"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Friday, January 9, 2009

பல இமெயில்களைத் திறக்க,அனுப்ப...ஒரே ஒரு இமெயில்..!

ஒரே ஒரு இமெயில் கணக்கைத் திறந்து,பல இமெயில்களைத் திறக்க,அனுப்ப...


தூக்கத்தில் நடக்கும் மனிதர்கள் பற்றி நமக்கு தெரியும்.
தூக்கத்தில் எழுந்து,சுய நினைவில்லாமல் இமெயில் அனுப்பிய வெளிநாட்டுப் பெண்ணைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அந்த அளவிற்கு மனிதர்களைப் பாதிக்கிற,மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக இமெயில் மாறி வருகிறது.

நம்மில் பலர் புதுப் புது இமெயில் கணக்குகளை திறந்து வைத்து விட்டு,திறக்காமலேயே விட்டுவிடுவதால் தானாகவே மூடப்படும் இமெயில் கணக்குகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்போம்!

ஒரே ஒரு இமெயிலை திறந்து, எல்லா இமெயில் இன்பாக்ஸ் பெட்டிகளை திறக்க முடியும்.

அதைப் போலவே...

வேறு வேறு இமெயில் பெயர்களிலிருத்து, அதுவும் ஒரே ஒரு இமெயில் கணக்கை மட்டும் திறந்து கொண்டு அனுப்ப முடியும் என்றால்...

நம்புகிற மாதிரியா இருக்கிறது?

ஆம் ! முடியும் என்கிறது, ஜிமெயில்!

அது எப்படி என்று பார்ப்போம்?

http://www.gmail.com/

என்ற இணைய பக்கத்தை திறங்கள்! ஜிமெயிலில் இமெயில் கணக்கு வைத்துக் கொள்ளாதவர்கள் ஒரு புதிய கணக்கு ஒன்றை, தேவையான விவரங்களை நிரப்பி துவக்கிக் கொள்ளுங்கள்!


யூசர் அய்டி,பாஸ்வேர்ட்டை நிரப்பி உங்களுக்கான இமெயில் பக்கத்தைத் திறந்து கொள்ளுங்கள்.


வலது மேல் மூலையில் இருக்கும்


settings
என்ற லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


மாறித் திறக்கும் புதிய பக்கத்தில்

accounts
என்ற லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


add another e mail address
என்ற இணைய லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


சின்ன விண்டோ ஒன்று திறக்கும்.


சேர்க்க வேண்டிய இமெயில் முகவரியை தவறில்லாமல் தட்டச்சு செய்யுங்கள்.


அதே விண்டோவில் இருக்கிற


specify a different reply to address(optional)


என்ற லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


இந்த வசதி மூலம் இமெயிலை பெறுபவர் reply செய்தால்,அதே முகவரிக்கு பதில் போகாமல் வேறு ஒரு இமெயில் முகவரிக்கு பதில் போகும்படி திருப்பி அனுப்புகிற வசதியாகும்.அதெல்லாம் தேவையில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் விட்டு விடுங்கள். இது உங்கள் விருப்பத் தேர்வு அவ்வளவுதான்!





எல்லாம் சரியாக நிரப்பிய பிறகு


next step
என்ற பட்டனை தட்டி விடுங்கள்!




அதே popup விண்டோவில் சேர்க்க விரும்புகிற, இமெயிலுக்கு உறுதி செய்கிற இணைய லிங்கை அனுப்பி வைத்த வெற்றி செய்தி கிடைக்கும்.அந்த விண்டோவை மூடுங்கள்.


சேர்க்க விரும்புகிற இமெயில் இன்பாக்ஸை திறந்து, இமெயில் முகவரியை உறுதிசெய்ய வந்திருக்கும் இமெயிலை திறந்து உறுதி செய்யுங்கள்.


இனி ஜிமெயில் accounts என்ற பகுதியில் சேர்க்கப்பட்ட இமெயில் முகவரி


edit
delete
make default


போன்ற வசதிகளோடு தயாராக இருக்கும்.


இது போல எத்தனை இமெயில் கணக்குகளையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதி சரியாக வேலை செய்கிறது.


make default என்ற வசதியை தேர்ந்தேடுத்து உங்கள் மெயின் இமெயில் முகவரியை தேர்ந்தெடுக்கலாம்.


இந்த வசதி மூலம் இமெயில்களை ஒரே இமெயில் கணக்கிலிருந்து அனுப்ப மட்டுந்தான் முடியும். பெற முடியாது.

ஜிமெயிலில் 5 இமெயில் கணக்குகளை மட்டும் முழுமையாக பராமரிக்க முடியும்.


அதை செய்யல்படுத்த accounts என்ற லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


add another mail account லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


வரும் popup விண்டோவில் முழு இமெயில் முகவரி நிரப்பி
next step பட்டனைத் தட்டினால்


password போன்றவைகளை நிரப்பி


add account லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


தானாகவே அந்த இணைக்கபட்ட இமெயிலின் முழுமுகவரியின் பெயரோடு ஜிமெயில் ஒரு புதிய போல்டரை உருவாக்கியிருக்கும்.


நேராக ஜிமெயிலின் இன்பாக்ஸ் அல்லது அந்த முகவரி உள்ள போல்டருக்கு வரும்படியான வசதியையும் நீங்களே கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


யாகூ,ஜிமெயில் கணக்குகளை இப்படி இணைக்க முடியும். வேறு சில இமெயில்(rediffmail) நிறுவனங்கள் பணம் கட்டினால் மட்டுமே வேறு இமெயில் கணக்குகளோடு இணைக்கும் வசதியைத் தருகின்றது.


இப்படி இணைக்கப்படும் 5 இமெயில் கணக்குகளை ஜிமெயிலின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.அந்த 5 இமெயில்களின் எல்லா இமெயில்களையும் இப்படிப் படிக்க, பதில் அனுப்ப முடியும்.


எல்லாம் முடிந்த பிறகு composemail லிங்கின் மேல் கிளிக் செய்து பாருங்கள்.




ஒரு அதிசயம் நடந்து இருக்கும் பாருங்கள்!


from என்ற இடத்தில் drop down box என்னும் பெட்டியில் நீங்கள் சேர்த்த எல்லா இமெயில் முகவரிகளும் பட்டியல் இடப்பட்டிருக்கும்.




தேவையான இமெயில் முகவரிகளை இனி தேர்ந்தெடுத்து, அனுப்புங்கள்...!


When I receive a message sent to one of my addresses:
(மறக்காமல் reply செய்தால்)


Reply from the same address the message was sent to
(அந்த, அந்த இமெயில் முகவரிகளுக்கு மட்டுமே பதில் போக வேண்டும்)




அல்லது



Always reply from my default address
(உங்கள் மெயின் இமெயில் முகவரிக்கு மட்டும் பதில் வர வேண்டும்)




(இரண்டில் ஒற்றை தேர்ந்தெடுங்கள்)

 

Share/Save/Bookmark

2 comments:

  1. பயனுள்ள தகவல்களை அளித்து வரும் உங்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics