வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா...
இலங்கையில் இனப்படுகொலை தலை தூக்கிய போது, திலீபன் என்ற இலங்கைத் தமிழன் அதைக் கண்டித்து,உண்ணா விரதம் இருந்தே,இறந்து போனான்.அவனை சாக விட்டு வேடிக்கை பார்த்தது,சிங்கள அரசு.நீ தூக்க வேண்டிய ஆயுதம் எது என்பதை நம் எதிரிகள் தானே தீர்மானிக்கிறார்கள்?
ஆயுதங்களோடு எழுந்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.நெல்லுக்குப் பக்கத்தில் முளைக்கும் புற்களைப் போலவே வேறு சில இயக்கங்களும் ஆயுதம் தாங்கி முளைத்தன.
ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போர்க்களத்தில் நிற்பதாக காட்டிக் கொண்டு,இன்னொரு பக்கம் விடுதலைப் புலிகளை சிங்களனுக்குக் காட்டிக் கொடுக்கும் வேலையையும் சரியாக செய்தது. புலிகள், அந்த மாதிரி இயக்கங்களை கண்டறிந்து இன்றும் கூட அழித்தது கொண்டிருக்கிறன.
ஒரு பெண் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள,கற்பழிக்க வந்தவனை,தற்காப்புக்காக கொலையும் செய்யலாம் தப்பில்லை என்றும்,
கொலை செய்தவனை விட, கொலை செய்ய தூண்டியவனுக்கே அதிகமான தண்டனை வழங்க வேண்டும் என்கிறது நம் இந்திய தண்டனைச் சட்டம். 6000 ஆண்களையும், 1000 இலங்கைத் தமிழ் பெண்களையும், இந்திய அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, கற்பழித்துக் கொல்ல காரணமாக இருந்த ராஜீவ் காந்திக்கு என்ன தண்டனை வழங்குவது?
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் படவில்லை. அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
அத்தனைக்கும் ஆசைப்படு என்று குமுதம்,ஆனந்த விகடனில் எழுதுகிற "சாமியர்களை(?)"ப் போல... கணக்கில்லாமல் பொண்டாட்டிகள் வைத்துக் கொண்டகோவலன் கலைஞர், கண்ணகிக்கு சிலை வைக்கிறார். தலைவனின் வழியை தொண்டர்களும் பின்பற்றினால்...?
நாடு என்னாகும்...?
இலங்கையில் உண்மையான விடுதலை வேண்டும் என்று உயிரைக் கொடுத்து போராடுகிற அமைப்புகளை,அசிங்கப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, அதற்கு போட்டியாக,போட்டி அமைப்பை ஒன்றை தானே, உருவாக்கி தன்மேல் தானே அசிங்கத்தைப் பூசிக் கொள்கிறார்,கலைஞர்.
ராஜீவ் காந்தி என்ற ஒற்றை யோக்கியனுக்காக,இலங்கையில் இருக்கிற அத்தனை தமிழனும் செத்துப் போக வேண்டும் என்று உள்மனசில் நினைத்துக் கொண்டு, வெளியில் இலங்கைத் தமிழர்களுக்காக பொய் ஒப்பாரி வைக்கிற காங்கிரஸ் கூட்டத்தைக் கூட சேர்த்து கொண்டு பொய்க் கண்ணீர் வடிக்கிறார். நம் முதலைக் கண்ணீர் முதல்வர்.
இலங்கைப் பிரச்னையைக் காட்டி என் ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று தொடை நடுங்கிப் போகிறார்,நம் கலைஞர்.
மனிதன் உண்ணுகிற உணவைத் தவிர எல்லாமே, மனிதனே ஏற்படுத்திக் கொண்ட ஆடம்பரங்கள். இந்த செயற்கை ஆடம்பர மனிதர்களால்,உணவு,உடை,இருப்பிடம் பறிக்கப்பட்ட சாலையோரவாசிகளின்...
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா...!
அவர்களுக்கு மூன்று வேளை உணவு கூட ஆடம்பரம்,அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத நம் பெருமைமிகு பாரத தேசத்தில்...
எதைச் செய்தும் பணக்காரனாகி விட வேண்டும் நினைக்கிற குறுக்கு வழி,கிறுக்குப் புத்தி அம்பானிகளை என்ன செய்யலாம்? ஒன்னும் செய்ய வேணாங்க.
கம்பி வைச்ச கதவு இருக்கிற அறையில அடைச்சு வைச்சு, மூனு வேளையும் சாப்பாட்டுக்குப் பதிலா...
பணத்தாட்கள்,நாணயங்களை கொடுத்தா போதுங்க.அதுங்களே, தானா செத்துரும்.நமக்கும் வேல மிச்சம்.
இந்த இந்திய அம்பானி பன்னிகளோடு போட்டி போடுகிற அளவிற்கு கலைஞர் அவர்களே உங்கள் குடும்பத்தின் சொத்தும் உயர்ந்திருக்கிறது... இன்னும் எதற்கு பதவிப்பித்து?
இலங்கையைப் பிரித்துக் கொடுத்தால் பிரபாகரன் சர்வாதிகாரிப் போல நடந்து கொள்வார் என்கிறார்கள். கல்யாணம் ஆகாமலேயே,பிறக்காத பிள்ளைக்கு என்ன பெயர் வைப்பது என்று கட்டிப் புரண்டு மண்டையை உடைத்துக் கொண்டு சண்டையிட்டார்களாம்,மடையர்கள். அவர்களின் அந்த பேச்சைப் போலத் தான் இருக்கிறது,இந்த பேச்சும்.
"இலங்கைத் தமிழர்கள் வேறு..................று........!
விடுதலைப் புலிகள் வேறு..........................று...! "
என்றும் ஒரு குரல் கேட்கிறது.
தலையை மட்டும் விட்டு விட்டு முண்டத்தை(உடலை) மட்டும் காப்பாற்றத் துடிக்கிற... முண்டங்கள்...இவர்கள்...!
விடுதலைப் புலிகளை விட்டு விட்டு இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று யாராவது பேசினால் அது,இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மூடநம்பிக்கைகளில் ஒன்று என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
கலைஞர் தமிழர்களின் இன துரோகி என்று வைத்துக் கொண்டால்...
புரச்ச்ச்...சீ தலைவி ஜெயலலிதா தமிழர்களின் எதிரி.ராஜபக்சேவின் அக்கா அல்லது தங்கை போலத் தான் பேசுவார்.இருவரின் உடம்பிலும் ஓடுவது ஹிட்லர் இரத்தம்,அதுங்க அப்படித்தான் பேசும்.
சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நம் கலைஞர் (சென்னையில் ஓடும் கூவம் நதி எல்லாச் சாக்கடைகளும் சங்கமிக்கும் வற்றாத ஜீவ நதி)
இந்த கூவத்தைச் பளிங்கு போல சுத்தம் செய்து,இந்த நதியில் பழங்கால தமிழறிஞர்கள் நீராடியதைப் போல,நம் பிள்ளைகள் எல்லாம் குளிப்பதை நான் காண வேண்டும் என்று தன் அடங்காத அல்ப ஆசையை வெளியிட்டார்.
உடனே,
அடுத்து பேச வந்த தாத்தாவாகிப் போன இளைஞர் அணித் தலைவர் ஸ்ஸ்..டாலின்" அப்பா உங்கள் காலத்திலேயே, அந்த ஆசை நிறைவேறும்" என்றார்.
ஆம்! நண்பர்களே அரசியல் பன்றிகளுக்கு சாக்கடையைப் பற்றித்தான் கவலை
காவிரி நீர் பிரச்னை நெருப்பாக பற்றிக் கொண்டபோது முதல்வர் கலைஞர் சொன்னார்.கர்நாடகாவில் தேர்தல் வரப் போகிறது,அதுவரை பொறுமையாக இருங்கள் என்றார். தமிழகத்திலும் ஆட்சி மாறப் போகிறது.
எந்த பலனுமில்லை.
அரசியல்வாதிகளுக்கு அடுத்த தேர்தல் பற்றித் தான் கவலை...
வாருங்கள்..!
நண்பர்களே...!
நாம் அடுத்த தலைமுறை பற்றிக் கவலைப்படுவோம்.....!
-ஆதிசிவம்,சென்னை.
இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://beyouths.blogspot.com/2009/02/blog-post_22.html#links
எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com