

இல்லாதவன்
தன் வயிற்றுக்காக
வாழ்ந்து...
தேய்ந்து போகிறான்...!
எல்லாம் இருப்பவன்
அத்தனைக்கும் ஆசைப்பட்டு
உயிர் இருந்தும்...
இறக்கிறான்!
நம் பிறப்பைப் போலவே
நம் பெயரையும்
நாம் தீர்மானிக்க முடிவதில்லை!
நாம் வாழ்கிற
இந்த சுயநல வாழ்க்கையில்
மரணம் நிச்சயம்
என்றாலும் ...
நாம் யாரும் மரணத்தை
வரவேற்க,
கொண்டாடத்
தயாராக இல்லை!
பிறகெப்படி
உங்களால்
பிறந்த நாள்
கொண்டாட முடிகிறது
உங்களுக்காக
வாழ்ந்த
இந்த சுய நல வாழ்க்கை போதும்...!
இனியாவது
வாருங்கள்!
கொஞ்சம் மற்றவர்களுக்காக
வாழ்ந்து காட்டுவோம்!
உங்கள் பிறப்பை
மற்றவர்கள்
கொண்டாடட்டும்...!
எனக்கும் கூட
பிறந்த நாள் கொண்டாட
ஆசை தான் ...!அனாதை குழந்தைகள்
இல்லாத தேசத்தில் ...!
_ஆதிசிவம்.சென்னை.




இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல..
http://beyouths.blogspot.com/2009/07/blog-post.html#links
எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA



valka unkal kavithai
ReplyDelete