சிறுகதை

சென்னை...
அந்த ஆட்டோவில், அந்த கர்ப்பிணி பெண், வலி,சிணுங்கல் கொஞ்ச கொஞ்சமாக அதிகமாகவே, வெட்கத்தை விட்டு அழவே ஆரம்பித்து விட்டாள்!
அதற்கு மேல் வண்டியை வேகமாக விரட்டினால்...பயணம் சுகமாக இருக்காது, என்பதால் நிதானமான வேகத்தில் என் ஆட்டோவை விரட்டினேன்.
பிரசவ வலி தான் மனித வலிகளிலேயே மிகவும் கடுமையான வலி!
இதை மென்மையானவள் என்கிற பெண் தான் தாங்கிக் கொள்கிறாள்.
ஆனால் ஆணாதிக்க உலகம் என்னடா வென்றால் ஆண் தான் வலிமையானவன் என்கிறது.
மரணம் என்பது ஆணுக்கு ஒரு முறை தான் வருகிறது.
ஆனால் பெண்ணுக்கோ மரணம் குறைந்தது இரண்டு முறையாவது வந்து போகிறது, பிரசவம் என்கிற பெயரில்...
தாயின் பிரசவத்தில் பிறந்து, தானும் ஒரு குழந்தையை பெற்றுப் போட்டுவிட்டு, அற்ப ஆயுளிலேயே உயிரை விட்டு காற்றில் கரைந்து போகிற பெண்கள் ஏராளம், ஏராளம்!
ஆணை விட பெண்ணே குழந்தை பெற்றுக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்களாம்.
இந்தியா போன்ற ஜனத் தொகை மிகுதியான நாட்டில், இந்த பொட்டைங்களுக்கு இந்த மாதிரி புத்தி தேவையா? என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன் .
யாரோ ஒரு அமைச்சரோ, முதல்வரோ அந்த வழியாக போகிறார்கள் என்பதால் போக்குவரத்தையே நிறுத்தியிருந்தார்கள்......

மிருகங்களுக்கு மனித மனங்களை படிக்க தெரிகிறதோ இல்லையோ. கெட்ட எண்ணங்களை சுமந்து அலைகிற மனிதர்களை கண்டால் ஒதுங்கிக் கொள்ளும். தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் முத்தமிழன் என்றாலும் அவர் கை பட்ட எதையும் அவர் வீட்டு நாய் சாப்பிடுவதே இல்லை என்ற உண்மை, உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? "கறை பட்ட கை என்பதாலோ?" முத்தமிழனுக்கு வயது, "அரசு வேலை பார்க்க இனி தகுதியில்லை உனக்கு வயதாகி விட்டது நீ வீட்டுக்குப் போகலாம்" என்று வீட்டுக்கு அனுப்புகிற 60 வயதோடு 20 வயதை கூட்டிக் கொள்ளுங்கள். அது தான் நம் முதல்வர் முத்தமிழனின் வயது. இன்று ஒரு விழாவில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்தார்.அவர் வீட்டு நாய் இருக்கும் பகுதிக்கு இவர் தான் போனார். அவர் வீட்டு நாய் அலட்சியமாய், கேவலமாய் ஒரு பார்வை பார்த்தது விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டது. முத்தமிழனுக்கு பயங்கர கோபம் வந்தது. போயும் போயும் நாயிடமா நம் கோபததைக் காட்டுவது என்று அடக்கிக் கொண்டார். "நாய் கூட சண்ட போடுறீங்களே இதில யார் நாய்,யார் மனுசன்னே எனக்குத் தெரியல" என்று சரியாகத் தான் திட்டுவாள் முத்தமிழனின் மனைவி. "நான் வெளியில போகும் போது, இந்த சனியனை என் கண்ணில காட்டாதீங்கன்னு நான் எத்தன தடவை சொல்லியிருக்கேன். இந்த வீட்ல யாருக்கும் அறிவில்ல" என்று சப்தமாக கத்தினார். "நாய் இருக்கிற பகுதிக்கு நீங்களா தான் போனீங்க. நாய் உங்ககிட்ட வரல". வீட்டுக்குள்ளிருந்து முதல்வரின் ஆறாவது மனைவி கிண்டலாக, நமட்டுச் சிரிப்போடு சொன்னாள். விழாவுக்கு நேரம் நெருங்கியதால் நம் முத்தமிழன் தன் பங்களா வீட்டு வாசலில் வந்து நின்று எல்லா வீடுகளிலிருந்து ஏதாவது ஒரு தலையாவது தெரிகிறதா என்று சுற்றும்முற்றும் பார்த்தார். ஒரே ஒரு காக்கை மட்டும் இருந்தது.அதுவும் கூட இவரை கண்டுகொள்ள வில்லை! பாத்துக்குங்க நான் தான் இந்த தமிழ்நாட்டுக்கே (அய்ந்து வருஷ ராஜா.அப்புறம் என்னங்க, அடுத்த தேர்தலில வெற்றி பெற்றால் தானே இவர் முதல்வர் பதவியில் மீண்டும் நீடிக்க முடியும்?)ராஜா அப்படின்னு காட்ட நெனச்சார், யாரும் பாக்கல வருத்தத்தோடு வண்டியில் ஏறி உட்கார்ந்தார். பூனைப் படை பாதுகாப்போடு முதல்வரின் ஊர்வலம் ஆரம்பமானது... "ஊழல் பெருச்சாளிக்கு கறுப்பூனைப் படை பாதுகாப்பு!" போகிற வழியில்..... 80 வயதில் 18 வயது இளைஞனைப் போல சுறுசுறுப்பாக இயங்கும் சூரியனே! உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம். இப்படிக்கு கூமுட்டைத் தொகுதி தறுதலைகள் என்று கலர் கலராக சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்...


மருத்துவமனையில் சேர்த்து வாசல் வரை வந்து விட்டேன். யாரோ பின்னால் ஒடி வருவதை உணர்ந்து, திரும்பினேன். அந்த கர்ப்பிணிப் பெண்ணின் தாய் மூச்சு வாங்க என்னை நோக்கி, ஓடி வந்து கொண்டிருந்தாள். "தம்பி! உன் பெயர் என்னப்பா?" என்று கேட்டாள். சொன்னேன். "என் பேரப் பிள்ளைங்களுக்கு உம் பேர தான் வைப்பேன். நான் ஒரு உயிருக்கு மட்டுந்தான்ப்பா தாய் , ஆனா நீ ரெண்டு உயிர காப்பத்துன்ன தாய்!" என்றாள். என்னால் ஆட்டோவை ஓட்டமுடிய வில்லை. திரும்பிப் பார்த்தேன். அந்த தாய்க் கிழவி, தன் சேலைத் தலைப்பால் ஒரு கையில் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,இன்னொரு கையால் நான் போகிற திசைப் பக்கம் டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள், நெடுநேரம்... என்னால் எதிரில் வரும் வாகனங்களை சரியாகப் பார்க்க முடியவில்லை. எல்லாம் மங்கலாகத் தெரிந்தது.ஓர் ஓரமாக வண்டியை நிறுத்தினேன். என் கண்களில் கண்ணீர் மழை...!
_மனிதன்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
