"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Friday, May 1, 2009

நம்ப முடியாத உண்மைகள்

மே தின வாழ்த்துக்கள்....!

உழைப்பவனின்

முதுகில்


சுழல்கிறது உலகம்...!






என் வலைத் தளத்தை மின்னஞ்சலில் படிக்கிற என் தமிழ் சொந்தங்களுக்கு...

ஓர் அன்பான வேண்டுகோள்!

தமிழீழ மக்களின் கண்ணீரை சுமந்து...!
நம்ப முடியாத உண்மைகளை
அடித்து உருட்டிப் பரட்டிக்கொண்டு ....
உங்களை நோக்கி பாய்ந்தோடி வருகிறது.. ...


ஓடும் நதி....


பாருங்கள்.....!
www.odumnathi.blogspot.com





Flickr’s river of flowers by kees straver (busty week trying to catch up).



இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...

http://www.beyouths.blogspot.com/2009/05/blog-post.html#links




எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA

Share/Save/Bookmark

Sunday, March 29, 2009

பூந்தோட்டமா, வாழ்க்கை?



காலை பத்து மணி...


எதிர் எதிரே வரும் வண்டியோட்டிகள் மொபைல் போனில் பேசியபடியே வண்டியோட்டி,அறிவியல் சாதனத்தை அவமானப் படுத்திப் போய்க்கொண்டிருந்தார்கள்.








ஒரு பிச்சைக்காரன் இரண்டு சாலைகளையும் பிரிக்கும் தடுப்புச்சுவரில் வானத்தைப் பார்த்து படுத்து காலை ஆட்டிக்கொண்டு , பரபரப்பாக சென்ற எல்லா சென்னைவாசிகளையும் கிண்டல் செய்து கொண்டிருந்தான்.




வழியில் என் உயிர் நண்பனை சதிஷ் என்னோடு சேர்ந்து கொண்டான்.


தலை மயிர்(வழுக்கை) போனது பற்றி கவலைப்பட்டான்.


என் ஈழத்து வீரத் தமிழன் உயிரையே மயிராக துச்சமாக நினைத்து போர்களத்தில் நிற்கிறான்.


"வாடா! என் தமிழ்நாட்டுத் தமிழா!" என்றேன்.


இன உணர்வு, தமிழன், இலங்கைத் தமிழர்களின் பிணத்தை வைத்து நடத்துகிற அரசியல்....


இந்த வெங்காயம் எல்லாம் வேண்டாங்க.




மனிதனை ,மனிதன்(சிங்களன்?) கொல்கிற காட்சிகளை பார்த்துக் கண்ணை மூடிக் கொண்டு போவது தான் மனிதத் தன்மையா?



திடீரென்று இலங்கைத் தமிழர்கள் மீது பத்திரிக்கைகளுக்கு பாசம் பொத்துக் கொண்டு வருகிறது.



கொலை, கொள்ளை,கற்பழிப்புப் புகழ் தினசரிகள் கூட, ஏன் நடிகைகளின் நாய்களைப் பற்றி எழுதும் வார இதழ்கள் கூட இலங்கை படுகொலை செய்திகளுக்கு, பக்கம் ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றன.


அந்த சாவுச் செய்திகளையும் தங்கள் பத்திரிக்கைகளில் வெளியிட்டு, விற்பனைகளை உயர்த்தி காசு பறிக்கும் உத்தி.


எது எப்படி இருந்தாலும், அதையும் வரவேற்போம்.


வேறு என்னத்தைச் சொல்ல?

அலுவலகத்தை தொட்டதும், அந்த தீச் செய்தீ எல்லோரையும் பற்றிக் கொண்டது. எங்கள் அலுவலக காரோட்டியின் மனைவி தீக்குளித்து செத்தே போய் விட்டாள்!





அலுவக ஊழியர்கள் அப்படியே மருத்துவ மனைக்கு கிளம்பினோம்.


எங்கள் அலுவலக காரோட்டி சரியான குடிகாரன். அந்த பெண் வேலைக்குப் போய் சம்பாதிக்கிற காசைக்கு கூட வாங்கிக் குடித்து விடுவான். ஏற்கனவே இரண்டு முறை தீக்குளிக்க முயன்றிருக்கிறாள்,அந்த பெண். திருமணமாகி இரண்டு வருடந்தான் ஆகுகிறது. பிள்ளை எதுவும் இல்லை.அந்த திருமணக் கடன் கூட இன்னும் முடியவில்லை என்ற தகவல்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
அந்த குடிகாரனோடு வாழ்ந்து தினம் தினம் செத்துக்கொண்டிருப்பதை விட ஒரே நாளில் மொத்தமாக செத்துப் போய் விடலாம் என்று அந்த பெண் முடிவெடுத்து விட்டாள்.

நானும் ஒரு நாள் குடிச்சேங்க. எங்க ஊர் மதுரையில நன்னாரி என்கிற வாசனையான வேர் போட்டு செய்த சர்பத் மாதிரி இருக்கும் என்கிற நினைப்பில...


பெப்சி, கோக், மிராண்டான்னு பூச்சிக் கொல்லி மருந்துகள் வந்த பிறகு மதுரையில் இப்பவெல்லாம் அந்த சர்பத் கிடைக்கிறதே இல்ல. கடை கடையாக தேடினாலும், அவ்வளவு எளிதில் கிடைக்கிறதில்லிங்க.


அந்த சர்பத் நினைப்பில தண்ணி கூட கலக்காம குடிச்சுப் பாத்தேன்ங்க. சகிக்க முடியாத சுவை.


இதுக்குப் போயா இந்த மனிதர்கள் அடிமையாக கிடக்கிறார்கள் என்று மனிதர்கள் மேல் கோபமும், பரிதாபமும் கூட வந்தது.


அதுதான் முதலும் கடைசியும்.அதுக்குப் பிறகு நான் குடிக்கிறதே இல்லைங்க.

பிணவறை வந்தது. பிணவறை ஊழியர் மூக்கைப் மூடிக்கொண்டு போய் பாருங்க என்று கதவை திறந்து விட்டார்.


நான் வேண்டுமென்றே மூக்கை மூடிக் கொள்ளாமல் உள்ளே நுழைந்தேன்.


காரணம்?


உண்மையின் வாசனையை எதற்கு பொய் கொண்டு மறைக்க வேண்டும்...? என்கிற ஞான(?)க்கிறுக்குத் தான்.


ஆனால் அது எவ்வளவு பெரிய விபரீதம் என்பதை பிணம் பார்த்து வந்த பிறகு தான் தெரிந்தது.


காய்ந்த மிளகை வெறும் சட்டியில் வறுத்தால் வருமே நெடி, அதற்கு இணையான நெடி, தொண்டையிலும் கசப்பாக நின்றது. வாந்தியும் குமட்டலும் வந்தது...


கதவோரம் பிறந்து, ஒரு வருடம் கூட முழுமையடையாத குழந்தை ஒன்று துணி விரிப்பில் அழகான ரோஜாப்பூப் போல கண் மூடி தூங்கிக் கொண்டிருந்தது.


இந்த குழந்தையுமா இறந்து விட்டது, என்று கண் கலங்க அந்த பிணவறை ஊழியனிடம் நம்ப முடியாமல் கேட்டேன்.


ஆம்! அதோ! அந்த குழந்தையின் தாய் என்று காட்டினான் பிணவறை ஊழியன்.


அந்த தாய் அழுவதும்,அழுகையை நிறுத்தி விட்டு மொபைல் போனில் யாரிடமோ அடிக்கடி பேசுவதுமாக இருந்தாள்...


ஆயிரமாயிரம் கோவில்களில் கிடைக்காத ஞானத்தை,வாழ்க்கைத் தத்துவத்தை அந்த பிணவறை எனக்கு கற்றுத் தந்தது.


நண்பர்கள் எல்லோரின் முகத்திலும் அமைதி. அதுவரை சலசலவென்று பேசிக் கொண்டு வந்தவர்கள். பேச முடியாத மவுனத்தில் இருந்தார்கள்.




அப்போதுதான் தலை நசுங்கி , சூடாக இரத்தம் வழிய இறந்து போன பிணத்தைக் கொண்டு வந்த ட்ராபிக் போலீஸிடம் காசு(இலஞ்சம்) வாங்கிய பிறகே பிணத்தை இறக்கிய பிணவறை ஊழியர்களின் அஞ்சாத நெஞ்சை, நேர்மையை(?) எண்ணி எண்ணி வியந்தேன்!


அந்த ட்ராபிக் போலீஸ் யாரிடம் இலஞ்சமாக வாங்கினானோ,அந்த இலஞ்சப் பணத்தை?


குடிகாரனுக்கு போன் போட்டு சொல்லி விட்டு அலுவலகம் போகலாம் என்று முடிவெடுத்தோம்.


வைத்திருந்த மொபைல் போனையும் விற்றுக்குக் குடித்து விட்டதாக மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியை யாரோ சொன்னார்கள்.

அந்த குழந்தையை விட, அந்த தாய் ரொம்ப அழகாக இருக்கிறாள் என்றான்,சதீஷ்.


அடிக்க கையை ஓங்கினேன், என் கைகளில் சிக்காமல், என் கைக்கெட்டும் தூரத்தைத் தாண்டி ஓடினான் சிரிந்தபடி, சதீஷ்.


அது ஒரு அரசு பொது மருத்துவமனை. அந்த மருத்துவ மனை கட்டியபோது சுவற்றுக்கு அடிக்கப் பட்ட வர்ணப் பூச்சாக இருக்க வேண்டும். பாதி உதிர்ந்து போய்க் கிடந்தது. ஒரு ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று பெயிண்ட உதிர்ந்துபோய், தொட்டால் பொல பொலவென்று உதிர்ந்து விடும் நிலையில் இருந்தது.


இப்படி எங்கு எங்கு நோக்கினும் அலங்கோலங்கள்...


இதே இந்தியாவில் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற டாட்டா பிர்லாக்கள்,அம்பானி பன்னிகளோடு, கலைஞர் கருணாநிதி குடும்பங்களும் வரிசையில் நிற்கின்றன.


சுவிஸ் வங்கியின் இரகசிய திருட்டுக் கணக்கில் இந்திய பணந்தான் முதலிடம் வகிக்கிறது என்கிறது, பத்திரிக்கைக் குறிப்பொன்று.


இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடு? என்று ஆனந்த தாண்டவமாடியது மனம்.


ஒற்றைத் தனிமனிதன் உண்டு கொழுக்க, ஒட்டு மொத்த நோயாளியாய் கிடக்கிறது, இந்தியா!
அலுவலகத்திற்கு கிளம்பினோம்.






திடீரென்று சதிஷ் கதறி அழ ஆரம்பித்தான்.


கண்களில் நீர்...


குடிக்கிறது எவ்வளவு பெரிய அசிங்கம்ன்னு உணர்ந்துட்டேன் .குடி ஒரு பெண்ணையே கொன்னுடுச்சு. ஒரு பொண்ண கொன்ன அவனெல்லாம் ஒரு மனுசனா? இல்ல குடிச்சுட்டு வந்து நிக்கிற நானெல்லாம் ஒரு மனுஷசனா? குடிகாரனுங்க எல்லாம் கொலைகாரனுங்க... என்று நீட்டி முழங்கிக் கொண்டே போனான்,சதீஷ்.




சதீஷ் எப்ப ஒயின்ஷாப் போனான்? அவன் பேச்சுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றோம்...!

ஆதிசிவம், சென்னை.



இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...

http://beyouths.blogspot.com/2009/03/blog-post_29.html#links

எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA
Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics