/a>/>/>>/>/>>/>>/>>/>/>>/>>/>>/>>/>>/>>/>>/>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>>/>
"என் இனிய இயந்திரா...!" கவிதை
என் மீசையை
நான் எடுத்தால்
நீ...!
திட்ட மாட்டாய்...!
என் நிறம்
என் வேலை
என் பலம்
என் பலவீனம்
எல்லாம்
தெரிந்த பிறகு...
உங்கள் குணத்துக்காகத்தான்
உங்கள் மீது காதல் வந்தது
என்று
பொய் சொல்லமாட்டாய்...
ஏற்கனவே
அழகான உன் முகத்தை
மேலும்
அழகு கூட்டி
உன் அழகுக்கு முன்னால்...
என்னை
மண்டியிட செய்ய மாட்டாய்...!
நான் உனக்காகவும்
நீ எனக்காகவும்
வாழ்ந்து தீர வேண்டிய
கட்டாயப் பொய் வாழ்க்கைக்கு என்னை
ஆளாக்க மாட்டாய்...
மனிதர்கள் எல்லாம் இயந்திரங்களாகி வருகிறார்கள்...!
என் இனிய இயந்திரப் பெண்ணே..!
வா...!
நீயாவது என்னை மனிதனாக்கு...!
(குறிப்பு: வர இருக்கும்,மனித உணர்ச்சிகள் உள்ள பெண் ரோபாக்களை வரவேற்கிற கவிதை)
(குறிப்பு: வர இருக்கும்,மனித உணர்ச்சிகள் உள்ள பெண் ரோபாக்களை வரவேற்கிற கவிதை)
வணக்கம் ஆதிசிவம் (அதுதானே உங்கள் பெயர் தவறாக டைப்பிட்டிருந்தால் மண்ணிக்கவும்)
ReplyDeleteம்ம்ம் கவிதை நன்றாக இருக்கின்றது
அது சரி படங்களை எங்கிருந்தையா எடுக்கின்றீர் (அ) எப்படி உருவாக்குகின்றீர் கொஞ்சம் எனக்கும் சொல்லித்தரவும்
நன்றி
இராஜராஜன்