மின்வெட்டு
தூக்கம் போனது
மின்சார அமைச்சருக்கு.....( தேர்தல் பயம்...!) _ஆதிசிவம்,சென்னை. பாகம் 8"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை
சிறையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறான்!சுட்டுக் கொல்லப் படுகிறான்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே தருகிறான்.
போர்க் காலங்களில் அந்த ஆங்கிலேயே பேடி நாய்கள், நமது இராணுவ வீரர்களை எதிரிகளின் பீரங்கிக்கு முன்பாகத் தள்ளிவிட்டு பின்னால் பதுங்கிப் பதுங்கிச் சென்று உயிர் தப்பி விடுகின்றான்.
உங்களின் பெற்றோர்கள்,உங்கள் சகோதரர்கள்,மனைவி,மக்களின் அவலக் குரல்கள் உங்களின் காதுகளில் விழவில்லையா?
மரணம் எல்லோருக்கும் நிச்சயம்!அந்த உயிர் உங்கள் நாட்டை காப்பதற்காக போகட்டும்!"
என்று செண்பகராமன் 1915 ஆம் ஆண்டு ஜீலை 31 இல் இந்திய ராணுவ வீரர்களுக்கு உணர்ச்சிமிக்க வேண்டுகோள் விடுத்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதில் வெகு தீவிரமாக இருந்த மன்னர் மகேந்திர பிரதாப் 1915 இல் ஜெர்மனிக்குச் சென்றார்.ஏற்கனவே செண்பகராமனைப் பற்றி கேள்விபட்டிருந்த பிரதாப்,ஹர்தயாள் செண்பகராமன் மூவரும் மன்னர் கெய்சரை சந்தித்தார்கள்.நடக்கின்ற உலகப் போர் ஆங்கிலேய ஆட்சிக்கு முடிவு கட்டும்! என்றார்,கெய்சர்.பல இந்திய தீவிரவாதிகளை இப் பேச்சு உற்சாகப்படுத்தியது.
ஜெர்மனியில் தங்கியிருந்த ராஜா மகேந்திர பிரதாப்பை ஆப்கானிஸ்தான் மன்னரான ஹபிபுல்லா தன் நாட்டிற்கு வரும்படி அழைத்திருந்தார்.புரட்சியாளர்களுடன் நம் செண்பகராமனும் காபூலுக்குப் போனார்.
அங்கு வரலாற்றுப் புகழ்மிக்க பாபர் அரண்மனையில் அனைவரும் தங்க ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தது.சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக அங்கு சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தனர்.
1915 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி புதன்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இந்தியாவின் சுதந்திர சர்க்கார் என்ற குழு (provisional government of india)உதயமானது.
மகேந்திர பிரதாப் பிரஸிடெண்ட் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.பிரதம மந்திரி பதவிக்கு மவுலானா பரக்கத்துல்லா நியமிக்கப்பட்டார்.மவுலானா உபயதுல்லா உள்துறை அமைச்சர்.அடுத்து ரஷ்ய நாட்டிலுள்ள மொஹம்மது அலி,ஜெர்மனியிலுள்ள அல்லாஹ் நவாஸ் இருவருக்கும் முக்கியப் பொறுப்புகள் வழக்கப்பட்டன.செண்பகராமனுக்கு சுதந்திர இந்தியாவின் வெளிநாட்டு மந்திரிப் பதவி வழங்கப்பட்டது.ஷம் ஷேர் சிங்,பஷீர்கான் ஆபனி முக்கர்ஜி,ஷெளக்கத் உஸ்மானி ஆகியோர்களைத் தவிர சில புரட்சி வீரர்களுக்கும் பல முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. அக்கூட்டத்தில் இளவரசர் அமானுல்லாகானும் கலந்து கொண்டாராம்.
காபூலில் இந்தியாவின் சுதந்திர சர்க்கார் அமைத்தைப் பற்றி ரஷ்ய நாட்டிலிருந்து லெனின் தனது வாழ்த்துச் செய்தியை செண்பகராமனுக்கு அனுப்பியிருந்தாராம்.
முதல் உலகப் போரில் ஜெர்மனி வெற்றிபெறும். ஜெர்மானியரின் உதவியுடன் பிரிட்டிஷாரை விரட்டியடித்து காபூலில் தொடங்கிய இந்தியாவின் சுதந்திர சர்க்காரை தில்லிக்கு மாற்ற வேண்டும்.பின்னர் இந்திய வரலாற்றையும் வரைபடங்களையும் மாற்ற வேண்டும் என திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் முதல் உலகப் போரின் நிலையோ வேறுவிதமாக மாறியது!
எல்லா அசிங்ககளுக்கும் ,அவலங்களுக்கும் துணை போகிற அமெரிக்கா போரில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக களம் இறங்கியது.ஜெர்மனிக்குக் கெட்ட காலம் ஆரம்பமாயிற்று.ஜெர்மானியருடைய சரக்குக் கப்பல்கள் கடல் மார்க்கமாகச் செல்வது தடுக்கப் பட்டது.திடீரென ஜெர்மானியரின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் போர்க் கப்பல்கள் எதிரிகள் வசமாயின.
1918 ஆம் ஆண்டில் ஜெர்மானியருக்கு வெற்றியா,தோல்வியா? என்ற பிரச்சினைக்கு தீர்வு தெரியாமலேயே முடிந்து போனது.வார்சேல்ஸ் உடன்படிக்கையின்படி உலகப் போருக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
ஜெர்மனியிலுள்ள இந்தியத் தீவிரவாதிகளை பிரிட்டிஷ் அரசு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாம். ஆனால் அந்த வேண்டுகோளை ஜெர்மனி நிராகரித்ததால்,பிரிட்டிஷாருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.
செண்பகராமன் கட்டிய கனவுக் கோட்டை தன் கண் முன்னாலேயே சரிந்து விழுந்ததால், நொறுங்கி விழுந்தார்!...செண்பகராமன்.
அடிமைத் தனம் எந்த திசையில் இருந்து வந்தாலும்,எந்த வடிவம் எடுத்து வந்தாலும் வாள் ஏந்திச் சாய்ப்பவன் அல்லவா, போராளி?
வெள்ளை நிறத்திற்கு ஒரு சட்டம்! அடிமைக் கறுப்பு நிறத்திற்கு வேறு ஒரு சட்டம்! என்ற அசிங்கங்களைக் கேள்விபட்டு.....
எந்த நாடு அடிமைப் பட்டிருக்கிறதோ அந்த நாடே என் தாய் நாடு என்று 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணமானர்.
தலைநகர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் இருந்த ஜனாதிபதி உட்ரோ வில்சனை சந்தித்து நீக்ரோ மக்களின் அடிமை வாழ்வு குறித்து விவாதித்தார்.
நம் செண்பகராமனின் பேச்சுத் திறமையைக் கண்டு வியந்த வில்சன் நீக்ரோக்கள் மீது அனுதாபம் காட்டினார்.அமெரிக்க நாட்டு மக்களின் எண்ணத்திற்கு நேர்விரோதமாக இருக்கிறது, உங்கள் பேச்சு,அந்த பிரச்சனைகள் மீது என்னால் எந்த நடவடிக்கைகளும் எடுக்க முடியாத தர்மசங்கட்டமான இக்கட்டில் நான் இருக்கிறேன் என்று நாசுக்காக மறுத்தார்.
அதன் பிறகு அமெரிக்காவில் பல இடங்களில் நீக்ரோக்களின் விடுதலைக்காக பகிரங்கமாக
பிரச்சாரங்கள் செய்தார்.அதைக் கேட்ட நீக்ரோக்கள் நம் செண்பகராமனின் தியாக குணத்தைப் பெரிதும் பாராட்டி வரவேற்றனர்.ஆனால் அமெரிக்க வெள்ளையர்களோ திடுக்கிட்டனர்!
அமெரிக்காவிலிருந்த பிரிட்டிஷ் ஒற்றர்கள் செண்பகராமனை கைது செய்ய முயற்சித்தபோது,அவர் மாறுவேடத்தில் வெளிநாடு சென்ற செய்தி தான் பதிலாகக் கிடைத்தது!
எப்படி தப்பிச் சென்றார் என்ற விவரம் யாருக்கும் தெரியவே இல்லை!
காந்தியடிகளைச் சந்திக்க விரும்பி தென்னப்பிரிக்கா வந்தார்.ஆனால் அதற்கு முன்பாகவே காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தனது போராட்டங்களை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.
அங்கு நிலவிய வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, இந்தியர்கள் நீக்ரோக்கள் போராட முன் வர வேண்டும் என்று அங்கும் சுதந்திரக் கனலை கக்கினார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்த தமிழ் அன்பரான விருத்தாசலம் பிள்ளை அவர்கள் செண்பகராமனிடம் அன்றைய தென்னப்பிரிக்காவின் அரசியல் நிலையைப் பற்றிக் கூறுவதுடன், அங்கும் தொடரும் பிரிட்டிஷ் ஒற்றர்கள் பற்றி கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கவும் செய்வார்!
வழக்கம்போல மாறுவேடத்தில் தப்பித்து ஜெர்மனிக்கு திரும்பினார்.
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் அனைவருமே செண்பகராமனின் திறமையையும் துணிச்சலையும் பெரிதும் பாராட்டினார்கள்.அந்த நாட்டின் பிரபல கவுரவ விருதான "வான்" என்ற பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது.அன்று முதல் சாதாரண செண்பகராமன் "வான் செண்பகராமன் பிள்ளை" என்றே அழைக்கப்பட்டார்.
முதல் உலகப் போர் முடிந்ததும் கெய்சர் சக்கரவர்த்தியின் செல்வாக்கு தேயத் தொடங்கியது!கெய்சருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுத்தன.1918 இல் கெய்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டார்.
அந்த எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி "நாஜிக் கட்சி" என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.அவர்களால் வெய்னர் என்ற குடியரசும் தோற்றுவிக்கப் பட்டது!
அதனால் ஜெர்மனியில் இருந்த இந்திய தீவிரவாதிகளுக்கு இருந்த ஆதரவு மொத்தமாக சரிந்தது.....!
முழக்கம் உயரும்... _ஆதிசிவம்,சென்னை.
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 8
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com