"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Friday, October 2, 2009

♥ மனிதன் .....! ♥

"மனிதன் .....!"
சிறுகதை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf1D8o0uyFi6fvwqYHDrwwIFmVnlI8EOHJkQ9yqQUZo1yY1bpVjNi72riDx75rt40FLno92kTbLnsAn_OlL8iOgy2hiPJtyVGCQGaCbGtwC3ja2bP6WjY9Z5MjURE86Z4S-qtcdJteD9U/s320/autorickshaw.jpg

செ
ன்னை...

அந்த ஆட்டோவில், அந்த கர்ப்பிணி பெண், வலி,சிணுங்கல் கொஞ்ச கொஞ்சமாக அதிகமாகவே, வெட்கத்தை விட்டு அழவே ஆரம்பித்து விட்டாள்!

அதற்கு மேல் வண்டியை வேகமாக விரட்டினால்...பயணம் சுகமாக இருக்காது, என்பதால் நிதானமான வேகத்தில் என் ஆட்டோவை விரட்டினேன்.

பிரசவ வலி தான் மனித வலிகளிலேயே மிகவும் கடுமையான வலி!
இதை மென்மையானவள் என்கிற பெண் தான் தாங்கிக் கொள்கிறாள்.

ஆனால் ஆணாதிக்க உலகம் என்னடா வென்றால் ஆண் தான் வலிமையானவன் என்கிறது.

மரணம் என்பது ஆணுக்கு ஒரு முறை தான் வருகிறது.

ஆனால் பெண்ணுக்கோ மரணம் குறைந்தது இரண்டு முறையாவது வந்து போகிறது, பிரசவம் என்கிற பெயரில்...

தாயின் பிரசவத்தில் பிறந்து, தானும் ஒரு குழந்தையை பெற்றுப் போட்டுவிட்டு, அற்ப ஆயுளிலேயே உயிரை விட்டு காற்றில் கரைந்து போகிற பெண்கள் ஏராளம், ஏராளம்!

ஆணை விட பெண்ணே குழந்தை பெற்றுக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்களாம்.

இந்தியா போன்ற ஜனத் தொகை மிகுதியான நாட்டில், இந்த பொட்டைங்களுக்கு இந்த மாதிரி புத்தி தேவையா? என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன் .

யாரோ ஒரு அமைச்சரோ, முதல்வரோ அந்த வழியாக போகிறார்கள் என்பதால் போக்குவரத்தையே நிறுத்தியிருந்தார்கள்......

http://topnews.in/healthcare/sites/default/files/pregnancy_1.jpg

மிருகங்களுக்கு
மனித மனங்களை படிக்க தெரிகிறதோ இல்லையோ. கெட்ட எண்ணங்களை சுமந்து அலைகிற மனிதர்களை கண்டால் ஒதுங்கிக் கொள்ளும்.
தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் முத்தமிழன் என்றாலும் அவர் கை பட்ட எதையும் அவர் வீட்டு நாய் சாப்பிடுவதே இல்லை என்ற உண்மை, உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? "கறை பட்ட கை என்பதாலோ?" முத்தமிழனுக்கு வயது, "அரசு வேலை பார்க்க இனி தகுதியில்லை உனக்கு வயதாகி விட்டது நீ வீட்டுக்குப் போகலாம்" என்று வீட்டுக்கு அனுப்புகிற 60 வயதோடு 20 வயதை கூட்டிக் கொள்ளுங்கள். அது தான் நம் முதல்வர் முத்தமிழனின் வயது. இன்று ஒரு விழாவில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்தார்.அவர் வீட்டு நாய் இருக்கும் பகுதிக்கு இவர் தான் போனார். அவர் வீட்டு நாய் அலட்சியமாய், கேவலமாய் ஒரு பார்வை பார்த்தது விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டது. முத்தமிழனுக்கு பயங்கர கோபம் வந்தது. போயும் போயும் நாயிடமா நம் கோபததைக் காட்டுவது என்று அடக்கிக் கொண்டார். "நாய் கூட சண்ட போடுறீங்களே இதில யார் நாய்,யார் மனுசன்னே எனக்குத் தெரியல" என்று சரியாகத் தான் திட்டுவாள் முத்தமிழனின் மனைவி. "நான் வெளியில போகும் போது, இந்த சனியனை என் கண்ணில காட்டாதீங்கன்னு நான் எத்தன தடவை சொல்லியிருக்கேன். இந்த வீட்ல யாருக்கும் அறிவில்ல" என்று சப்தமாக கத்தினார். "நாய் இருக்கிற பகுதிக்கு நீங்களா தான் போனீங்க. நாய் உங்ககிட்ட வரல". வீட்டுக்குள்ளிருந்து முதல்வரின் ஆறாவது மனைவி கிண்டலாக, நமட்டுச் சிரிப்போடு சொன்னாள். விழாவுக்கு நேரம் நெருங்கியதால் நம் முத்தமிழன் தன் பங்களா வீட்டு வாசலில் வந்து நின்று எல்லா வீடுகளிலிருந்து ஏதாவது ஒரு தலையாவது தெரிகிறதா என்று சுற்றும்முற்றும் பார்த்தார். ஒரே ஒரு காக்கை மட்டும் இருந்தது.அதுவும் கூட இவரை கண்டுகொள்ள வில்லை! பாத்துக்குங்க நான் தான் இந்த தமிழ்நாட்டுக்கே (அய்ந்து வருஷ ராஜா.அப்புறம் என்னங்க, அடுத்த தேர்தலில வெற்றி பெற்றால் தானே இவர் முதல்வர் பதவியில் மீண்டும் நீடிக்க முடியும்?)ராஜா அப்படின்னு காட்ட நெனச்சார், யாரும் பாக்கல வருத்தத்தோடு வண்டியில் ஏறி உட்கார்ந்தார். பூனைப் படை பாதுகாப்போடு முதல்வரின் ஊர்வலம் ஆரம்பமானது... "ஊழல் பெருச்சாளிக்கு கறுப்பூனைப் படை பாதுகாப்பு!" போகிற வழியில்..... 80 வயதில் 18 வயது இளைஞனைப் போல சுறுசுறுப்பாக இயங்கும் சூரியனே! உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம். இப்படிக்கு கூமுட்டைத் தொகுதி தறுதலைகள் என்று கலர் கலரா சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்...
jhon.jpg image by mokkaimhokan வாகனங்களின் வரிசை நீளமானது...! அந்த கர்ப்பிணிப் பெண் பெரிதாக அலற ஆரம்பித்து விட்டாள்! "நான் சொல்றத மட்டும் யாரும் எதுவும் கேள்வி கேக்காம செய்யுங்க..!" என்றேன். அந்த பெண்ணின் கூடவே வந்த கணவன் கால் பக்கம் பிடிக்க, நான் தலைப் பக்கம் பிடித்து தூக்கினோம்.அந்த பெண்ணின் தாய் முதுகுப் பக்கம் பிடித்துக் கொண்டாள். அந்த பெண்ணை நடுச்சாலையில் உட்கார வைத்தேன். வெயில் சூடு ஆரம்பிக்கிற நேரம். சட்டென்று என் சட்டையை கழற்றினேன்.ஓடிப் போய் என் ஆட்டோவில் இருந்த இன்னொரு காக்கி நிற சட்டையை சாலையில் விரித்து, அந்தப் பெண்ணைப் படுக்க வைத்தோம். செய்தியறிந்து எங்களின் மூன்று தலைகளோடு மக்கள் கூட்டம் சேர்ந்து முப்பது தலைகளானது. காவல்துறையினரும் நெருங்கி வந்தனர். "இங்க என்ன இவ்வளவு கூட்டம்?" என்று கேட்டார் காவல்துறை அதிகாரி ஒருவர். "முதல்வர் வருகிற நேரம் ஒரமா போங்க,இல்ல நான் கடுமையா நடந்துக்க வேண்டியிருக்கும்.முதல்ல அந்த முதல்வர் போகட்டும்.அப்புறந்தான் யாரா இருந்தாலும் போக அனுமதிக்க முடியும்" என்றார். "இந்த பெண் இப்ப செத்துப் போய்ட்டான்னு வைச்சுக்குங்க, மீண்டும் உயிர் தர முடியுன்னு உங்க அதிகாரத்த வைச்சு,இல்ல, அந்த முதல்வரால தான் செத்துப் போன பிறகு உயிர் பிழைக்க வைக்க முடியுமா? முடியுமுன்னா சொல்லுங்க. நாங்க ஓரமா காத்திருக்கோம்... மக்களை பாதுகாக்கத் தான், அவருக்கு முதல்வர் பதவி,உங்களுக்கு வேலை,இந்த சீருடை" என்று ஆவேசமாகத் தான் வார்த்தை வெளியில் வந்து வெடித்தது! "இப்ப என்னை என்னா பண்ணச் சொல்றீங்க?என்றார்" காவல் துறை. சாலையின் மறுபக்கம் இந்த ஆட்டோவ போக விட்டா போதும் அந்த பெண்ணை மருத்துவ மனையில் சேர்த்திருவேன் என்றேன்,நான். யாரிடமுமோ அந்த காவல்துறை அதிகாரி, தொலைபேசியில் தொடர்பு கொண்டார். "இங்க வர பத்து நிமிடமாகுமா, நன்றி!" என்று இணைப்பைத் துண்டித்தார். "நீங்க சாலையின் மறுபக்கம் போகலாம், ஆனால் சீக்கிரம்....!" என்று அடுத்த கட்டளையை பிறப்பித்தார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhK1uhBBF2zPVn3UTX0d-7Yq9zlGS3rKTLaEXnpCJSvoI3d2OGkR2Px4K-8ZGbMz8gHXLKcly9c-B7VFjx91nDgvt1WVcT3YtQTuV4KAJZNEoCzNXFecmrhJlk5N8Nc_KAf3q83UtPj_0/s400/auto.jpg

மருத்துவமனையில் சேர்த்து வாசல் வரை வந்து விட்டேன். யாரோ பின்னால் ஒடி வருவதை உணர்ந்து, திரும்பினேன். அந்த கர்ப்பிணிப் பெண்ணின் தாய் மூச்சு வாங்க என்னை நோக்கி, ஓடி வந்து கொண்டிருந்தாள். "தம்பி! உன் பெயர் என்னப்பா?" என்று கேட்டாள். சொன்னேன். "என் பேரப் பிள்ளைங்களுக்கு உம் பேர தான் வைப்பேன். நான் ஒரு உயிருக்கு மட்டுந்தான்ப்பா தாய் , ஆனா நீ ரெண்டு உயிர காப்பத்துன்ன தாய்!" என்றாள். என்னால் ஆட்டோவை ஓட்டமுடிய வில்லை. திரும்பிப் பார்த்தேன். அந்த தாய்க் கிழவி, தன் சேலைத் தலைப்பால் ஒரு கையில் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,இன்னொரு கையால் நான் போகிற திசைப் பக்கம் டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள், நெடுநேரம்... என்னால் எதிரில் வரும் வாகனங்களை சரியாகப் பார்க்க முடியவில்லை. எல்லாம் மங்கலாகத் தெரிந்தது.ஓர் ஓரமாக வண்டியை நிறுத்தினேன். என் கண்களில் கண்ணீர் மழை...!

_மனிதன்.

http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg







https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_p2TtwooHorAYxGOnnMUWLREOpTUt8hluvRpKggNfmoKXpPpFq-0aqPbc7mEIEzMA8CW9Qt5qR6xRhMxF0uYEEbEZxaeIV2UE5Ojt6DtkZn52pERrtzG2atQeDPzT6M6a69kPnbc42la5/s400/INSIDE+INDIA+AUTO.jpg

பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...



http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg



Update me when site is updated




Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics