
பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...
அறிவில்லாமல் ஆண்.
ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...
அழகாய் பெண் .
கணவன்,பிள்ளைகள்,பெற்றோர்,தம்பி
நிறைய உலகங்கள் பெண்ணுக்கு...!
ஆணுக்கு ஒரே ஒரு உலகம் ,அது பெண் தான் !
பெண் மென்மையானவள் என்று சொல்வதை
காதலித்தவன், நம்ப மாட்டான்!
காதல் தீப் பற்றிக் கொள்ளும்
ரகசியம் யாருக்கும் தெரியாமலே
முடிந்து போகிறது
காதலும் வாழ்க்கையும் ....!
காதலுக்கு கண்ணில்லை
என்பார்கள்
காதலிக்காதவர்கள்!
மனசு பார்க்காமல்
சகலமும் பார்த்து வரும்
காதல்
பிரிந்து விடுகிறது....
கோர்ட் வாசலில் ...
வாழ்க்கையின் தத்துவத்தைப் போலவே
புரியாமலே
புரிந்து கொள்ளப் படாமலே...!
நமக்குள் எரித்து...
புதைக்கப் படுகிறது ,
நமக்கான காதல் !
_மனிதன்.





பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...


Get more followers

No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com