"ஒரே நாளில் செத்துப் போனவர்கள் நிம்மதியானவர்கள்" என்கிறான், தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் முள் வேலி முகாம் தமிழன்!
இங்கோ தமிழீழத் தமிழனை காப்பாற்றச் சொல்லி "ஐ லவ் யூ! சோனியா காந்தி!" என்று ஒரே காதல் கடிதங்களாக எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்,
தமிழின...மானமிகு...மாண்புமிகு... டாக்டர்... முத்தமிழ்...
சிரிக்காதீங்க...!
கலைஞர் யார் கிட்ட வேண்டுகோள் விடுறார் தெரியுமா?
பொம்பள ராசபக்சே சோனியாக்கிட்ட...
சிரிக்காதீங்க...!
ராசசேகர ரெட்டிங்கிற ஆந்திர மாநில முதல்வன் ஹெலிகாப்டர்ல போய் மலையில மோதி மண்டைய போட்டுட்டாராம்!
அமெரிக்கா, இஸ்ரே, மசுரே ஹெலிகாப்டர் எல்லாம் வந்து தேடுதாம், செத்த போன உடலை...
அதே ஆந்திராவில இந்தியாவுக்கே சோறு போட்ட விவசாயிங்க கொத்து கொத்தா, கூட்டம் கூட்டமா தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தாங்க.அப்ப எல்லாம் எந்த மயிராண்டிகளும் வரலங்க.
"அரசன் உசிரு தான் உசிரு, மத்ததெல்லாம் மசிரா?"
இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்திலும் நடக்காத அதிசயத்தை நிகழ்த்தி கட்டினார், கலைஞர். ராசசேகர ரெட்டி மரணத்துக்கு ஒரு நாள் விடுமுறை என்று.
ராஜபக்சே,ராஜசேகர ரெட்டி என்ற பெயர் ஒற்றுமை கலைஞருக்கு பிடித்துப் போய் விட்டதோ?
இலட்சம் தமிழர்களின் உயிர்களை கொன்ற,தின்ற, இரத்த வாயால் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்டது என்றான்,சிங்கள நாய்!
அது இவரின் ஆட்சியின் போது தானே, நடந்தது. அப்போதெல்லாம் எந்த கண்டன விடுமுறை அறிவிப்பையும் விட வில்லையே கலைஞர், ஏன்?
பெயரில் மட்டுந்தான் இருக்கிறது கருணை!
கர்நாடக முதல்வனைப் பார்த்ததும் ஓடிப் பிடித்து அண்ணா,தம்பி! என்று கட்டிப்பிடித்து புதிய உறவு முறையை கொண்டாடினார் ,கலைஞர்.
தண்ணீர் தராத கர்நாடக முதல்வன் கலைஞருக்கு சகோதரனாகத் தெரிகிறார்.
சரியான தேர்வு தான்!
உன்னைப் போல் ஒருவன்!
சரி!
இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டுத் தமிழன் என்ன செய்கிறான்,தெரியுமா?
ஏற்கனவே உலகிலேயே அதிக நாட்கள் முட்டாள் மூடப் பண்டிகைகளுக்கு விடுமுறை விடுகிற நாடு இந்தியா தான் என்கிறது, ஒரு அதிர்ச்சியான தகவல்!
கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தின்னு அதாங்க, அதுங்களுக்கு பிறந்த நாளு...
அதுங்களுக்கு எத்தனையாவது பிறந்த நாளுன்னு கூட தெரியாமலேயே...வருஷா வருஷம் கொண்டாடுறான்,தமிழன் !
எல்லாத்தையும் பிள்ளையார் காப்பாத்துவாருன்னு சொல்லி, வெக்கமில்லாம பிள்ளையார காப்பத்த போலிஸும் கூடவே போகுது ஊர்வலத்தில...
அந்த பிள்ளையார் மட்டும் உயிரோட வந்து ஏன்டா என்ன வச்சு இப்படி பொம்ம விளையாட்டு விளையாடுறீங்கன்னு ,இவனுங்கள எல்லாத்தையும் பந்தாடுவரைக்கும் இவனுங்க தொல்ல தாங்க முடியாது , அது நடக்கிறவரைக்கும் இவனுங்க அடங்க மாட்டானுங்க!
சரிங்க!
ராஜசேகர ரெட்டி மரண விடுமுறையை தமிழன் எப்படி கொண்டாடினான் தெரியுமா?
வீட்ல உக்காந்து, அதாங்க நம்ம நமீதா செல்லம் நடிச்ச படத்த நாலாவது தடவைய கொலைஞர் டிவியில சே! கலைஞர் டிவியில பாத்து கெக்க பிக்கன்னு அர்த்தமில்லாம விழுந்து சிரிச்சு துக்கம் கொண்டாடுறான், தமிழன்!
சரிங்க,
தேர்தல் சமயத்திலயாவது நம்மாளு யோசிப்பான்னு பாத்தா. ரொம்ப சுத்தம்!
அப்பவும் அப்படித்தான் எதையோ தொலைச்சவன் மாதிரியே திரியிறான்.
சொன்ன நம்ப மாட்டீங்க!
விட்டா ராஜபக்சேவுக்கு கூட ஓட்டைப் போட்டு தமிழக முதல்வானாக்கிருவான் தமிழன்!
உண்மைதாங்க!
அந்த எல்லா தகுதிகளோடயும் ஒரு தினுசா ஒரு வித்தியாசப் பிராணியாத் தான் திரியிறான், தமிழ்நாட்டுத் தமிழன்!
_ஆதிசிவம்,சென்னை.
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com