்து வைத்திருக்கும்...
சாதி,மதம்,பணம்,படிப்பு,தகுதி,வரதட்ணை,ஆண், பெண் என்கிற வித்தியாசங்களை எல்லாம் தோற்றுப் போய் ஓடிவிடுகின்றன.
காதலிக்கும் காலங்களில் தான், ஒருவரை புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து, மனசளவில் முழுமனிதர்களாகிறார்கள்.
இந்த பக்குவத்தை நமக்குக் காதல் தான் கற்றுத் தருகிறது.
காதல் தான் எங்கே அழ வேண்டுமோ,அங்கே அழக் கற்றுத் தருகிறது.
எங்கே சிரிக்க வேண்டுமோ அங்கே சிரிக்கக் கற்றுத் தருகிறது.
வாழ்க்கையை முழுதாக காதலிக்கக் கற்றுத் தருகிறது.
மொத்தத்தில் வாழ்க்கையை வாழக் கற்றுத் தருகிறது...!
மதம் மாறி, சாதி மாறி திருமணம் செய்து கொள்வதை கலப்புத் திருமணம் என்று சொல்வதைக் கேட்டு நம் அறிவுத் தாத்தா பெரியார் கோபமாக் கேட்டார்.
"என்ன ஆட்டுக்கும்,மாட்டுக்கும் நடக்கிற திருமணமா?கழுதைக்கும் குதிரைக்கும் நடக்கிற திருமணமா?மனிதனுக்கும் மனிதனுக்கும் நடக்கிற,பெண்ணுக்கும் ஆணுக்கும் நடக்கிற திருமணம் எப்படி கலப்புத் திருமணமாகும்?" என்று கேட்டார்.
இனி பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கிற திருமணம் பற்றியும் கொஞ்சம் பார்த்து விடுவோம்...
சொந்தங்கள், பந்தங்கள்,உற்றார் ,உறவினர்களுக்கு பிடித்துப் போயிருந்தால், கடைசியாக பெண்ணிடம் இந்த மாப்பிள்ளைய உனக்குப் பிடிச்சிருக்கா? என்று போனால் போகிறதென்று சும்மா பெயருக்கு கேட்டு வைப்பார்கள்.
எல்லா தகுதிகளையும் பார்ப்பவர்கள்.
மாப்பிள்ளையின் குணமும்,பெண்ணின் மனசும் ஒத்துப்போகுமா?என்பதைப் பற்றி கடைசிவரைக்கும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.
மாப்பிள்ளையை தனக்குப் பிடித்திருக்கிறதா,பிடிக்க வில்லையா என்ன சொல்வது தெரியாத குழப்பமான மனநிலையில் இருக்கும் போதே, பெண்ணின் கழுத்தில் தூக்குக் கயிறாக தாலி ஏறும்...
நல்லவனோ,கெட்டவனோ அவனையே கடைசிவரை கட்டி அழ வேண்டும்...
அப்படித்தான்...
என் அப்பாவைப் பெற்ற பாட்டி,தாத்தா எதிரில் வந்தால் எண்ணெய்யில் இட்ட கடுகாக வெடிப்பாள். தாத்தா சாவுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடவில்லை.
நிறையப் பிள்ளைகள்.
இரவில் மட்டும் கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு, என் பாட்டியும் போய்ச் சேர்ந்து விட்டாள்...
இனி அப்படியே காதலர் தினத்தை எதிர்ப்பவர்களின் பின்னணி பற்றி கொஞ்சம் பார்ப்போம்...
1. உலகத்திலேயே உன் கடவுளை நீ தொடக் கூடாது என்கிற இந்து மதம் தான் புனிதமான மதம் என்பவர்கள்.
2. மதத்தின் பெயரால், சோதிடத்தின் பெயரால் மனிதர்களை நரபலி கொடுக்கலாம் தப்பில்லை என்பவர்கள்.
3. பெண் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும் அதுதான் இந்திய கலச்சாரம் என்பவர்கள்.
4. பொய்யையும்,மூடத்தனத்தையும் விற்று காசாக்கி ,அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்.
5. இந்தியாவை மதந்தான் ஆள வேண்டும் மனிதர்கள் ஆளக்கூடாது என்பவர்கள்.
6. மனிதன் முக்கியமா, மதம் முக்கியமா என்றால் மதந்தான் முக்கியம் என்பவர்கள்.
7. காதலித்தவர்களை ஒன்று சேர்ப்பதற்காக உயிர் விட்ட வாலண்டைன் என்ற கிறிஸ்துவ சாமியார்,கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக எதிர்க்கிறார்கள்.
இரத்தம் வெளுத்த, காவி நிற ரத்தக் கூட்டம் இப்படித்தான் யோசித்து தொலைக்கும்....!
-ஆதிசிவம்.
இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய / கருத்துச் சொல்ல...
எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு .வெளியேற.....
http://feedproxy.google.com/beyouths/bImA
http://feedproxy.google.com/beyouths/bImA
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com